Post by kgopalan90 on Sept 2, 2017 22:49:22 GMT 5.5
மஹாலய சிராத்தம் விரிவாக செய்ய-------ஹிரண்ய ரூபம்.
மஹாளய பக்ஷத்தில் மஹாளயம் செய்வதற்கு ஆறு ப்ராஹ்மணர்கள் அழைக்க பட வேண்டும். இதில்
(1) ஒருவர் மஹா விஷ்ணு; கிழக்கு முகமாக அமர வேண்டும்
(2) ஒருவர் துரிருசி விஸ்வேதேவர். கிழக்கு முகமாக அமர வேண்டும்.
(3)ஒருவர் தந்தை வழி ஆண் மூத்தோர்கள் .வடக்கு முகமாக அமர வேண்டும்.
(4) ஒருவர் தந்தை வழி பெண் மூத்தோர்கள் வடக்கு முகமாக அமர வேண்டும்
.(5) ஒருவர் தாய் வழி ஆண் மற்றும் பெண் மூத்தோர்கள். வடக்கு முகமாக அமர வேண்டும்
(6)ஒருவர் காருணிக பித்ரு வர்க்கம். வடக்கு முகமாக அமர வேண்டும்.
தர்பணத்திற்காக தர்பை. கட்டை புல்; பவித்ரம், கூர்ச்சம், கறுப்பு எள்ளு; ,வெற்றிலை பாக்கு; கைப்புடி பச்சரிசி; துளசி, அறைத்த சந்தனம். தக்ஷிணை.
வீட்டிலேயே இந்த ஆறு பேருக்கும் சாப்பாடு ( சமாராதனை சமையல்) போட வேண்டும்.
இல்லையெனில் இந்த அறுவர்க்கும் தலைக்கு 250 கிராம் பச்சரிசி
பாசி பருப்பு 100 கிராம்; ஒரு வாழைக்காய் அல்லது வேறு ஒரு காய்; தக்ஷிணை; மஹாளயம் செய்து வைக்கும் சாஸ்திரிகளுக்கும் தக்ஷிணை, அரிசி, காய் தயார் செய்து வைத்து கொள்ளவும்.
வெள்ளி , செம்பு அல்லது பித்தளையில் தாம்பாளம்,( மூன்று லிட்டர் தண்ணீர் பிடிக்க கூடியது: ) பஞ்ச பாத்ர உத்திரிணீ; தண்ணீருடன், கூஜா அல்லது சொம்பு ;மூன்று லிட்டர் தண்ணீருடன்,
சிறிய தாம்பாளம், ஆறு கிண்ணங்கள் துளசி, சந்தனம். தக்ஷிணை., எள், அக்ஷதை, வெற்றிலை பாக்கு வைத்துக்கொள்ள தேவை.
வீட்டில் சாப்பாடு போட்டால் ஆறு சாஸ்த்ரிகளுக்கும் எண்ணை தேய்த்து குளிக்க நல்லெண்ணய், சீயக்காய் பொடி, வெந்நீர். ,சாஸ்திரிகள் குடிக்க வெந்நீர் . வெற்றிலை பாக்கு. சுண்ணாம்பு . ஏலக்காய். ஜாதிக்காய்; ஜாதிபத்ரி, க்ராம்பு,
வால் மிளகு, பச்சை கற்பூரம், இந்த ஆறு பேருக்கும் தேவை. ஆறு பேருக்கும் உட்கார தடுக்கு அல்லது பலகை மணை தேவை. மஹாளயம் பண்ணி வைக்கும் சாஸ்த்ரிகளுக்கும் கர்த்தாவுக்கும் 2 தடுக்கு தேவை.
கர்த்தா காலையில் எழுந்து ஸ்நானம் செய்து சந்தி, காயத்ரி ஜபம் செய்து இந்த ஆறு பேருக்கும் 9x5 வேஷ்டிகள், நனைத்து உலர்த்தவும். கர்தாவுக்கும் பஞ்ச கச்ச வேஷ்டி நனைத்து உலர விடவும்.
சாஸ்த்ரிகளும் இந்த ஆறு பேரும் வீட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கு எண்ணை , சீயக்காய் கொடுத்துவிட்டு கர்த்தா மறுபடியும் ஸ்நானம் செய்து மாத்யானிகம் காயத்ரி ஜபம் செய்யவும்..
