Post by kgopalan90 on Sept 1, 2017 19:03:52 GMT 5.5
தர்பைகளை இம்மாதிரி போடுவதற்கு பரிஸ்தரணம் என்று பெயர். கிழக்கு மற்றும் மேற்கு பக்கத்திலிருக்கும் தர்பைகளின் அடி பாகத்தின் மேல் தெற்கு பாகத்திலிருக்கும் தர்பைகள் அமையும் படி போடவும்.மேற்கிலும் தெற்கிலும் உள்ள தர்பைகள் ,
வடக்கே கிழக்கு நுனியாக போடபட்டிருக்கும் பரிஸ்தரண தர்பைகளின் அடியில் அமைய வேண்டும். வடக்கு பரிஸ்தரணத்திற்கு சற்று வடக்கே 12;:12 தர்பைகளை இரண்டு வரிசையில் கிழக்கு நுனியாக நன்றாக பரப்பி போடவும் இதற்கு பாத்ர ஸாதன தர்பைகள்; ப்ரணீதா பாத்ர ஸாதன தர்பைகள் என பெயர்.
. நமக்கு எதிரே , வேதிக்கு மேற்கே 6 தர்பைகளை வடக்கு நுனியாக பரப்பி போடவும். வேதிக்கு தெற்கே ப்ரஹ்மாவிற்காக கிழக்கு நுனியாக 4 தர்பைகளை போடவும்.
பெறிய புரஸ இலை அல்லது பெரிய மரக்கரண்டி =இதற்கு தர்வீ என்று பெயர். நெய் வைக்கும் கிண்ணத்திற்கு =ஆஜ்ய ஸ்தாலி என்று பெயர்.. ப்ரோக்ஷண பாத்திரம்=இதற்கு ப்ரோக்ஷணீம் என்று பெயர்..
ஜல பாத்ரம்= இதற்கு ப்ரணீதா என்று பெயர். சின்ன புரச இலை அல்லது சின்ன மரக்கரண்டி =இதற்கு இதர தர்வீ என்று பெயர்.; இத்மம்=விஷேசமான ஸமித்து எனறு பெயர் .
இந்த ஆறு பொருட்களையும் (தர்வீ, ஆஜ்யஸ்தாலி, ப்ரோக்ஷணீம், ப்ரணீதா, இதர தர்வீ, இத்மம்) வடக்கு பரிஸ்தரணத்திற்கு சற்று வடக்கே பரப்பி வைத்திருக்கும் (பாத்ர ஸாதன தர்பைகள்) தர்பைகளின் மேல் மேற்கிலிருந்து வரிசையாக கவிழ்த்து வைக்கவும்.
ஆயாமத தர்பைகள்=ஆறு அங்குலம் அளவில் செய்துகொள்ளப்படும் தர்பைகள்.
இரண்டு ஆயாமத தர்பைகள் எடுத்து பவித்ரம் செய்து அதை கையில் வைத்தபடி கவிழ்த்து வைத்திருக்கும் பொருட்களை .மூன்று தடவை. தொடவும்.
ப்ரோக்ஷணீ பாத்திரத்தை எடுத்து தனக்கு எதிரில் தர்பையின் மேல் வைக்கவும். அந்த பாத்திரத்தில் சிறிது ஜலத்தையும், அக்ஷதையையும் சேர்க்கவும்.
அதன் மேல் ஆயாமத பவித்திரத்தை வடக்கு நுனியாக வைக்கவும். பிறகு இந்த ஆயாமத பவித்திரத்தை இரண்டு கைகளின் கட்டை விரல் மற்றும் மோதிர விரல்களால் மேற்கிலிருந்து கிழக்காக மூன்று தடவை நகர்த்தவும்.
பிறகு வடக்கு பக்கம் கவிழ்த்து வைத்திருக்கும் பாத்திரங்களை நிமிர்த்தவும். ஸமித்து கட்டை அவிழ்த்து வைக்கவும். ஆயாமத பவித்திரத்தினால்
வடக்கில் நிமிர்த்தி வைத்திருக்கும் பொருட்களை மூண்று தடவை ப்ரோக்ஷிக்கவும்.. ப்ரோக்ஷணீ பாத்திரத்தை தெற்கில் வைக்கவும்..
வடக்கிலிருந்து ப்ரணீதா பாத்திரத்தை எடுத்து தனக்கு எதிரில் தர்பையின் மேல் வைத்துக்கொண்டு அதில் அக்ஷதை ஜலம் சேர்த்து மேற்கிலிருந்து கிழக்கே மூன்று தடவை ஆயாமத பவித்ரத்தால் நகர்த்தவும்.
ப்ரணீதா பாத்ரத்தை தனது மூக்கிற்கு நேராக தூக்கி நிறுத்தி வடக்கே ப்ரணீதா பாத்ரதிற்காக போடப்பட்ட தர்பைகளின் மேல் வைத்து வருணாய நம: சகல ஆராதனை: சுவர்ச்சிதம் என்று கூறி அக்ஷதை போட்டு தர்பைகள் போட்டு வைக்கவும்..
