Post by kgopalan90 on Sept 2, 2017 22:41:20 GMT 5.5
மஹாளய பக்ஷ விவரங்கள்.
விஸ்வே தேவர்கள் இறைவனின் ப்ரதிநிதிகள். இவர்கள் பித்ருக்களை , சிராத்த ஸமயத்தில் தம்முடைய ஸந்ததியர்களை நோக்கி அழைத்து வருகின்றவர்கள்.. மூதா தையர்களுக்கும் அவர்கள் ஸந்ததியர்களுக்கும் இணைப்பு ஏற்படுத்துகிறவர்கள்..
இந்த விஸ்வே தேவர்களுக்கு சிராத்த ஸமயத்தில் ஆகாரம் கொடுக்கிறோம்.. இவர்கள் மனைவிக்கும், மகளுக்கும் சுமங்கலி ப்ரார்தனை என்று நடத்தி சாப்பாடு போடுகிறோம். இவர்களுடன் நம் வீட்டு சுமங்கலிகளும் வருகிறார்கள்.
மஹாளய பக்ஷத்தின் போது எண்ணைய் குளியல் கர்த்தாவிற்கு கூடாது.
முக க்ஷவரம், தலை முடி வெட்டுதல், நகம் வெட்டுதல் கூடாது.
ப்ரஹ்மசர்யம் அவச்யம் கடை பிடிக்கவும்.
வெங்காயம், பூண்டு, முருங்கை காய், சுரைகாய், முள்ளங்கி, கத்திரிக்காய், முதலியன உண்ண வேண்டாம்.
ஹோடெல் உணவை சாப்பிட வேண்டாம், மதியம் சாப்பாடு, இரவு பலகாரம் சாப்பிடவும். காலை உணவு வேண்டாம் .பசியுடன் தர்பணம் செய்ய வேண்டும். கர்த்தாவின் மனைவிக்கும் இதே கட்டுபாடுதான்.
ஸ்ராதத்தையும் மஹா விஷ்ணு காப்பாற்றி வருகிறார். ஆதலால் அவருக்கும் சாப்பாடு உண்டு.
கர்த்தா சூரிய உதயத்திற்கு முன்பே விடியற் காலையில் ஸ்நானம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு சந்தியாவந்தனம், ஒளபாஸனம் செய்து, ஒன்பது ஐந்து வேஷ்டி தண்ணீரில் நனைத்து உலர வைக்கவும்.
பத்தரை மணிக்கு மாத்யானிகம் செய்து ஸ்நானம் செய்து காலையில் காய வைத்த மடி வேஷ்டியை கட்டிக்கொள்ளவு ம்பஞ்ச கச்சம். கர்த்தாவின் மனைவியும் மடிசார் ஒன்பது கஜ புடவை கட்டிக்கொள்ள வேண்டும்..
மறைந்த முன்னோர்கள் மஹாளய பக்ஷம் 15 நாள்களிலும் பூமிக்கு வந்து தங்குவதாகவும் . ஒவ்வொருவரும் அவரவர் குடும்ப முன்னோர்களுக்கு சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்து முன்னோர்களை ஸந்தோஷ படுத்த வேண்டும் என. சாஸ்திரம் கூறுகிறது.
தினசரி பக்ஷம் முழுவதும் தர்ப்பணம் செய்யலாம். வேலைக்கு செல்பவர்கள் ஏதோ ஒரு நாள் தான் செய்ய முடியும். இவர்கள் பஞ்மிக்கு முன்பும் ப்ரதமை, சஷ்டி, ஏகாதசி, திதிகளிலும், வெள்ளிகிழமை அன்றும்
கர்த்தாவின், மற்றும் அவரது மனைவி, மூத்த குமாரனின் ஜன்ம நக்ஷத்திர நாட்களிலும் செய்யக்கூடாது.என்று ஸ்ம்ருதிகள் பய முறுத்துகிறது.
ஆனால் வைத்தினாத தீக்ஷிதீயம் பக்கம் 239 சொல்கிறது. ::””அமா பாதே பரண்யாம், ச த்வாதஸ்யாம், பக்ஷ மத்யகே ததா திதிம் ச நக்ஷத்திரம் வாரம் ச விசோதயேத்””.
அமாவாஸை, மஹாவ்யதீ பாதம், மஹா பரணீ, த்வாதஸீ திதீ, மத்யாஷ்டமி, கஜச்சாயை, ஆகிய நாட்களில் (ஸக்ரூன்) மஹாளயம் செய்யலாம், இந்த நாட்களுக்கு திதி, நக்ஷ்த்திரம்,கிழமை, ஆகியவற்றால் ஏற்படும் எந்த தோஷமும் கிடையாது . நிறைவான பலன் கிட்டும் என்கிறது ஹேமாத்ரி புத்தகம்.
முதலில் இளைய தம்பி மஹாளயம் செய்த பிறகு மூத்தவர்கள் வரிசையில் மஹாளயம் செய்யப்பட வேண்டும். . அண்ணன், தம்பிகள் ஒரே வீட்டில் ஒரே நேரத்தில் மஹாளயம் செய்யும் போது வரிக்கப்படும் பித்ருக்களில்
அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஒன்று தான். ஆனால் காருணீக பித்ருக்களில் , மாமனார், மைத்துனன்,, மனைவி, பெண், குரு, ஆசாரியன், யஜமானன் நண்பன் ஆகியோர் ஸஹோதரர் ஒவ்வொருவருக்கும் தனி தனி யானவர்கள்
ஆவதால் தனி தனி யாக செய்வதே சிறப்பு.வைத்தினாத தீக்ஷதீயம் பக்கம் 226 படி “”அஹ: ஷோடசகம் யத்து சுக்ல ப்ரதிபதா ஸஹ சந்த்ர க்ஷயா (அ)விசேஷேண ஸாபி தர்சாத்மிகா ஸ்ம்ருதா””
என்னும் தேவல மஹ ரிஷியின் வசனப்படி அமாவாசைக்கு மறு நாளும் சந்திரனின் தேய்மானம் தொடர்கிறது என்பதால் சுக்ல ப்ரதமையும் முதல்
நாளான அமாவாசையை சேர்ந்தது தான் என்னும் சாஸ்திரப்படி பக்ஷ மஹாளய தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசைக்கு மறு நாள் ப்ரதமையும் தர்ப்பணம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்..
க்ருஷ்ண பக்ஷ ப்ரதமை, த்விதியை, த்ருதியை, சதுர்தியிலும் சந்திரன் பூர்ணமாக இருப்பதால் பஞ்சமி முதல் க்ருஷ்ன பக்ஷம் கணக்கிட படலாம் என்பதால் ஒரு நாள் ஸக்ருன் மஹாளயம் செய்பவர்கள் பஞ்சமி முதல் செய்யலாம்..
மஹாளய பக்ஷத்தில் ஒவ்வொரு நாளும் தர்ப்பணம் செய்பவர்கள் அந்த பக்ஷத்தில் நடுவில் வரும் ஷண்ணவதி தர்பணங்களை தனி தனியாக செய்ய வேண்டும்.
“”ஆப்தீகம் ப்ரதமம் குர்யாத் மாஸிகம் து தத:பரம் தர்ஸ ஸ்ராத்தம் த்ருதீயம் ஸ்யாத் சதுர்தஸ்து மஹாளய:””என்னும் வசனப்படி அமாவாசை, முதலிய ஷண்ணவதி தர்பணங்கள் செய்துவிட்டு
பிறகு மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டும். ,நடுவில் மாஸிகம் வந்தாலும் மாஸிகம் செய்து விட்டு பிறகு மஹாளய பக்ஷ தர்ப்பணம் செய்ய வேண்டும்.
தினசரி 16 நாட்களும் தர்பணம் செய்ய முடியாதவர்கள் மஹாளய பக்ஷ ப்ரதமை முதல் அமாவாசை முடிய 15 நாட்கள் செய்யலாம். அல்லது பஞ்சமி திதி முதல் , அல்லது தசமி திதி முதல்,
அல்லது அஷ்டமி திதி முதல் ஆரம்பித்து அமாவாசை முடிய தர்ப்பணம் செய்யலாம். அல்லது மஹாபரணி, அஷ்டமி, கஜசாயை போன்ற மூன்று நாட்களாவது அல்லது ஒரு நாளாவது தர்ப்பணம் செய்யலா.ம்.
நிர்ணய ஸிந்து பக்கம் 115 “” பக்ஷாத்யாதி தர்ஷாந்தம் பஞ்சம்யாதி தி கா தி ச அஷ்டம்யாதி, யதா சக்தி குர்யாதா பர பக்ஷகம்””
தாயார் இறந்து தந்தை ஜீவித்திருக்கும் போது பையன் மஹாளயம், அமாவாசை, சங்க்ரமண தர்பணங்கள் செய்ய வேண்டாம். வருடா வருடம் தாய்க்கு செய்ய வேண்டிய
ச்ராத்தத்தை மட்டும் ச்ரத்தையுடன் செய்தால் போதும் .தந்தை செய்யும் மஹாளய தர்ப்பணம், , மற்ற தர்பணங்களாலயே தாய்க்கு த்ருப்தி ஏற்பட்டு விடுகிறது.