இந்த அறுவரும் எண்ணய் ஸ்நானம் செய்து விட்டு வந்தவுடன் கர்த்தா இரு முறை ஆசமனம் செய்ய வேண்டும், அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:
கேசவ, நாராயணா, மாதவ, கோவிந்தா, விஷ்ணு. மதுஸூதனா,த்ரிவிக்ரமா வாமனா ஶ்ரீதரா ஹ்ருஷிகேசா, பத்மனாபா. தாமோதரா.
சாஸ்த்ரிகளிடமிருந்து பவித்ரம் வாங்கி அணியவும்/ மூன்று கட்டை புல் வாங்கி அணியவும். பவித்ரம் அணிய மந்த்ரம். ருத்யாஸ்ம ஹவ்யைர்
நமசோபஸத்ய மித்ரம் தேவம் மித்ரதேயன்னோ அஸ்து அனூராதான் ஹவிஷா வர்தயந்த சதம் ஜீவேம சரதஸ் சவீராஹா. நீரால் கையை துடைத்து கொள்ளவும்.
தீர்த்தம் நிறைந்த பஞ்ச பாத்ர உத்திரிணியை வலது கையில் வைத்துக்கொண்டு ஆறு ப்ராமணர்களையும் மூன்று முறை வலம் வரவும்
தேவதாப்ய: ஸகாருணீக வர்கத்வய பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய: ஏவ ச
நம:ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:
ஸமஸ்த ஸம்பத் சமவாப்தி ஹேதவ: ஸமுத்திதா பத்குல தூமகேதவ: அபார ஸம்ஸார சமுத்ர ஸேதவ புனந்துமாம் ப்ராமண பாத பாகும்ஸுவ::
உபவீதி: மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே துரிருசி ஸம்ஞகேப்ய: விஸ்வேப்யோ தேவேப்யோ நம: மோதிர விரல் கட்டை விரலால் சிறிது அக்ஷதை எடுத்து துரிருசி விஸ்வேதேவர் தலை மீது நுனி விரல்களால் போடவும்.
ப்ராசீணாவீதி: பித்ரு வர்கம்: மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே வசு ருத்ர ஆதித்யேப்ய: அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதா மஹேப்யோ நம:
மோதிர விரல், கட்டை விரல்களால் சிறிது கறுப்பு எள் எடுத்து பித்ரு வர்க ப்ரதிநிதியாய் இருப்பவரின் இடது தோள் மீது கை மறித்து போடவும். .
மாத்ரு வர்க்கம்(அம்மா இல்லை யெனில்) மம அஸ்மின் ஹிரண்ய ரூப சக்ருன் மஹாளய ச்ராத்தே வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீப்யோ நம: :மாத்ரு வர்கத்தின் ப்ரதிநிதியாக இருப்பவரின் இடது தோள் மீது எள் எடுத்து கை மறித்து போடவும்
அம்மா இருந்தால்:- மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாப்ய: அஸ்மத் பிதாமஹி, பிது: பிதாமஹி. பிது: ப்ரபிதாமஹீப்யோ நம: மாத்ரு வர்கத்தின் ப்ரதிநிதியாக இருப்பவரின் இடது தோள் மீது எள் எடுத்து கை மறித்து போடவும்.
மாதாமஹ வர்க்கம்: மம அஸ்மின் ஹிரண்யரூப ஸக்ருன் மஹாளய ச்ராத்தே வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபேப்ய: அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹேப்யோ நம:
மாதா மஹ வர்க்க ப்ரதிநிதியாக இருப்பவரின் இடது தோள் மீது கை மறித்து எள் போடவும்.
காருணீக பித்ரு வர்க்கம்; மம அஸ்மின் ஹிரண்ய ரூப ஸக்ருன் மஹாளய சிராத்தே வஸு வஸு ஸ்வரூபேப்ய: வர்கத்வய அவசிஷ்டேப்ய: ஸர்வேப்ய: காருணீக பித்ருப்யோ நம:
காருணீக பித்ரு வர்க்க ப்ரதி நிதியாக வந்திருப்பவரின் இடது தோள் மீது எள் கை மறித்து போடவும்..
