Post by radha on Dec 27, 2017 5:47:27 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
Facebook Google+ Mail Text Size Print
ஏகாதசிகளில் விரதம் இருந்து, இறைவனை வழிபடுபவர்கள் பிறவி துயர் நீங்கி, வைகுண்ட பதவியை அடைவார்கள் என்பது நம்பிக்கை.
டிசம்பர் 26, 2017, 01:44 PM
ஒரு வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்கள் மட்டும் 25 ஏகாதசிகள் வர வாய்ப்பு உண்டு. வருடம் முழுவதும் வரும் ஏகாதசிகளில் விரதம் இருந்து, இறைவனை வழிபடுபவர்கள் பிறவி துயர் நீங்கி, வைகுண்ட பதவியை அடைவார்கள் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம்.
சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி ‘பாபமோஹினி’. வளர்பிறை ஏகாதசி ‘காமதா'. இந்த ஏகாதசி தினங்களில் விரதம் இருந்தால் நினைத்தவை நினைத்தபடி நடைபெறும்.
வைகாசி மாத தேய்பிறை ஏகாதசி ‘வருதினி'. வளர்பிறை ஏகாதசி ‘மோகினி'. இந்த மாதத்தில் விரதம் இருப்பது, இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசித்த பலனைத் தரும்.
ஆனி மாத தேய்பிறை ஏகாதசி ‘அபரா'. வளர்பிறை ஏகாதசி ‘நிர்ஜலா'. இந்த ஏகாதசிகளில் விரதம் இருந்து வழிபடுவோர், இறைவனின் திருப்பதம் பெறுவர்.
ஆடி மாத தேய்பிறை ஏகாதசி ‘யோகினி'. வளர்பிறை ஏகாதசி ‘சயன’. இந்த இரு ஏகாதசிகளில் விரதம் இருந்தால், பலருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.
ஆவணி மாத தேய்பிறை ஏகாதசியான ‘காமிகை'; வளர்பிறை ஏகாதசியான ‘புத்திரதா' ஆகியவற்றில் விரதம் இருந்தால் நன்மக்கட்பேறு கிட்டும்.
புரட்டாசி மாத தேய்பிறை ஏகாதசி ‘அஜா’. வளர்பிறை ஏகாதசி ‘பத்மநாபா’. இந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பின், வறுமை நீங்கும்.
ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி ‘இந்திரா’. வளர்பிறை ஏகாதசி ‘பாபங்குசா’. இந்த நாட்களில் விரதம் இருந்தால், முன்னோர்கள் நற்கதி அடைவர். கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.
கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி ‘ரமா’. வளர்பிறை ஏகாதசி ‘ப்ரபோதினி’. இந்த நாட்களில் விரதம் இருப்பின் மிக உயர்ந்த நன்மைகள் நடைபெறும்.
மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி ‘உற்பத்தி’. வளர்பிறை ஏகாதசி ‘மோட்ச’ (வைகுண்ட) ஏகாதசி. இந்த இரு விரதங்களையும் மேற்கொண்டால் வைகுண்ட பதவி கிடைக்கும்.
தை மாத தேய்பிறை ஏகாதசி ‘ஸபலா’. வளர்பிறை ஏகாதசி ‘புத்ரதா’ ஏகாதசி. இந்த நாட்களில் விரதம் இருந்தால் குழந்தைப்ேபறு கிடைக்கும்.
மாசி மாத தேய்பிறை ஏகாதசி ‘ஷட்திலா’. வளர்பிறை ஏகாதசி ‘ஜயா’. இந்த இரு நாட்கள் விரதம் இருப்பின் சாப விமோசனம் நீங்கும்.
பங்குனி மாத தேய்பிறை ஏகாதசி ‘விஜயா’. வளர்பிறை ஏகாதசி ‘ஆமலதி’. இந்த நாட்கள் விரதம் இருந்தால் கோ தானம் செய்த பலன் கிடைக்கும்.
சில வருடங்களில் மட்டும் வரும் ‘கமலா’ ஏகாதசியை கடைப்பிடித்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM