Post by kgopalan90 on Sept 1, 2017 19:13:20 GMT 5.5
அக்னிக்கு தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காக அதிதேனு மந்யஸ்வ என்று சொல்லி வலது கையில் ஜலத்தை விட்டு கட்டை விரல் மேல் நோக்கிய வாறு சுண்டு விரல் அடி வழியாக ஜலம் வேதிக்கு பக்கங்களில் விடவும். மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக அனுமதே அனுமந்யஸ்வ என்றும், வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக ஸரஸ்வதே அனுமந்யஸ்வ என்று சொல்லியும் ஜலம் பரிசேஷனம் செய்யவும்.
பிறகு வடகிழக்கு மூலையில் ஆரம்பித்து ப்ரதக்ஷிணமாக மறுபடியும் வடகிழக்கு மூலையில் முடியுமாறு தேவ ஸவித: ப்ரஸுவ:என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும்.
இத்ம தானம்:
ஸமித்து கட்டுக்கு இத்மம் என்று பெயர். வடக்கே வைத்த சமித்து கட்டை எடுத்து சுற்றிய கட்டை அவிழ்த்து நெய்யால் இரு தடவை அபிகாரம் செய்து (நெய் கீழே வழியாதவாறு) “அஸ்மின் உபாகர்ம ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்ம மாதாஸ்யே என்று சொல்லி சாஸ்த்ரிகளை பார்த்து அல்லது தர்ப்பை கூர்ச்சத்தில் ப்ருஹ்மாவை ஆவாஹனம் செய்திருந்தால் அந்த ப்ருஹ்ம கூர்ச்சத்தை பார்த்து அக்னியில் வைக்கவும். இத்மத்தை நெய் பாத்ரத்திற்குள் முக்காதீர்கள்.
இதற்கு ப்ருஹ்மா ஒம் ஆதாத்ஸ்வ என்று ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.
சொன்ன பிறகு இத்மத்தை அக்னியில் வைக்க வேண்டும்.
சின்ன இலையினால் நெய் எடுத்து வடமேற்கு மூலையிலிருந்து தென் கிழக்கு மூலை வரையிலும் ப்ரஜாபதியை மனதில் நினைத்து நெய்யை தாரையாக ஹோமாக்னியில் விட வேண்டும். பிறகு ப்ரஜாபதயே இதம் ந மம என்று சொல்ல வேண்டும்.
பிறகு பெரிய இலையினால் நெய் எடுத்து தென் மேற்கு மூலையிலிருந்து வட கிழக்கு மூலை வரை தாரையாக விடவும். இந்த்ராய இதம் ந மம என்று சொல்லவும்.
மறுபடியும் பெரிய தர்வீ யினால் அக்னயே ஸ்வாஹா என்று சொல்லிய படியே நெய்யை அக்னியில் வலப்புறமாக விட்டு அக்னயே இதம் ந மம என்று சொல்லவும்.
பிறகு தெற்கு பாகத்தில் ஸோமாய ஸ்வாஹா என்று சொல்லிய படியே நெய் ஊற்றவும். ஸோமாய இதம் ந மம.என்று சொல்லவும்.
மத்தியில் அக்னயே ஸ்வாஹா என்று ஜபித்தவாரே நெய்யை வலப்புறமாக ஹோமத்தில் விட்டு அக்னயே இதம் ந மம என்று சொல்லவும்.
பிராயசித்த ஹோமம். : பிறகு ஆரம்ப ப்ரப்ருதி ஏதத் க்ஷண பர்யந்தம் மத்யே ஸம்பாவிதே ஸமஸ்த தோஷ ப்ராயஸ்சித்தார்த்தம் ஸர்வ
ப்ராயஸ்சித்த ஆஹூதிம் ஹோஷ்யாமி---ஓம் பூர்புவஸுவஸ்
ஸ்வாஹா.என்று கூறி ஹோமம் செய்யவும். ப்ரஜாபதயே இதம் ந மம என்று சொல்லவும்.இதற்கு மேல் அவரவர் ஸம்ப்ரதாயதிற்கு ஏற்றார் போல் ஹோமம் செய்யவும்.