VAIKUNDA EKADASI VRIDHAM ENSURES. BIRTHLESS LIFE
Jan 9, 2017 6:39:10 GMT 5.5
durgaramprasad likes this
Post by radha on Jan 9, 2017 6:39:10 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
தாயிற் சிறந்ததோர் கோவில் இல்லை; காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை; கங்கையை விட சிறந்த தீர்த்தம் இல்லை; ஏகாதசியை விட சிறந்த விரதம் இல்லை; என புராணங்கள் கூறுகின்றன.
அத்தகைய மகிமை வாய்ந்த வைகுண்ட ஏகாதசி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவத் கீதையில் கண்ணபிரான் கூறி உள்ளார். இதனால் மார்கழி மாதம் பெருமைக்குரிய மாதமாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் (சுக்ல–கிருஷ்ண) வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள். இதில் தனுர் மாதத்தில் (மார்கழி) வளர் பிறையில் 11–வது நாளன்று வரும் ஏகாதசி தான் வைகுண்ட ஏகாதசி. இதனை பெரிய ஏகாதசி, மோட்ச ஏகாதசி என்றும் அழைப்பர்.
மனிதன் பிறவி என்னும் சுழற்சியில் இருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதையே விரும்புகிறான். அந்த நோக்கத்தை அடைய செய்யக்கூடியது இந்த ஏகாதசி விரதம்.
‘‘வைகுந்தம் புகுவது மன்னவர் விதியே’’ என்பதற்கேற்ப ஜீவாத்மா, பரமாத்மாவோடு சேர்வது என்பது தான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவது தான் பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறப்பும், வைகுண்ட ஏகாதசி திருநாளும்.
வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும். சொர்க்கவாசலின் கீழ் விரஜா நதி ஓடுவதாக ஐதீகம். பகவான் சொர்க்க வாசலை கடந்து செல்லும்போது அவரை தொடர்ந்து செல்லும் பக்தர்கள் விரஜா நதியில் நீராடிய பலனை அடைவதாகவும், அதன்மூலம் பாவங்கள் நீங்குவதாகவும் கூறப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருந்து சொர்க்க வாசல் வழியாக சென்று மகா விஷ்ணுவை துதிப்போருக்கு இந்த பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு ஆகியவற்றை பகவான் வழங்குவதோடு மறு பிறவியில் வைகுண்டபேறு (சொர்க்கம்) வழங்குவதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
ஏகாதசி மரணம், துவாதசி தகனம் என்ற சொல் வழக்குக்கேற்ப ஏகாதசி திதியில் ஒருவர் காலமாவதும், அடுத்த திதியாகிய துவாதசியில் உடல் தகனம் செய்வதும் வெகு புண்ணியம் என புராண நூல்கள் கூறுகின்றன. 6 வயது முதல் 60 வயது வரை உள்ளஆண், பெண்கள் அனைவரும் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கலாம். ஏகாதசியன்று உபவாசமிருந்து மகா விஷ்ணுவை வழிபட்டு துவாதசியன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு ஒருவருக்கு ஆடை தானம், அன்னதானம், தாம்பூலம், தட்சணை வழங்குவது மிகச்சிறந்த பலனை அளிக்கும்.
ராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர். சுவாமியும் பிரம்மா மற்றும் தேவர்களுக்கு தரிசனம் அளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெறவேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது. துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்கு திருக்காட்சி கொடுத்து அவர்களுக்கு அருளாசி புரிந்தாள். அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை துதிப்போருக்கு அனைத்து நலன்களையும் பகவான் வழங்கி வருகிறார். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புடையது. அங்கு வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படும். ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்து நாட்கள் பகல் பத்து என்றும் அடுத்த பத்து நாட்களை இராப்பத்து என்றும் கொண்டாடுகிறார்கள்.
கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி பாடல்களை பெருமாள் முன் பாடி காட்டினார். இதனால் ஆனந்தம் அடைந்த பெருமாள், திருமங்கை ஆழ்வாரிடம் வேண்டிய வரத்தை கேள் என்றார். அதற்கு அவர் ஏகாதசி விழாவில் வேதங்களைக் கேட்டு மகிழ்வது போல் தமிழ் மொழியில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி பாடல்களை கேட்டருள வேண்டும் என்றார். அப்படியே ஆகட்டும் என்று பெருமாளும் வரமளித்தார்.
திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர் பாடிய திருமொழி பாடல்களையும் மற்ற ஆழ்வார்கள் பாடிச் சென்ற பாடல்களையும் பெருமாள் கேட்டருளும் விதமாக வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடக்கமாக பகல் பத்து உற்சவம் கொண்டாடப்படுகிறது.
பகல் பத்தில் நம்மாழ்வாரின் பாசுரங்களை தவிர திருமங்கையாழ்வாரின் திருமொழிப்பாசுரங்களும் ஓதப்படும். இதனால் பகல்பத்து திருவிழா திருமொழித்திருவிழா என்றும் பெயர் பெற்றது. இராப்பத்து காலங்களில் நம்மாழ்வரின் திருவாய்மொழி பாசுரங்கள் ஓதப்படுவதால் திருவாய்மொழித்திருவிழா என அழைக்கப்படுகிறது. இந்த உற்சவத்திற்கு திரு அத்யயன உற்சவம் என்று பெயர். திருமங்கையாழ்வார், நாதமுனிவர், ராமானுஜர் ஆகியோரால் ஆகமவிதிப்படி நடைபெறும் இந்த திருவிழாவில் 20–ம் நாள் நம்மாழ்வார் மோட்சமடைவதாகவும், பின்னர் பக்தர்கள் வேண்டுகோளின் படி நம்மாழ்வாரை பெருமாள் நமக்கே தந்தருள்வதாகவும் தத்ரூபமாக பாவனை மூலம் நடத்தி காட்டப்படும்.
