|
Post by kgopalan90 on Aug 12, 2017 13:11:32 GMT 5.5
amasoma vara arasa mara pradhakshinam.
!
In this month Arasa mara pradhakshinam falls on 21-08-2017. next on 18-12-2017. requirements for arasa mara pradakshinam is as follows.=coconut 1 no; betel 20 nos; betel nut or pakku potalam 10 nos; sandal powder;
kumkumam; turmeric powder 25 gram; raw rice 20 gram; for archanai uthiri pushpam; thodutha poo 1 meter. rice flower to put kolam and also for abishekam; camphor 4 pills; oothupathi 1 pkt; milk 100 ml;honey; 10 ml;5
plates; 2 thadukku; bell; pancha pathra uthirini; harathy plate; lamp; oil;thiri; match box; water in a brass vessel;curd 50ml; for neivedhyam ; fruits banana 6 nos; other available fruits 100 grams each; round manjal 120 nos.old news paper 4.
Arasa maram with veppa maram is required for pradhakshinam. In some temples it is available . After upanayanam and marriage is over for the arasa and veppa maram these trees are eligible for doing pradhakshnam.
pradhakshinam must be finished before 10 AM.
From the vradha pooja vidhaanam book you can follow the proceedure for arasa mara pradhakshinam which must fall on monday with amavasai thithi upto 10 am;
Men can also do with purusha sooktha vidhaanam. sastrigals will help you.
After finishing monthly sukla chathurthy pooja for one year you are elegible for arasamara pradhakshinam.
Chant; 'moolatho brahma roopaya madhyatho vishnu roopinae agrathaha shiva roopaaya vruksha raajaaya they namaha; ''
Use the round manjal for this first time one for each pradhakshinam and after 108 pradhakshinam you must distribute this manjal to your friends and relatives. and also who are coming there for pradhakshinam.
For the next arasa mara pradhakshinam use 108 kumkumam pockets and the next use thaamboolam 108; then in next 108 flowers and after that you can purchase eclairs chocolates. or any other thing you like .
you must do for 13 years like this and udhyapanam must be done. after udhyapanam you need not do this.
Then you are elegible to do Rishi panchami vratham.
|
|
|
Post by kgopalan90 on Aug 13, 2017 15:47:08 GMT 5.5
அரச மர ப்ரதக்ஷிணம்
அரச மரமே போதி மரம் புத்தர் ஞான உதயம் பெற்றது ஒரு சமயம்
அக்கினி பகவான் அசுவம் என்றால் குதிரை என்று அர்த்தம் குதிரை மேல் வேகமாக சென்று ஒரு மரத்தில் மறைந்தார்
அந்த மரமே அசுவத்த மரமானது இந்த மரத்தின் காய் இலை பழம் பட்டை வேர் குச்சி எல்லாமே மருத்துவ குணம் உடையது 24 மணி நேரமும் ப்ராண வாயுவை வெளியிடுகிறது குச்சி ஹோமத்திற்கு மிக சிறந்தது
அரச மரத்தின் நுனி பாகத்தில் சிவனும் மத்திய பாகத்தில் விஷ்ணுவும் அடி பாகத்தில் ப்ருஹ்மாவும் உள்ளனர் ஸ்ரீ க்ருஷ்ணர் பகவத் கீதையில் நான் மரங்களுல் அசுவத்த வ்ருக்ஷமாக இருக்கிறேன் என்று கூறுகிறார்