ஆஜ்ய ஸம்ஸ்காரம்.
ஹோமத்திற்காக பயன்படுத்த இருக்கும் நெய்யை சுத்தபடுத்துவதே ஆஜ்ய ஸம்ஸ்காரம் எனப்படுகிறது.
நமக்கு எதிரில் உள்ள தர்பைகளின் மேல் , வடக்கிலிருக்கும் நெய் பாத்திரத்தை வைக்க வேண்டும். நெய் பாத்திரத்தின் மேல் ஆயாமத பவித்ரத்தை வைத்து நெய்யை அக்னியில் காண்பித்து , உருக்கிய பின் அதை நெய் பாத்திரத்தில் ஊற்றவும்.
அக்னியின் வடக்கிலிருந்து மூன்று தணல்களை எடுத்து நமக்கு இடப்புறமாக , பரிஸ்தரணத்திற்கு வெளியில் வைக்கப்பட்ட விராட்டியின் மேல் வைக்கவும். அதன் மேல் நெய் பாத்திரத்தை வைக்கவும்.
ஒரு தர்பையை எடுத்து ஹோம அக்னியில் காண்பிக்கவும். ஜ்வாலையோடு இருக்கும் அந்த தர்பையை நெய் பாத்திரத்தை பிரதக்ஷிணமாக சுற்றி வடக்கில் போடவும்.
இரண்டு தர்பை நுனிகளை கத்தியால் ஒரு அங்குல நீளத்திற்கு வெட்டி ஜலத்தில் நனைத்து நுனி கிழக்காக நெய்யில் போடவும்.
மறுபடியும் ஒரு தர்பையை அக்னியில் காண்பித்து ஜ்வாலையுடன் நெய்யை மூன்று தடவை ப்ரதக்ஷிணமாக சுற்றி வடக்கில் போடவும்.
வரட்டியின் மேல் அக்னி தணலின் மேல் வைத்த நெய் பாத்திரத்தை வடக்கில் இறக்கி வைத்து அந்த அக்னி தணல்கலை ஹோம அக்னி குண்டத்தில் சேர்க்கவும்.
நெய் பாத்திரத்தை நமக்கு எதிரில் உள்ள பரப்பிய தர்பைமேல் வைத்து ஆயாமத பவித்ரத்தை வடக்கு நுனியாக அதில் வைக்கவும்.
இரு கைகளின் கட்டை விரல் மற்றும் மோதிர விரல்களால் ஆயாமத பவித்ரத்தை நுனி வடக்காக பிடித்துக்கொண்டு நெய்யை கிழக்கிலிருந்து மேற்காகவும் மறுபடியும் கிழக்காகவும் ,
இவ்வாறு மூன்று முறை செய்த பிறகு ஆயாமத பவித்ரத்தை முடிச்சை அவிழ்த்து ஜலத்தில் தொட்டு நுனி கிழக்காக அக்னியில் பவித்ரத்தை போடவும்.
தர்வீ ஸம்ஸ்காரம்:-
மரக்கரண்டிகள் அல்லது காய்ந்த புரச இலைகளை சுத்தப்படுத்துவதே தர்வீ ஸம்ஸ்காரம் எனப்படும்.
இரண்டு தர்வீகளையும் உட்புறமாக அக்னியில் காண்பித்து இடது கையில் வைத்துக்கொள்ளவும்.
. இரண்டு தர்பைகளை வலது கையில் வைத்துக்கொண்டு தர்வியின் உள் புறமும் வெளிப்புறமும் துடைக்கவும்.
மறுபடியும் தர்விகளை அக்னியில் காண்பிக்கவும். மறுபடியும் தர்பைகளால் உட்புறமும் வெளிப்புறமும் துடைக்கவும். தர்விகளை நெய் பாத்திரத்தின் வடக்கே வைத்துவிட்டு துடைத்த தர்பைகளை ஜலத்தில் தொட்டு அக்னியில் வைக்கவும்.
பரிதி வைத்தல்.
பரிதி வைக்க வேண்டும். அதாவது ஹோம குண்டத்தின் பக்கங்களில் ஸமித்து வைப்பதே பரிதி என்று பெயர். புரஸு ஸமித்தில் நடுவில் தடியாக இருக்கும் ஸமித்தை அக்னியின் மேற்கிலும், நீளமான சமித்தை தெற்கேயும் மெல்லிய குட்டையான ஸமித்தை வடக்கேயும் வைக்க வேண்டும். .
நமக்கு எதிரில் நடுவிலுள்ள ஸமித்தை கையால் தொடவும். வேறு இரண்டு ஸமித்து எடுத்து ஒன்றை வேதியின் தென் கிழக்கு மூலையிலும் மற்றொன்றை வட கிழக்கு மூலையிலும் அக்னிக்கு அருகில் சொருகவும். இது ஆகார ஸமித்தாகும்.
அக்னி பரிசேஷனம்.: