Post by kgopalan90 on Aug 15, 2018 17:29:56 GMT 5.5
ஜப ஆரம்பத்தில் பூதசுத்தி , காயத்ரி ப்ராண ப்ரதிஷ்டை, ந்யாஸம், முத்ரை, காயத்ரி கவசம், காயத்ரி ஹ்ருதயம், காயத்ரி ஸ்தோத்ரம், காயத்ரி ஷாபவிமோசனம், காயத்ரி ஸஹஸ்ர நாமம்.
முதலியவைகளை நித்ய காயத்ரி ஜபத்தில் செய்ய வேண்டும். காயத்ரி ஜபம் 27-08-2018 இன்றாவது இவைகளை செய்யவும். காயத்ரி ஜபம் செய்ய ஆரம்பிக்குமுன்போ அல்லது பின்போ செய்யவும்..
பூதஸுத்தி: குருப்யோ நம: என்று கூறி அஞ்சலி செய்து கணபதயே நம: ; ஸரஸ்வத்யை நம: என்று கூறி வலது தோளிலும் துர்க்காயை நம; க்ஷேத்ர பாலாயை நம: என்று இடது தோளிலும் அஞ்சலியை வைத்து பூதஸுத்தி செய்ய வேண்டும்.
தர்மமே கிழங்கு, க்ஞானமே தண்டு, வைராக்யமே மொட்டு.இத்தகைய ஹ்ருதய தரமரை மொக்கை ப்ரணவத்தால் மலர்த்துவதாக த்யானம் செய்து, இடையிலுள்ள சைதன்ய வடிவான ஜீவனை உரக்க ப்ரணவத்தை கூறி
எழுப்பி ஸுஷும்னா நாடி வழியாக த்வாத சாந்த மென்னும் சிரஸிலுள்ள ஸஹஸ்ர தள கமலத்திலுள்ள பரமாத்மாவுடன் – ஹம்ஸ: -என்ற மந்திரத்தை கூறி ஒன்றாக சேர்க்க வேண்டும்.
. பிறகு தன் உடலிலுள்ள பாபத்தை புருஷனாக கருதி அதை உலர்த்தி கொளுத்தி நனைக்க வேண்டும்.
அந்த பாப புருஷனுக்கு ப்ரஹ்மஹத்தியே தலை. ஸ்வர்ணத்தை திருடுவதே இரு புஜங்கள்.. கள் குடித்தலே ஹ்ருதயம். குரு மனைவியை புணர்வதே இடுப்பு. இந்த நாண்கு பாவிகளுடன் சேருவது என்பதே இரு கால்கள்.
ப்ரும்ம ஹத்யா ஸம பாதகங்கள் மற்ற உருவங்கள். உப பாதகங்கள் ரோமங்கள். தாடி. மீசை. கத்தி கேடயம், முதலியவைகளை தரித்திருக்கும் பாப புருஷன் தனது வயிற்றிலிருப்பதாக நினைத்து
இதன் பிறகு காயத்ரியை ஆவாஹனம் செய்து மாத்ருகா நியாஸம் செய்ய வேண்டும்.பிறகு 24 முத்திரைகளை காட்டி , த்யானம் செய்ய வேண்டும்.
பின்னர் காயத்ரி அக்ஷர ந்யாஸம், ,பத ந்யாசம், பாத ந்யாஸம், செய்யும் போது ஒவ்வோரு அக்ஷரதிற்குள்ள ரிஷி, சந்தஸ், தேவதை முதலியவைகளை மனதால் நினைக்க வேண்டும்.
முத்ரைகளை காட்டிய பின் காயத்ரி சாப விமோசனம் என்ற மந்திரங்கள் கூற வேண்டும்.
1.ரிஷி: ஒரு மந்திரத்தை தனது தவ வலிமையால் கண்டு
அறிந்தவர் மற்றும் அதன் பயனை அறிந்தவர்., அனுபவித்தவர் ரிஷி என படுவார். ரிஷியின் ஸ்தானம் சிரஸ். ஆதலால் ரிஷி என்று கூறும் போது தலையில் கை வைக்க வேண்டும்.