அசுவத்த ப்ரதக்ஷிணம் ஒரு காம்ய கர்மா பவிஷ்ய புராணத்தில் அரச மரத்திற்கு உத்திராயணத்தில் உபநயனமும் வைகாசி கார்த்திகை மார்கழி மாசி மாதங்களில் ஒரு அரச மரத்திற்கு விவாஹமும் செய்ய வேண்டும் என்று கூறுகிறது
வேப்ப மரம் சிவனுக்கு மனைவி போல் வேப்ப மரத்தையும் அரச மரத்தையும் பக்கத்தில் பக்கத்தில் வளர்க்க வேண்டும் இரண்டும் பெரிதாக வளர்ந்தவுடன் உபநயனமும் விவாஹமும் செய்து வைக்க வேண்டும்
காக மல விசர்ஜனத்தால் அரசும் வேம்பும் தானே முளைத்திருக்கும் உபநயனம் செய்யும் போது காக மல விசர்ஜன தோஷம் போக ஹோமம் செய்து பிறகு உபநயனும் அதன் பிறகு விவாஹமும் செய்ய வேண்டும்
தற்போது இதற்கும் விவாஹம் செய்ய ஒரு லக்ஷம் ரூபாய் கேட்கிறார்கள் சாஸ்திரிகள் புரோஹிதர்கள்
அரச மரத்திற்கு உபநயனம் செய்துவைப்பதால் வம்ச வ்ருத்தி ஏற்படுகிறது அரச மரத்திற்கு விவாஹம் செய்து வைப்பதால் ஒரு கோடி விவாஹம் செய்து வைத்த பலன் கிடைப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது
புத்ரன் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் இவைகளை விரும்புவோர் இரண்டு அரச மரமும் இரண்டு வேப்ப மரமும் வைத்து வளர்த்து ப்ரதிஷ்டை செய்ய வேண்டும் ப்ரதக்ஷிணம் என்பது உடலால் ப்ரணவத்தை எழுதுவது
ஆகும் சரீர பலமும் மன அமைதியும் இந்த ப்ரதக்ஷிணத்தால் ஏற்படுகிறது ப்ரதக்ஷிணம் செய்வதன் பலன் ஞாயிறு ஆரோக்கியம்
திங்கள் மங்களம் செவ்வாய் எல்லாவற்றிலும் வெற்றி புதன்
வியாபாரத்தில் முன்னேற்றம் வியாழன் வித்யா லாபம் வெள்ளி லக்ஷ்மி கடாக்ஷம் சனிக்கிழமை ஸர்வ துக்க நிவர்த்தி சனிக்கிழமை தவிர மற்ற தினங்களில் அரச மரத்தை தொடக்கூடாது
ஸோம வார அமாவாசை அன்று அலப்ய யோகம் இன்று ப்ரதக்ஷிணம் செய்வதால் ஐஸ்வர்யமும் ஸத் சந்ததியும் ஏற்படும் எல்லா விதமாந துர் யோகந்களும் விலகும்.
சித்த வைத்தியத்தில் அரச மரம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஜநந உறுப்புகளுக்கு பலம் அதிகம் அளிக்கும் மருந்துகள் தயாரிக்க படுகிறது.
திங்கட்கிழமை காலையில் பத்து மணிக்குள் அரச மர பூஜையை முடித்து விட வேண்டும். .திந்க்கட் கிழமை காலையில் பத்து மணிக்கு மேல் அமாவாசை வந்தால் அந்று ப்ரதக்ஷிணம் கிடையாது.
விரத பூஜா விதாநம் புத்தகத்தில் அரச மர ப்ரதக்ஷிண பூஜை உள்ளது.
|
|
|
Post by kgopalan90 on Aug 14, 2017 21:19:24 GMT 5.5
அரச மர ப்ரதக்க்ஷிநம். சநிகிழமை அந்று அரச மரத்தடியில் உட்கார்ந்து ஆரண்யகம் ஆராவது ப்ரச்நம் பாராயணம் அளவில்லா புண்ணியம் தரும்.
அரச மரமும் வேப்ப மரமும் நந்கு வளர்ந்த பிறகு ஒரு நல்ல நாளில் யஜமாநந் ஸ்நாநம் முதலிய நித்ய கர்மாக்களை முடித்து கொண்டு அரச வேப்ப மரம் சமீபம் வந்து தோரணம் கட்டி, கோலம்
போட்டு மரத்திற்கு கிழக்கே தோரணதோடு மண்டபம் அமைத்து வேதம் கற்ற ப்ராஹ்மணர்களை அழைத்து தக்ஷிணை தாம்பூலத்துடந் அநுக்ஞை விக்நேஸ்வர பூஜை, சங்கல்பம், செய்து
புண்யாஹாவசநம் செய்து, எல்லா இடங்கலளிலும் ப்ரோக்ஷித்து , வெள்ளி தகட்டில் அரச மர ப்ரதிமை செய்து பஞ்சகவ்யத்தால் சுத்தம் செய்ய வேண்டும்.
