|
Vibhuti
Jul 5, 2012 17:47:20 GMT 5.5
Post by kramans on Jul 5, 2012 17:47:20 GMT 5.5
விபூதி அணிவதால் ஏற்படும் நன்மை ! நெற்றியில் விபூதி தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள். Sri Kanchi Maha Periva Thiruvadigal Charanam
|
|
|
Vibhuti
Jul 5, 2012 18:42:15 GMT 5.5
Post by hemalathak on Jul 5, 2012 18:42:15 GMT 5.5
Shree maha periava thiruvadigal charanam.
Basma (viboothi) rudrakshaari alankritha shareeram Vilva maalaadhi alankritha shirasam maanasa bajare gurunatham.
How wonderful to see and to read the post with full of informations to know and follow. Thank you for this post.
|
|