Post by kgopalan90 on Apr 26, 2018 21:06:37 GMT 5.5
29-04-2018.
ஈஸான பலி:- சித்திரை மாத பெளர்ணமி யன்று செய்வதால் சைத்ரீ என்றும் அழைப்பர். மாடுகளின் வியாதியை நீக்குவதால் சூலகவம் என்றும் பரமேஸ்வரனுக்கு ப்ரீதி அளிப்பதால் ஈஸான பலி என்றும் அழைப்பர்.
கால் நடைகள் வியாதி இல்லாமல் இருக்கும். விருத்தி யாகும். அதிக பயன் தரும்.
மீடுஷன் என்றால் அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்விப்பவன் என்று அர்த்தம். ஆதலால் இங்கு பரமேஸ்வரனை மீடுஷன் என்ற பெயரிலும், பார்வதியை மீடுஷி என்ற பெயரிலும் ஸுப்ரமணிய ஸ்வாமியை இங்கு ஜயந்தன் என்ற பெயரிலும் இவர்களுக்கு நடுவே வைத்து 16 உபசார பூஜை செய்ய வேண்டும்.
ஔபாஸனம் செய்து விட்டு அந்த அக்னியில் ஹவிஸ் தயாரிக்க வேண்டும்.
பைரவர் எனும் சேத்திர பாலகருக்கும் பலி உண்டு. இதற்கு ஹவிஸ் லெளகீகா அக்னியிலும் செய்து கொள்ளலாம்.ஸ்ரீருத்ர ஜபம் உண்டு. ஈஸான பலி ஶேஷத்தால் ப்ராஹ்மண போஜனம். தாயாதிகளுக்கு சேத்திர பாலகரின் ஶேஷம் சாப்பிட வேண்டும்.
பூஜை, ஹோமம், பலி மூன்றும் செய்து பகவானை ப்ரீதி செய்விக்க வேண்டும்.
மாடுகள் மேய்ந்து விட்டு சாயரக்சை வீட்டிற்கு திரும்பும் போது ஹோம புகை மாடுகள் மீது பட வேண்டும். ஆதலால் தெருவில் அல்லது பசு தொழுவத்தில் அல்லது கோவிலில் செய்ய வேண்டும். வீட்டில் செய்து ப்ரயோஜனமில்லை.
பொரச இலை அல்லது அரச இலை 60 இலைகள் பெரிதாக பார்த்து பறித்து ஒவ்வொன்றையும் தனி தனியாக அலம்பி துடைத்து காய வைத்து கொள்ள வேண்டும்.
இரண்டு ஹவிஸ் உள்ள பாத்திரங்கள்; மற்றும் மூன்று பாத்திரங்கள், பூஜை, ஹோமத்திற்கு வரட்டி, சுள்ளி, நெய், நெய் வைக்க பாத்திரம், ஹோம கரண்டி, ஹோம குண்டம், அல்லது செங்கல். மணல், சீலிங்க் பேன் பெட்டி அளவிற்கு
மூன்று அட்டை பெட்டிகள், தொடுத்த புஷ்பம், உதிரி புஷ்பம், கற்பூரம்,ஊதுபத்தி, தாம்பூலம், பழ வகைகள், மஞ்சள் பொடி, குங்குமம், சந்தனம், கற்பூர கரண்டி, டிரே;
ஒரு லிட்டர் தண்ணீர் பிடிக்குமளவிற்கு 4 பித்தளை சொம்புகள்,நூல் கண்டு. பச்சரிசி 1கிலோ, கோலம் போட அரிசி மாவு. பெரிய பாக்கு மட்டை-1; பாக்கு மட்டையில் ஓட்டை போட ஊசி,சனல் கயிறு. தேங்காய்-4; கலச வஸ்த்ரம்-3.
ஏலக்காய், பச்சை கற்பூரம், சிறிதளவு பொடித்து கலசத்தில் சேர்க்க .
எடுத்து கொண்டு வீட்டிலிருந்து புறப்பட்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு ஸங்கல்பம்,புண்யாக வசனம், கிரஹ ப்ரீதி, விநாயகர் பூஜை, 16 உபசார பூஜை சிவன், பார்வதி, முருகனுக்கும் செய்து பலி போட்டு, ஹோமம் செய்து ஸ்வசிஷ்டக்ருத், ஜயாதி ஹோமம் செய்து
ஒரு பெரிய பாக்குமட்டையை தண்ணீரில் ஊறவைத்து 4 துவாரங்கள் செய்து 4 துவாரங்களிலும் சணல் கயிறு கட்டி உறி மாதிரி செய்து அதில் ஹவிஸ் வைத்து மர கிளையில் தொங்கவிட்டு ருத்திரம் 11 அனுவாகம் சொல்ல வேண்டும்.
ஹோம அக்னிக்கு மேற்கு திசையில் மூன்று அட்டைபெட்டி வைத்து அதில் தென்திசையில் மஹா தேவனையும், நடுவில் முருகனும், வடக்கே பார்வதியும் மூன்று கலசங்கள் வைத்து, அதில் தண்ணீர் விட்டு, வாசனை பொருட்கள் போட்டு
தேங்காய் வைத்து, கலச வஸ்த்ரம் சாற்றி, சந்த்னம் குங்குமம் இட்டு, மாலை போட்டு அரிசியின் மேல் வைக்க வேண்டும்.கூர்ச்சம் வைக்க வேண்டும். சேத்திர பாலகருக்கு கூர்ச்சத்தில் ஆவாஹனம். 16 உபசார பூஜை, பலி, ஹோமம் உண்டு.
பிறகு வீட்டிற்கு சென்று ப்ராஹ்மண போஜனம். தக்சனை. ஆசீர்வாதம் இத்யாதி.