ஸ்தண்டிலம் அமைக்கவும். பூமியில் கோலம் போட்டு அதந் மேல் பழைய பேப்பர் போட்டு அதந் மேல் நெல் அல்லது கோதுமை போட்டு அதந் மேல் வாழை இலை போட்டு அதந் மேல் அரசி போட்டு அதநில் அஷ்ட தளம் வரைந்து அதந் மேல் மூந்று கலசங்கள் வைக்க வேண்டும்.
வடக்கே நாராயணருக்கும் அதந் தெற்கில் அரசமரத்திற்கும் அதந் தெற்கே ப்ருஹ்மாவிற்கும் கலசங்கள் வைக்க வேண்டும். கிழக்கு முதல் எட்டு திக்கு பாலகர்களுக்கும் 8 கலசமும் வைக்கலாம். ப்ருஹ்மா கலசத்திற்கு ருக்குகளால் ஆவாஹநம், அரச மர கலசத்தில் அரச மர வெள்ளி ப்ரதிமையும் வைத்து அசுவத்த நாராயணரை ஆவாஹநம் செய்து நாராயண கலசத்தில் விஷ்ணு காயத்ரியால் ஆவாஹநம் செய்யவும். அஷ்ட திக் பாலகர்களை அஷ்ட திக் பாலக மந்திரங்களால் ஆவாஹநம் செய்யவும்.
ப்ராணப்ரதிஷ்டை செய்யவும். புருஷ ஸுக்த விதாநப்படி பூஜை.
ஜபம்.:- நாராயண காயத்ரி-108; வருண, ப்ருஹ்ம, விஷ்ணு. ருத்திர ஸூக்தங்கள், நமகம், சமகம், புருஷ , ஸ்ரீ் ஸூக்தங்கள் பஞ்ச சாந்தி சொல்ல வேண்டும். .
யஜமாநர் ஸூத்ரப்படி அக்நி ப்ரதிஷ்டை, முகாந்தம் வரை செய்து, நாராயண காயத்ரி மந்திரத்தால் தநி தநியாக பாயஸம், நெய், அரச சமித்திநாலும் 108 ஹோமம் செய்ய வேண்டும்.
பிறகு தநியாக புருஷ ஸூக்தத்திநாலும், ஸ்ரீ் ஸூக்தத்திநாலும் ஒவ்வொரு ருக்நாலேயும் பாயசத்திநால் ஹோமம். , ஸ்விஷ்டக்ருத், ஜயாதி ஹோமம் ;
புநர் பூஜை;; கலசம் யதாஸ்தாநம்;எல்லா கலச ஜலத்திநாலும் அரச மரத்திற்கும், யஜமாநநக்கும் ஸ்நாநம்; ப்ரோக்ஷணம்;
பிறகு யஜமாநந் அரச மரத்திற்கு புருஷ ஸூக்த விதாநப்படி பூஜை செய்ய வேண்டும்.. ப்ரதக்ஷிணம்; ஆசார்ய, ருத்விக் ஸம்பாவநை ; வீட்டிற்கு வந்து ப்ராஹ்மண போஜநம். ; யஜமாநந் போஜநம்.; ப்ராஹ்மணர்கள் ஆசீர்வாதம்..
அரச மரம் உபநயநம் செய்ய:-- வியாசர் கூறிய படி, உத்திராயணம், சுக்ல பக்ஷம்; தாரா பலம், சந்திர பலம், பொருத்தத்துடந் கூடிய ஒரு நாளில் அநுக்ஞை; விக்நேச்வர பூஜை, ஸங்கல்பம், புண்யாஹாவசநம்;
புண்யாஹாவசந தீர்த்த ப்ரோக்ஷணம் பூணலுக்கும் மற்ற உபகரணங்களுக்கும்; நாந்தி, உத்ராங்க புண்யாஹ வசநம்; மந்திரமில்லாமல் ப்ரதிஸர பந்தநம்; பூணல் அணிவித்தல்;
அரச மரத்திந் கிழக்கில் உல்லேகநம் முதல் ,பூர்வ தந்திரம், பலாச சமித், மேகலை; மாந்தோல், பலாச தண்டம் தயார் செய்து வைத்து க்கொண்டு முகாந்தம் வரை செய்து , பலாச சமித்தை நெய்யில் நநைத்து , மந்திரமில்லாமல் மாந்தோல் பலாச சமித்தை மரத்திந் மேல் சாய்த்து வைத்து , பிறகு மந்திரத்தால் பூஜிக்க வேண்டும். வ்யஸ்தமாந வ்யாஹ்ருதி ( தநிதநியாகவும் சேர்த்தும்) முதல் 12 மந்திரங்களால் ஹோமம் செய்து யோகாதி ப்ரதாந ஹோமம், ஜயாதி ஹோமமும் செய்ய வேண்டும்.
காயத்ரி உபதேசத்திற்கு ஸங்கல்பம். ப்ராஹ்மணர்களுக்கு தக்ஷிணை தாம்பூலம் கொடுத்து, ப்ரஹ்ம யக்ஞ ப்ரஹாரம் காயத்ரியை அரச மரத்தை பார்த்து சொல்ல வேண்டும். ப்ராஹ்மண போஜநம். தக்ஷிணை. ஆசீர்வாதம்.
பிறகு ஒரு நாள் அரச மர விவாஹம் செய்ய வேண்டும்.
வைகாசி, கார்த்திகை, மார்கழி, மாசி இவைகளில் ஏதோ ஒரு மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் விவாஹம் செய்து வைக்க வேண்டும். யஜமாநநுக்கு சந்திர பலம் தாரா பலம் உள்ள நாளாக இருக்க வேண்டும்.
அரச மரத்திற்கு மேற்கே மண்டலம் அமைத்து அதந் மத்தியில் வேதி தயார் செய்து மாவிலை தோரணம் அலங்காரம் செய்யவும்.
அரச மரத்திற்கு பஞ்சாம்ருத அபிஷேகம் செய்விக்க வேண்டும். அரச மர மத்தியில் புது வேஷ்டி வாங்கி சுற்றி கட்டி விடவும். யஜமாநர் அரச மரத்திற்கு அபிஷேகம், பூணல், சந்தநம், குங்குமம் வஸ்த்ரம் ஆபரணம் இவைகளால் அலங்கரிக்க வேண்டும்.
மந்திரதோடு யஜமாநர் வேப்ப மரத்திற்கு மாங்கல்யம் கட்ட வேண்டும். யஜமாநரிந் மநைவி கஞ்சுகத்தோடு, வஸ்த்ரத்தோடு வேப்ப மரத்தை அலங்கரிக்க வேண்டும். ,பருப்பு தேங்காய்,புஷ்பங்கள், பக்ஷணங்கள், பழங்கள்; எல்லாம் வைக்க வேண்டும்.
பிறகு ப்ரதாந ஹோமங்களை முடித்துகொண்டு வேப்ப மரம் ஸமீபத்தில் நாண்கு ப்ராமணர்கள் ஜபம் செய்து ஜயாதி ஹோமம் ,பரிஷேஷநம் செய்து அரச ,வேப்ப மரங்களுக்கு எதிரில் புருஷ ஸூக்த ஜபம் செய்ய வேண்டும்.
பிறகு நாந்தி, புண்யாஹ வசநம் செய்து ஆசாரியருக்கும், ப்ராஹ்மணர்களுக்கும் தக்ஷிணை, வஸ்த்ரம், போஜநம், செய்வித்து ஆசீர்வாதம் பெற வேண்டும்.
இந்த ப்ரகாரம் அரச மரம் விவாஹம் யார் செய்விக்கிறாரோ அவர் நூற்றுகணக்காண யாகம் செய்த பலநும், கோடிக்கணக்காண ப்ராஹ்மணருக்கு உத்தமமாந விவாஹம் செய்த புண்யம் கிடைக்கும் எந கூறப்பட்டிருக்கிறது.
திங்கட் கிழமை அந்று அமாவாசை வரும் நாட்களில் இந்த அரச, வேப்ப மரத்தை காலை யில் சுற்றி வர வேண்டும். ஓஜோந் அதிகமுள்ள காற்று கிடைக்கிறது. 108 முறை ப்ரதக்ஷிணம் வர வேண்டும், நேரம் இல்லாதவர்கள் முடிந்த வரை சுற்றி விட்டு செல்லலாம்.
நேரம் உள்ளவர்கள் ஆண்கள், பெண்கள் எல்லோரும் சுற்றலாம். அரச மரத்திற்கு அடியில் உட்கார்ந்து 16 உபசார பூஜை செய்து விட்டு 108 சுற்றுகள் சுற்ற வேண்டும். .ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு அதிரசம் , போட்டுகொண்டு வந்தால் எண்ணிக்கை சரியாக அமையும்.சுற்றும் போது
மூலதோ ப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே, அக்ரதஹ சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நமஹ எந்று சொல்லி கொண்டே சுற்றலாம்.
மரங்களிந் தலைவநாந அரச மரமே உந் அடிபகுதியில் ப்ரஹ்மாவாகவும், மத்தியில் விஷ்ணுவாகவும், கிளை பகுதிகளில் சிவநாகவும் காக்ஷியளிக்கும் உநக்கு நமஸ்காரம் எந்று தமிழ் அர்த்தம்
அக்ஷிஸ்பந்தம், புஜஸ்பந்தம், துர் ஸ்வப்நம், துர் விசிந்தநம், சத்ரூணாம் ச ஸமுத்பந்நம் அசுவத்த ஸமயஸ்வமே. இதந் அர்த்தம் தோள்கள், கண்கள், கைகள் காரணமில்லாமல் துடித்தல் , கெட்ட ஸ்வப்ணம், மநதில் கெட்ட எண்ணம், எதிரிகளால், துந்பம் ஆகியவற்றிலிருந்து அரச மரமே எந்நை காப்பாற்றவும். பிறகு புநர் பூஜை செய்துவிட்டு வாத்யார் தக்ஷிணை கொடுத்துவிட்டு அதிரசம் அல்லது எதோ ஒரு பக்ஷணத்தை எல்லோருக்கும் விநியோகம் செய்ய வேண்டும்.
விருத மாக செய்பவர்கள் குறைந்த பக்ஷம் 13 வருடம் செய்ய வேண்டும். உத்தியாபநம் செய்ய வேண்டும். இந்று ஒரு நாள் மட்டும் பஞ்சு தொடக்கூடாது. பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள் சாப்பிட க்கூடாது.
முதந் முதல் ஆரம்பிக்கும் போதும், உத்யாபநம் செய்யும் அந்றும் அமாவாசை திதி திங்கட்கிழமை அந்று பூரணமாக இருக்க. வேண்டும்.
.
தற்காலத்தில் சிறு நகரங்களிலும், கிராமங்களிலுமே இது ஸாத்யம். .உத்யாபநம் செய்யும் அந்று அப்பம் அல்லது அதிரசம் செய்து அரச மரத்தை 108 முறை சுற்றி விட்டு வீட்டிற்கு வந்து 5 கலசம் வைத்து
ஒரு வெள்ளி(மெல்லிய) தகட்டில் அரச மரம் ப்ரதிமையுடந் பூஜித்து பஞ்ச தாநம் செய்து வாத்யாருக்கு ஒரு எவெர் சில்வர் தூக்கில் அதிரசம் தாநம் தக்ஷிணையுடந் செய்ய வேண்டும். ப்ராஹ்மண போஜநம் ஆசீர்வாதம்.
இதநால் ப்ருஹ்மா, விஷ்ணு, சிவந் ஆகிய மும்மூர்த்திகள் அருள் கிடைக்கும். ஏழரை ஆண்டு சநியிந் பாதிப்பு நீங்கும்.பாபம் விலகும்,. ஆயுள் அதிகரிக்கும்.
|
|