Post by kgopalan90 on Sept 1, 2017 18:58:59 GMT 5.5
வேதி) ஹோம குண்டம் அமைக்கும் முறை.:
ஹோமம் செய்ய இருக்கும் இடத்தில் கோலம் போட்டு அதன் மேல் ஹோமகுண்டத்தை வைக்கவும்.ஹோமகுண்டம் இல்லை என்றல் மணலை
சதுரமாக பரப்பி சுற்றிலும் 6 செங்கல்லை க்கொண்டு வேதி அமைத்துக்கொள்ளலாம்.
கிண்ணத்தில் ஜலம் வைத்துக்கொள்ளவும் .இன்னொரு கிண்ணத்தில் அக்ஷதை எடுத்து வைத்துக்கொள்ளவும்
.
நுனி தர்பை அடங்கிய கட்டு ஒன்றை வலது பக்கத்தில் வைத்துக்கொள்ளவும்.
ஹோம குண்டத்தின் அடி பாகத்தில் தர்பை கட்டின் அடி பாகத்தால் அல்லது ஹோம குச்சியினால் மேற்கிலிருந்து கிழக்கு திசையை நோக்கியவாறு
முதலில் தெற்கிலும், இரண்டாவது நடு பாகத்திலும் மூன்றாவதாக வடக்கிலும் என மூன்று கோடுகள் போடவும்.
அதை போலவே தெற்கிலிருந்து வடக்கே முடிவதாக மேற்கு நடு பாகம் கிழக்கு என்ற வரிசையில் மூன்று கோடுகள் போடவும்.
கையில் இருக்கும் தர்பையின் அடி பாகத்தை அல்லது ஹோம குச்சியை வேதியில் வைத்து ஜலத்தால் ப்ரோக்ஷிக்கவும். ஹோம குச்சியை அல்லது தர்பையினடி பாகத்தை தென் மேற்கு மூலையில் போடவும்.
பிறகு ஜலத்தை தொடவும்.. பாக்கி ஜலத்தை கீழே கிழக்கு பாகத்தில் கொட்டிவிடவும்.. ப்ரஹ்மசாரி செய்வதாக இருந்தால் அக்னி குண்டத்திலேயே கற்பூரத்தை கொண்டு அக்னி வளர்த்த வேண்டும்.
கிரஹஸ்தனாக இருந்தால் வீட்டிலுள்ள பெண்மணி பித்தளை தட்டில் அக்னி தணல் கொண்டு வர வேண்டும். அந்த தட்டை கையில் ஏந்தியபடி கிழக்கு திசையில் மேற்கு முகமாக நின்று கொண்டு பூர்புவஸ்ஸுவரோம்
என்று சொல்லி அக்னியை மெதுவாக ப்ரதிஷ்டை செய்யவும். அக்னி கொண்டு வந்த தட்டில் அக்ஷதை, ஜலம் சேர்க்கவும். ஒரு கிண்ணத்தில் ஜலம் நிரப்பி ஹோம குண்டத்தின் கிழக்கே வைக்கவும். அக்னிமித்வா என்று
சொல்லி ஒரு சமித்தை அக்னியில் வைக்கவும். அக்னி ப்ரஜ்வால்ய என்று சொல்லி அக்னியை ஜ்வாலையாக ப்ரகாசிக்கும்படி செய்யவும்.
ஹோம குண்டத்திற்கு கிழக்கு திசையில் வடக்கு நுனியாக 16 தர்பைகளையும், தெற்கே கிழக்கு நுனியாக 16 தர்பைகளையும் மேற்கே வடக்கு நுனியாக 16 தர்பைகளையும் வடக்கே கிழக்கு நுனியாக 16 தர்பைகளை போடவும். தர்பைகளை இம்மாதிரி போடுவதற்கு பரிஸ்தரணம் என்று பெயர். கிழக்கு மற்றும் மேற்கு பக்கத்திலிருக்கும் தர்பைகளின் அடி பாகத்தின் மேல் தெற்கு பாகத்திலிருக்கும் தர்பைகள் அமையும் படி போடவும்.மேற்கிலும் தெற்கிலும் உள்ள தர்பைகள் ,
வடக்கே கிழக்கு நுனியாக போடபட்டிருக்கும் பரிஸ்தரண தர்பைகளின் அடியில் அமைய வேண்டும். வடக்கு பரிஸ்தரணத்திற்கு சற்று வடக்கே 12;:12 தர்பைகளை இரண்டு வரிசையில் கிழக்கு நுனியாக நன்றாக பரப்பி போடவும் இதற்கு பாத்ர ஸாதன தர்பைகள்; ப்ரணீதா பாத்ர ஸாதன தர்பைகள் என பெயர்.