2. சந்தஸ்: என்பது அந்த மந்திரத்தின் அமைப்பு ஆகும். அது உச்சரிக்கப்படும் வாய் அதன் ஸ்தானம். எச்சிலாக கூடாது என்று மேல் உதட்டில் அல்லது மூக்கின் பேரில் சந்தஸ் என்று கூறி கை வைக்க வேண்டும்.
3. தேவதை: அந்த மந்திரத்தினால் கூறப்படும் தேவதை நமது ஹ்ருதய கமலத்தில் இருப்பதால் தேவதை என்று கூறி மார்பில் கை வைக்கிறோம்.
ஒரே காயத்ரி மந்திரத்திற்கு ப்ராணாயாமத்தில் வரும் போது காயத்ரி சந்தஸ் என்றும் , காயத்ரி ஜபத்தில் ந்ருசித் காயத்ரி சந்தஸ் என்றும் , பொருளிலும் சிறிது மாறுதல் ஏற்படுகிறது.
காயத்ரி ஜப கர ந்யாஸம்.:
ஓம் தத்ஸவிது: ப்ருஹ்மாத்மனே அங்குஷ்டாப்யாம் நம:
வரேண்யம் விஷ்ணுவாத்மனே தர்ஜனீப்யாம் நம:
பர்கோ தேவஸ்ய ருத்ராத்மனே மத்யமாப்யாம் நம:
தீமஹி ஸத்யாத்மனே அநாமிகாப்யாம் நம;
தியோயோன: க்ஞானாத்மனே கனிஷ்டிகாப்யாம் நம;
ப்ரசோதயாத் ஸர்வாத்மனே கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம;
அங்க ந்யாஸம்;
ஓம் தத்ஸவிது: ப்ருஹ்மாத்மனே ஹ்ருதயாயை நம;
வரேண்யம் விஷ்ண்வாத்மனே சிரஸே ஸ்வாஹா
பர்கோ தேவஸ்ய ருத்ராத்மனே சிகாயை வஷட்
தீமஹி ஸத்யாத்மனே கவசாய ஹூம்
தியோ யோந; க்ஞானாத்மனே நேத்ர த்ரயாய வெளஷட்
ப்ரசோதயாத் சர்வாத்மனே அஸ்த்ராய பட்
பூர்புவஸுவரோம் இதி திக் பந்த:: என்று சொல்லி நம்மை சுற்றி ப்ரதக்ஷிணமாக கட்டை விரல் நடு விரல்களால் சப்தம் செய்ய வேண்டும்.
போதாயன மஹரிஷி கூறுகிறார்: ஸந்த்யை என்பது உலகை படைத்தது. மாயையை கடந்தது. நிஷ்கலமானது. ஈஸ்வரியானது. கேவல சக்தியானது. மும்மூர்த்திகளிடமிருந்து உண்டானது.
அந்த ஒரே பராசக்தியானது மூன்று வேளைகளிலும் மூன்று தனி ரூபத்துடன் விளங்குகிறது. தனி பெயர், தனி வர்ணம், தனி வாஹனம் இவைகளால் வேறுபட்டது போலிருக்கிறது.
அந்தந்த காலத்தில் அந்தந்த ரூபிணியாக த்யானம் செய்து ஒவ்வொரு வேளையிலும் ஏக ரூபமாய் இருப்பதாகவும் த்யானம் செய்ய வேண்டும்.
இதற்குத்தான் ஸந்த்யை என்று பெயர்.
காலை ஜபத்தில் ஸூர்ய மண்டலதினிடையே சிவந்த வர்ண முள்ளவளாய், குமாரியாய் ரஜோ குணம் உள்ளவளாய் ஹம்ஸ வாஹனத்தில் ப்ருஹ்ம ஸ்வரூபிணீயாய் ( ஸரஸ்வதி) ரிக் வேத ரூபிணியாய் அபய முத்ரை, கமண்டலு , தாமரைபூ, ஜபமாலை, ஸ்ருவம் இவைகளை தரித்து இருப்பவளாய் காயத்ரியாக த்யானம் செய்ய வேண்டும்.
மத்யானத்தில் ஸுர்ய மண்டலத்தில் வெண்மை நிறம், தமோ குணம், கட்டில்கால், அபய முத்ரை, சூலம், ருத்ராக்ஷ மாலை, இந்த ஆயுதங்களை தரித்து (உமை) யெளவன முள்ளவளாகவும் , வ்ருஷப வாஹனத்தி லிருப்பவளாகவும் மூண்று கண் உள்ளவளாகவும் , யஜுர் வேதமாகவும், ருத்ர ரூபிணீயாகவும் ஸாவித்ரீ என்ற பெயரில் த்யானம் செய்ய வேண்டும்.
ஸாயங்காலத்தில் ஸூர்யமண்டலத்தில் ஸரஸ்வதி என்ற பெயர். கறுத்த வர்ணம், கிழ சரீரம், கருட வாஹணம், சங்கு, சக்ர, அபய, துலஸீ மாலை, க்ஞான ஸ்வரூபம்,ஸத்வ குணம், சாம வேதம், இவைகள் உள்ள விஷ்ணு (லக்ஷ்மி) ஸ்வரூபமாய் த்யானம் செய்ய வேண்டும்.
இந்த மூன்று காலங்களில் கூறப்பட்டவை ஸ்தூலம். இது ஸூக்ஷ்மம் தனிதனியாக இருப்பது வ்யஷ்டி; எல்லாம் சேர்ந்த போது ஸமஷ்டி எனப்படும்..
ஸமஷ்டி ரூப காயத்ரி த்யானம்:
முத்து. பவழம், ஸ்வணம், கருப்பு, வெளுப்பு, ஆகிய வர்ணங்களுடைய ஐந்து முகமுள்ளவளும், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்கள் உடையவளும், சந்த்ர கலையை தலையில் அணிந்தவளும், ,
தத்வார்த்தம் உள்ளதான எழுத்து ரூபமானவளும்,வரதம், அபயம், அங்குசம், பாசம், வெளுப்பு கபாலம், கதை, சங்கம், சக்ரம், இரு தாமரை இவைகளை கைகளில் ஏந்தியவளுமான காயத்ரியை பஜிக்கிறேன்.
காயத்ரியின் பொருள் பரமாத்மாவே. இது எங்கும் உளது. சத்சித் ஆனந்த ரூபமானது .உருவும் பெயரும் இல்லாதது. வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாதது. சிற்றறிவால் அறிய முடியாதது. சிறிய மனதால் த்யானம் செய்ய முடியாதது.
ஆதலால். முதலில் ஸூர்யனையும் ஸூர்ய மண்டலத்தில் காயத்ரி, ஸாவித்ரி, ஸரஸ்வதி ஸமஷ்டி காயத்ரி என்று பல வாறாக த்யானம் செய்யும் படி கூறபட்டது.
ஒன்றயே நித்யம் மூன்று வேளையும் த்யானம் செய்தால் அது மனதில் தங்கி விடும். ஒன்று ஒன்றாக த்யானம் செய்து பழகினால் , ஒன்றில் நிலைக்காமல் த்யான சக்தி வ்ருத்தியாகும்.
நாள் ஆக ஆக இந்த உருவங்களையும் விட்டு விட்டால் மனம் ஒன்றையும் நினையாமல் அசைவற்று இருக்கும்.. மநோ வ்ருத்திகள் ஒழிந்தால் தான் க்ஞானம் நிலைக்கும். முக்தி உண்டாகும். ஆதலால் ஸந்தியாவந்தன கர்மா படிபடியாக மோக்ஷ ஸாதனமாகும்.
ஸந்த்யை என்பது ப்ருஹ்மா, விஷ்ணு, ருத்ரர்களை விட, ஸரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதியை விட மேலான சிறந்த துரிய சக்தி. நமது சித்த பரிபாகத்திற்கு ஏற்றப்படி இவ்விதம் ஸூர்ய மண்டலத்தில் மூன்று மூர்த்திகளாக த்யானம் செய்யும் படி கூறப்பட்டது.
பஞ்ச பூஜை:
லம் ப்ருத்வ்யாத்மனே கந்தாம் தாரயாமி.
அம். ஆகாசாத்மனே புஷ்பாணி பூஜயாமி.
யம் வாய்வாத்மனே தூபம் ஆக்ராபயாமி.
ரம் வஹ்ன்யாத்மனே தீபம் தர்சயாமி.
வம் அம்ருதாத்மனே அம்ருதம் நிவேதயாமி.
ஸம் ஸர்வாத்மனே ஸர்வோபசாரான் ஸமர்பயாமி.