Post by kgopalan90 on Aug 15, 2018 17:25:25 GMT 5.5
காயத்திரிஜப ஸங்கல்பம்.
காலையில்எழுந்து ஸ்நானம் காலை ஸந்தியாவந்தனம்,காயத்திரிஜபம் ஸமிதாதானம் முடித்து விட்டு இதற்காக ஆசமனம் செய்துவிட்டு வலதுகை மோதிர விரலில் தர்பை பவித்ரம் தரித்து ;காலின்கீழ் இரு
தர்பைகளை போட்டுக்கொண்டு பவித்திர விரலில் இரு தர்பங்களை இடுக்கிகொண்டு தொடங்கவும்.
சுக்லாம்பரதரம்விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வவிக்னோப சாந்தயே .நெற்றியில்5தடவைகுட்டிக்கொள்ளவும்
.ஓம்பூ:ஓம்புவ:ஓகும்ஸுவ:ஒம்மஹ:ஒம்ஜன:ஓம்தப:ஓகும்சத்யம்.ஓம்தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோன:ப்ரசோதயாத்ஓம்ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோபாத்த ஸமஸ்த துரிதயக் ஷயத்துவாரஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபேசோபனே முஹுர்த்தே ஆத்ய ப்ர்ஹ்மனஹத்விதீய பரார்தே ஸ்வேத வராஹகல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதீ தமே கலியுகே ப்ரதமே பாதேஜம்பூத்வீபே
பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்சுவே சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே விளம்பி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ம மாசே க்ருஷ்ண பக்ஷே
ப்ரதமாயாம்சுபதிதெள இன்து வாஸர சதபிஷங் நக்ஷத்திர யுக்தாயாம் ஸுகர்ம நாம யோக கெளல கரண ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் ப்ரதமாயாம் சுபதிதெள மித்யாதீத ப்ராயஸ்சித்தார்த்தம் தோஷவஸ்து அபதனீய
ப்ராயஸ்சித்தார்த்தம் ஸம்வத்ஸர அகரண ப்ராயஸ் சித்தார்த்தம் அஷ்டோத்திர ஸஹஸ்ர ஸங்கிய்யா காயத்திரி மஹா மந்திர ஜபம்கரிஷ்யே என்று சொல்லி வலது கையில் இடுக்கி இருக்கு ம்தர்பை புல்லை வடக்கில் போடவும்
.
ஜலத்தைகையால் தொடவும்.
பிறகு ப்ரணவஸ்ய ரிஷிர் ப்ரஹ்ம தேவிகாயத்ரி சந்தஹ பரமாத்மா தேவதா
பூராதிஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரிப்ருகு குத்ஸ வஸிஷ்ட கெளதம காசியப ஆங்கீரஸ ரிஷயஹ
காயத்ரிஉஷ்னிக் அநுஷ்டுப்,ப்ருஹதி பங்தி த்ருஷ்டுப் ஜகத்யஹ சந்தாம்ஸி. அக்னி வாயு அர்க வாகீஸ வருண இந்திர விஸ்வே தேவாஹா தேவதாஹா
ப்ராணாயாமம்பத்து தடவை செய்யவும். ஓம்பூஹு;ஓம்புவஹ ஓகும் ஸுவஹ;ஓம்மஹ;ஓம்ஜன;ஓம்தபஹ;ஓகும்ஸத்யம் ஓம் தத்ஸ விதுர்வரேண்யம்;பர்கோதேவஸ்ய தீ மஹி
தியோ யோனஹ்ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதிரஸோஅம்ருதம் ப்ருஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்
ஆயாதுஇத்யனுவாகஸ்ய வாமதேவ ரிஷி;அநுஷ்டுப்சந்த;காயத்ரிதேவதா.
ஆயாதுவரதா தேவி அக்ஷரம் ப்ருஹ்மஸம்மிதம் காயத்ரிம் சந்தஸாம்மாதா இதம் ப்ருஹ்ம ஜுஷஸ்வனஹ.
ஓஜோசிஸஹோஸி பலமஸீ ப்ராஜோசி தேவாநாம்தாம நாமாஸி விசுவமஸி விஸ்வாயுஹுஸர்வமஸி ஸர்வாயுஹு அபிபூரோம்காயத்ரீம் ஆவாஹயாமி ஸாவித்ரீம்ஆவாஹயாமி ஸரஸ்வதீம் ஆவாஹயாமி
ஸாவித்ரியாரிஷி;விசுவாமித்ர;நிசிரித்காயத்ரி சந்த;ஸவிதா தேவதா
காயத்ரிமந்திரம்
1.ஓம் 2.பூர்புவஸ்ஸுவஹ 3.தத்ஸவிதுர்வரேன்யம் 4.பர்கோதேவஸ்ய தீ மஹி 5தியோயோனஹப்ரசோதயாத் என ஐந்தாஹ பிறித்து சொல்ல வேண்டும்.
1008எண்ணிக்கை முடிந்தவுடன் ஒரு ப்ராணாயாமம் செய்து காயத்ரி உபஸ்தானம்
கரிஷ்யேஎன்று சொல்லி உத்தமே சிகரேதேவி பூம்யாம் பர்வத மூர்தனி ப்ராஹ்மனேப்யோ ஹ்யனுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம் என்றுஉபஸ்தானம் செய்யவும். நமஸ்காரம்செய்யவும்.
பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம்செய்யவும்.
காயத்ரி கவசம் காயத்ரி ஹிருதயம் காயத்ரி ஸ்தோத்ரம் காயத்ரி சாப விமோசன ஸ்தோத்ரம் சொல்லவும்