. நமக்கு எதிரே , வேதிக்கு மேற்கே 6 தர்பைகளை வடக்கு நுனியாக பரப்பி போடவும். வேதிக்கு தெற்கே ப்ரஹ்மாவிற்காக கிழக்கு நுனியாக 4 தர்பைகளை போடவும்.
பெறிய புரஸ இலை அல்லது பெரிய மரக்கரண்டி =இதற்கு தர்வீ என்று பெயர். நெய் வைக்கும் கிண்ணத்திற்கு =ஆஜ்ய ஸ்தாலி என்று பெயர்.. ப்ரோக்ஷண பாத்திரம்=இதற்கு ப்ரோக்ஷணீம் என்று பெயர்..
ஜல பாத்ரம்= இதற்கு ப்ரணீதா என்று பெயர். சின்ன புரச இலை அல்லது சின்ன மரக்கரண்டி =இதற்கு இதர தர்வீ என்று பெயர்.; இத்மம்=விஷேசமான ஸமித்து எனறு பெயர் .
இந்த ஆறு பொருட்களையும் (தர்வீ, ஆஜ்யஸ்தாலி, ப்ரோக்ஷணீம், ப்ரணீதா, இதர தர்வீ, இத்மம்) வடக்கு பரிஸ்தரணத்திற்கு சற்று வடக்கே பரப்பி வைத்திருக்கும் (பாத்ர ஸாதன தர்பைகள்) தர்பைகளின் மேல் மேற்கிலிருந்து வரிசையாக கவிழ்த்து வைக்கவும்.
ஆயாமத தர்பைகள்=ஆறு அங்குலம் அளவில் செய்துகொள்ளப்படும் தர்பைகள்.
இரண்டு ஆயாமத தர்பைகள் எடுத்து பவித்ரம் செய்து அதை கையில் வைத்தபடி கவிழ்த்து வைத்திருக்கும் பொருட்களை .மூன்று தடவை. தொடவும்.
ப்ரோக்ஷணீ பாத்திரத்தை எடுத்து தனக்கு எதிரில் தர்பையின் மேல் வைக்கவும். அந்த பாத்திரத்தில் சிறிது ஜலத்தையும், அக்ஷதையையும் சேர்க்கவும்.
அதன் மேல் ஆயாமத பவித்திரத்தை வடக்கு நுனியாக வைக்கவும். பிறகு இந்த ஆயாமத பவித்திரத்தை இரண்டு கைகளின் கட்டை விரல் மற்றும் மோதிர விரல்களால் மேற்கிலிருந்து கிழக்காக மூன்று தடவை நகர்த்தவும்.
பிறகு வடக்கு பக்கம் கவிழ்த்து வைத்திருக்கும் பாத்திரங்களை நிமிர்த்தவும். ஸமித்து கட்டை அவிழ்த்து வைக்கவும். ஆயாமத பவித்திரத்தினால்
வடக்கில் நிமிர்த்தி வைத்திருக்கும் பொருட்களை மூண்று தடவை ப்ரோக்ஷிக்கவும்.. ப்ரோக்ஷணீ பாத்திரத்தை தெற்கில் வைக்கவும்..
வடக்கிலிருந்து ப்ரணீதா பாத்திரத்தை எடுத்து தனக்கு எதிரில் தர்பையின் மேல் வைத்துக்கொண்டு அதில் அக்ஷதை ஜலம் சேர்த்து மேற்கிலிருந்து கிழக்கே மூன்று தடவை ஆயாமத பவித்ரத்தால் நகர்த்தவும்.
ப்ரணீதா பாத்ரத்தை தனது மூக்கிற்கு நேராக தூக்கி நிறுத்தி வடக்கே ப்ரணீதா பாத்ரதிற்காக போடப்பட்ட தர்பைகளின் மேல் வைத்து வருணாய நம: சகல ஆராதனை: சுவர்ச்சிதம் என்று கூறி அக்ஷதை போட்டு தர்பைகள் போட்டு வைக்கவும்..