உபவீதி; மம அஸ்மின் ஹிரண்ய ரூப சக்ருன் மஹாளய ச்ராத்தே ச்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே நம:
சிறிது அக்ஷதை எடுத்து மஹாவிஷ்ணு ப்ரதிநிதியாக வந்திருப்பவரின் தலை மீது விரல் நுனி வழியாக போடவும்.
தக்ஷிணை அனுக்ஞை..
5 வெற்றிலைகளில் பாக்கு வைத்து தக்ஷிணை வைத்து அனைத்து ப்ராமணர்களுக்கும் அளித்து மந்திரம் சொல்லவும்.
அசேஷே ஹே பரிஷத் பவத்பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் செளவர்ணீம் தக்ஷிணாம் யதோக்த தக்ஷிணாமிவ ஸ்வீக்ருத்ய .எல்லா ப்ராஹ்மணர்களயும் ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும்.
கீழ்க்காணும் மந்திரம் சொல்லி.
தேவதாப்ய பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவ ச நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம: யானி கானி ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானி ச தாநி தாநி வினஸ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே
துரிருசி ஸங்ஞகேப்ய: விஸ்வேப்யோ தேவேப்யோ நம: என்று கூறி அக்ஷதை எடுத்து துரிருசி விஸ்வேதேவர் தலை மீது போடவும்..விரல் நுனிகளால்.
ப்ராசீநாவீதி: பூணல் இடம்.: வஸு ருத்ர ஆதித்யேப்ய: அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதா மஹேப்யோ நம: என்று எள் எடுத்து கை மறித்து பித்ரு வர்க்க ப்ரதிநிதி இடது தோள் மீது போடவும்
அம்மாவும் இல்லையெனில்
வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாத் அஸ்மத் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீப்யோ நம: அம்மா இல்லையெனில் எள் எடுத்து கை மறித்துஇடது தோள் மீது போடவும்.
அம்மா இருந்தால் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் பிதாமஹீ பிது: பிதாமஹி, பிது:ப்ரபிதாமஹீப்யோ நம: எள் எடுத்து கை மறித்து இடது தோள் மீது போடவும்.
வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஸ்மத் ஸபத்னீக மாதாமஹ, மாது;பிதாமஹ மாது:ப்ரபிதா மஹேப்யோ நம: எள் எடுத்து இடது தோள் மீது கை மறித்து போடவும்.
வஸூ வஸூ ஸ்வரூபேப்யஹ:காருணீக வர்கத்வ்ய அவசிஷ்டேப்யஹ: ஸர்வேப்யஹ: காருணீக பித்ருப்யோ நம: எள் எடுத்து இடது தோள் மீது கை மறித்து போடவும்.
உபவீதி-பூணல் வலம்- மம அஸ்மின் ஹிரண்ய ரூப சக்ருன் மஹாளய ச்ராத்தே ச்ராத்த ஸம்ரக்ஷக ஶ்ரீ மஹா விஷ்ணவே நம:
சிறிது அக்ஷதை எடுத்து மஹாவிஷ்ணு ப்ரதிநிதியாக வந்திருப்பவரின் தலை மீது விரல் நுனி வழியாக போடவும்.
அனைத்து ப்ராமனர்களையும் பார்த்து ஆசிகள் பெறவும். கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லவும். ஸ்வாமின: அஸ்மின் திவஸே ( விச்வேதேவ விஷ்ணு ஸஹித ச காருணீக வர்கத்வ்ய பித்ரூன்
உத்திஸ்ய ஸக்ருத் மஹாளய சிராத்தம் ஹிரண்ய ரூபேன கர்த்தும் யோக்யதா ஸித்தி : அஸ்த்விதி பவந்த: மகான்த: அனுக்ருஹ்ணந்து(யோக்கியதா ஸித்திர் அஸ்து.)
இந்த மஹாளயத்தை ஹிரண்ய சிராத்தமாக செய்ய அனைத்து ப்ராஹ்மணர்களும் ஆசி புரிய வடக்கு முகமாக திரும்பி கீழ் கண்ட மந்த்ரம் சொல்லவும்.
சிராத்த காலே கயாம் த்யாத்வா த்யாத்வா தேவம் ஜனார்தனம் வஸ்வதீம்ஸ்ச பித்ரூன் த்யாத்வா தத: சிராத்தம் ப்ரவர்தயே( ப்ரவர்த்தய)
உபவீதி