Post by radha on Nov 21, 2017 11:06:41 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
ஆன்மிகம் கார்த்திகை மாத சிறப்பு
Facebook Google+ Mail Text Size Print
இறை வழிபாட்டிற்கு மிகச் சிறந்த மாதம் கார்த்திகை மாதம் என்று சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் அதிக அளவில் திருமணம் நடைபெறுவதால், ‘திருமண மாதம்’ என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
நவம்பர் 21, 2017, 07:00 AM
இறை வழிபாட்டிற்கு மிகச் சிறந்த மாதம் கார்த்திகை மாதம் என்று சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் அதிக அளவில் திருமணம் நடைபெறுவதால், ‘திருமண மாதம்’ என்றும் சிறப்பிக்கப்படுகிறது. அவ்வளவு சுப முகூர்த்தங்கள் நிறைந்த மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம், சோமாவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், கார்த்திகை விரதம், விநாயகர் சஷ்டி விரதம், கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி, பிரமோதினி ஏகாதசி, ரமா ஏகாதசி என ஏராளமான வழிபாடுகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
விநாயகர் சஷ்டி விரதம்
கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறை சஷ்டி வரை, 21 நாட்கள் விநாயகரை நினைத்து மேற்கொள்ளப்படும் விரதம் இது. இந்த விரதத்தின்போது, 21 இழைகளால் ஆன நோன்பு கயிற்றினை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்வார்கள். முதல் 20 நாளும் ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு், கடைசி நாள் முழுமையாக உபவாசம் இருக்க வேண்டும். இந்த விரதத்தால் சிறந்த வாழ்க்கைத் துணை அமையும். புத்திசாலியான புத்திரர்கள் கிடைப்பார்கள். எடுத்த காரியங்கள் வெற்றியாகும்.
துளசி வழிபாடு
கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி துளசி வழிபாட்டிற்கு சிறந்த தினம். இந்த நாளில்தான் திருமால், துளசியை மணந்து கொண்டார். எனவே கார்த்திகை மாதம் முழுவதும் திருமாலை, துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். ஒவ்வொரு துளசி தளத்துக்கும், ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். மேலும் இந்தநாளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக்கரையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் வந்து சேரும்.
உமாமகேஸ்வர விரதம்
பிருகு முனிவர் சிவனை மட்டுமே வழிபடுபவர். அவர் அம்பாளை வழிபடாததால், இறைவனின் உடலில் பாதியைப் பெற்று அவரோடு இன்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பார்வதிதேவி கடுமையான விரதம் இருந்தார். அதன்பயனாக, அவர் கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் இறைவனின் இடப்பாகத்தைப் பெற்றார். பார்வதி தேவி இருந்த அந்த விரதம் ‘உமாமகேஸ்வர விரதம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சிவ- சக்தியை நினைத்து விரதம் இருந்தால் குடும்ப ஒற்றுமை மேம்படும். கணவன்-மனைவி கருத்து வேறுபாடு மறையும்.
கார்த்திகை விரதம்
இது முருகப்பெருமானை நினைத்து, கார்த் திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத் தில் கடைப்பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைப்பிடிக்க வேண்டிய இந்த விரத முறையில், பகல் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்ய வேண்டும். இந்த விரதத் தால் வாழ்வில் பதினாறு வகையான செல்வங் களையும் பெறலாம்.
தீபத் திருநாள்
கார்த்திகை மாத பவுர்ணமியோடு கூடிய கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த திருக்கார்த்திகை திருவிழா கொண் டாடப் படுகிறது. இதனை தீபத் திருநாள் என்றும் அழைப்பர். சிவபெருமான் ஜோதிப் பிழம்பாக திருமால், நான்முகன் உள்ளிட்ட உலக உயிர்களுக்கு காட்சி அருளிய திருநாள் இதுவாகும். முருகப்பெருமானை வளர்த்த, கார்த்திகைப் பெண்களின் நினைவாகவும் இந்தத் திருநாள் வழிபாட்டுக்குரியதாகிறது. இந்த நாளில் இல்லங்களில் தீபம் ஏற்றினால் ஒளிமய வாழ்வு அமையும்.
ஞாயிறு விரதம்
கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கி தொடர்ந்து, 12 ஞாயிற்றுக்கிழமைகள் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. நவக்கிரகங்கள் இந்த விரதத்தை மேற் கொண்டே பல வரங்களைப் பெற்றனர். எனவே இந்த விரதத்தை மேற்கொண்டால், நவக்கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள குப்தகங்கை தீர்த்தத்தில், கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை நீராடுவது சிறப்புக்குரியது. அன்று அதிகாலையில் சிவனும் சக்தியும், குப்தகங்கை யின் கிழக்கு கரையில் வீற்றிருந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், பாவங்கள் நீங்கும்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM