Post by radha on Jul 4, 2017 5:47:59 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
ஏகாதசி, சஷ்டி, பிரதோஷம்... சங்கடங்கள் தீர்க்கும் `திதி’ விரதங்கள்!
இரா.செந்தில் குமார்
நம் முன்னோர்கள் நமக்களித்த ஆன்மிக நெறிகள் அனைத்தும் ஏதோ போகிறபோக்கில் சொல்லிச் சென்றவை அல்ல. ஆன்மிகரீதியாக மட்டுமல்லாமல், அறிவியல்பூர்வமாகவும் நம் மனதுக்கும் உடலுக்கும் நன்மை தரும் வகையில் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகள் அவை. அந்த வகையில் நாம் அனுஷ்டிக்கவேண்டியவை எனச் சொல்லப்பட்டிருக்கும் பல நடைமுறைகளில் விரதங்களை அனுஷ்டிப்பதும் ஒன்று. இவற்றில் நட்சத்திர விரதங்கள், திதி விரதங்கள், பண்டிகை விரதங்கள் என பல வகைகள் உள்ளன. திதிகளில் அனுஷ்டிக்கவேண்டிய சில விரதங்களை இங்கே நாம் பார்ப்போம்.
ஏகாதசி விரதம்
`ஏகாதசி' என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில், `பதினொன்று' என்று பொருள். அமாவாசை தினத்துக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்த 11-வது நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் என்பதால், இது `ஏகாதசி திதி விரதம் என்று அழைக்கப்படுகிறது. ஏகாதசி விரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும்.
ஏகாதசி விரதத்தில் முக்கியமானது 'வைகுண்ட ஏகாதசி'. மற்ற ஏகாதசி விரதங்களைக் கடைப்பிடிக்க முடியாதவர்கள், 'வைகுண்ட ஏகாதசி' விரதத்தை மட்டுமாவது கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டும். ஏகாதசி விரதம், மகாவிஷ்ணுவுக்காகக் கடைப்பிடிக்கப்படுவது. விரத நாள்களில் உபவாசம் இருப்பதோடு, 'விஷ்ணு சகஸ்ரநாம'த்தை பாராயணம் செய்து பிரார்த்திக்க வேண்டும். வீண் கேளிக்கை விஷயங்களில் சிந்தனையைச் செலுத்தக்கூடாது. விஷ்ணு பகவானைப் பாடல்களால் துதித்து, 'அவரே கதி' என்ற சரணாகத மனதுடன் இருக்க வேண்டும்.
திரயோதசி விரதம் (பிரதோஷம்)
அமாவாசை தினத்துக்கும், பௌர்ணமி தினத்துக்கும் அடுத்து வரும் பதிமூன்றாம் திதி 'திரயோதசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் 'பிரதோஷ விரதம்.’ மாதத்துக்கு இரு முறை திரயோதசி திதியில் கடைப்பிடிக்கப்படுவதால், இது 'திரயோதசி திதி விரதம்' என்றும் அழைக்கப்படுகிறது.
அமாவாசைக்கு அடுத்து வரும்போது 'சுக்கிலபட்ச திரயோதசி' என்றும், பௌர்ணமியை அடுத்த திரயோதசி 'கிருஷ்ணபட்ச திரயோதசி' என்றும் அழைக்கப்படுகிறது. பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷம், மூவுலகையும் அழிக்க இருந்த பேரழிவில் இருந்து சிவபெருமான் காப்பாற்றிய தினம்தான் திரயோதசி. எனவே, அன்றைய தினம் விரதம் இருந்து, மாலை பிரதோஷ வேளையில் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபடுவதால், அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி, சிவபெருமானின் அருளால் சந்தோஷமான வாழ்க்கை அமையும். சனிக்கிழமைகளில் வருவது 'மகா பிரதோஷம்' என்று சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. புதிதாக பிரதோஷ விரதத்தை மேற்கொள்ள விரும்புவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் வரும் சனி மகா பிரதோஷ நாளில் கடைப்பிடிப்பது நல்லது. விரத நாளில் காலை முதல் மாலை வரை உபவாசம் இருக்க வேண்டும். பிரதோஷ நேரமாகிய மாலை 4:30 முதல் 7 மணி வரை ஆலயங்களுக்குச் சென்று, பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு இறைவனைத் தரிசித்த பின்னர் உணவருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
அஷ்டமி விரதம்
அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் அடுத்துவரும் எட்டாவது நாள் அஷ்டமி திதி. இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் என்பதால், இது 'அஷ்டமி திதி விரதம்' என்று அழைக்கப்படுகிறது. அஷ்டமி நாளில் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை பெரும்பாலும் உண்டு. ஆனால், தீய செயல் செய்பவர்களுக்கே இது பொருந்தும்; நற்செயல் செய்பவர்களுக்குப் பொருந்தாது. அஷ்டமி விரதமானது பைரவருக்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
திருமாலின் அவதாரமான கண்ணன் அஷ்டமி திதியில் பிறந்தவர். அவர் பிறந்த தினம் 'கோகுலாஷ்டமி' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
வைகாசி 'அஷ்டமி விரதம்' சிவனுக்குரிய விரதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமி, தட்சிணாமூர்த்திக்காக மேற்கொள்ளப்படுகிறது. அஷ்டமி திதியில் துர்கைக்கு விரதம் இருந்து வழிபடுவது, உத்தமப் பலன்களைத் தரும். அஷ்டமி விரதம், சகலவிதமான கஷ்டங்களையும் போக்கும்.
சஷ்டி விரதம்
அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் அடுத்த ஆறாவது நாள் சஷ்டி. 'ஷட்' என்றால் 'ஆறு' என்று பொருள். அதனால்தான் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது. அமாவாசையைத் தொடர்ந்து வருவது, `வளர்பிறை சஷ்டி’ என்றும், பௌர்ணமியைத் தொடர்ந்து வருவது `தேய்பிறைசஷ்டி’ என்றும் அழைக்கப்படுகிறது. 'சஷ்டி விரதம்' முருகனுக்காக கடைப்பிடிக்கப்படுகிறது. சஷ்டி விரதம் இருந்தால், குழந்தைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும், புதிதாக வேலைக்குச் சேருவதற்கும், வாகனங்கள் வாங்குவதற்கும் உகந்தநாள் இது. முருகப் பெருமான் சூரனை அழித்த தினமே 'கந்த சஷ்டி' விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதம் தேய்பிறை சஷ்டி விரதம் விநாயகருக்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
பௌர்ணமி விரதம்
நம் இயற்கை வழிப்பாட்டின் தொடர்ச்சியாக இன்றளவும் கடைப்பிடிக்கப்படுவது பௌர்ணமி விரதம். இது பௌர்ணமி தினத்தன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இது அம்பிகையின் அருளைப் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் விரதம். விரத நாளில் காலை முதல் இரவு வரை விரதம் இருந்து, `லலிதா சகஸ்ரநாமம்’ போன்ற தேவி ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும். மாலையில் பௌர்ணமி நிலவு தோன்றியதும், அம்பிகைக்கும் சந்திரனுக்கும் பூஜைகள் செய்து, விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். பெண்களுக்கு என்று பிரத்தியேகமாக அமைந்திருக்கும் பௌர்ணமி விரதத்தைக் கடைப்பிடித்தால், மாங்கல்ய தோஷம் நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும். திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும்.
சங்கடஹர சதுர்த்தி விரதம்
இது மாதத்துக்கு ஒருமுறை பௌர்ணமியில் இருந்து நான்காவது நாள் கடைப்பிடிக்கப்படும் விரதம் . 'ஹர' என்றால் அழித்தல் என்று பொருள். சங்கடங்கள் அனைத்தையும் அழிக்கும் வல்லமை 'சங்கடஹர சதுர்த்தி' விரதத்துக்கு உண்டு. விநாயகரை வழிபட பல்வேறு விரதங்கள் இருந்தாலும், 'சங்கடஹர சதுர்த்தி' மிக முக்கியமானது. முதன்முதலாக கடைப்பிடிப்பவர்கள் ஆவணி மாதத்தில் தொடங்குவது நலம்.
செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பான ஒன்று. இது, 'மகா சங்கடஹர சதுர்த்தி' என்று அழைக்கப்படுகிறது.
திதிகளில் கடைப்பிடிக்கக்கூடிய இந்த விரதங்களைக் கடைப்பிடித்தால், இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும். சகல சௌபாக்கியமும் உண்டாகும். நாள்பட்ட நோய்கள் குணமாகும். நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உண்டாகும். தோஷங்கள் நீங்கும்.
மிக முக்கியமான இந்த ஆறு விரதங்களையாவது சரியாகக் கடைப்பிடித்து வாழ்வோம். சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Ananda SAKTHI vikatan