இந்த திருவிழா நாட்களில் விலை உயர்ந்த திரு ஆபரணங்கள் உள்பட பல்வேறு அலங்காரங்களுடன் தினமும் காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் அபிநயத்துடன் பாடும் பாடல்களை கேட்டருள்வார். பகல்பத்து உற்சவத்தின் 10–ம் நாள் காலை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்வார். இராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். பெருமாள் வடக்குவாசல் வழியாக எழுந்தருள்வார். அதை தரிசிப்பவர்களுக்கும் அதன் வழியாக வருபவர்களுக்கும் பெருமாள் பிறவி பிணியில் இருந்து விடுவித்து மோட்ச நிலையை தந்தருள்வார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.
அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட சொர்க்கவாசல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும். ஒரு நாள் தவிர (15–ந் தேதி–வேடுபறி உற்சவம்) தொடர்ந்து 17–ந் தேதி வரை திறந்து இருக்கும். நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சி 18–ந் தேதி நடக்கிறது. அன்று நம்மாழ்வாரை நம்பெருமாள் திருவடிகளில் சமர்ப்பித்து துளசி இலைகளால் அர்ச்சித்து மோட்சம் அளிப்பது கண்கொள்ளா காட்சி ஆகும்.
சொர்க்கவாசல் திறக்காத பெருமாள் கோவில்கள்
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சொர்க்கவாசல் கிடையாது. மகாலட்சுமியை மணமுடிப்பதற்காக திருமால் வைகுண்டத்தில் இருந்து தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார். இங்கு உத்திராயன, தட்சிணாயன வாசல்கள் தனித்தனியாக உள்ளன. இந்த வாசல்களை கடந்து சென்றாலே பரமபதம் (மோட்சம்) கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதேபோல திருச்சி அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாசன் பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவியை மணமுடிப்பதற்காக பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேராக வந்ததால் இக்கோவில் பூலோக வைகுண்டமாக திகழ்கிறது. இங்கும் வைகுண்ட ஏதாசியன்று சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. தாயார் நாமம் செங்கமலதாயார். இங்கும் தட்சிணாயன, உத்தராயண வாசல் உள்ளது. திருச்சியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.
மோகினி அலங்கார தத்துவம்
வைகுண்ட ஏகாதசியின் போது பகல்பத்து திருநாளில் 10–ம் திருநாள் எம்பெருமான் மோகினி அலங்காரத்துடன் காட்சி தருவார். மனிதன் வாழ்வில் மண், பொன், பெண் ஆசைகளை கடக்க முடியாது. இதில் பெண்ணாசையை வெல்வது கடினம். திருப்பாற்கடலில் தோன்றிய அமிர்தத்தை அசுரர்களுக்கு கிடைக்காமல் செய்வதற்காக திருமால் மோகினி வேடம் தாங்கினார். அதில் மயங்கிய அசுரர்கள் அமிர்தத்தை இழந்தனர். பெண்ணாசையால் மதி இழக்காமல் இறைவன் காட்டிய மார்க்கத்தில் சென்றால் வைகுண்டம் நிச்சயம் என்பதை பக்தர்களுக்கு ரெங்கநாதர் உணர்த்துகிறார். இதுவே மோகினி அலங்கார தத்துவமாகும்.
தங்க பல்லியை வணங்கும் பக்தர்கள்
ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கும் போது பக்தர்கள் கூட்டம், கூட்டமாக உள்ளே செல்வார்கள். அப்போது வாசலுக்கு மேலே சிற்ப வடிவமாக இரண்டு தங்க பல்லிகள் பதிக்கப்பட்டிருக்கும். அதை பக்தர்கள் பயபக்தியுடன் வணங்குவார்கள். அதாவது பல்லி புவி ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்படாமல், தானே சுற்றுச்சுவர்களிலும், மேற் சுவர்களிலும் வேகமாக ஊர்ந்து செல்லும் இயல்புடையதாகும். அது போல பக்தர்கள் உலக பந்தங்களில் பற்று வைக்காமல், விலகி சென்றால் இறைவனின் சொர்க்கவாசல் அவர்களுக்கு கிடைக்கும் என்பதே அதன் தத்துவம்.
தீபஜோதியில் ஜொலிக்கும் குருவாயூரப்பன் கோவில்
கேரளாவில் வைகுண்ட ஏகாதசியை விருட்சிக ஏகாதசி என்ற பெயரில் கொண்டாடுவர். குருவாயூரில் ஏகாதசி விழா 18 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது தீப ஸ்தம்பங்களில் விளக்குகள் ஏற்றி கோவிலை சொர்க்கலோகம் போல மாற்றி கொண்டாடுவர்.
ஏகாதசியன்று காலை 3 மணி முதல் மறுநாள் துவாதசி வரை கோவில் திறந்தே இருக்கும். ஏகாதசியன்று குருவாயூரப்பனை தரிசித்தால் சொர்க்க வாசலை மிதித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பகவத்கீதை உபதேசித்த தினம்
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையே நடந்த குருஷேத்திர யுத்தத்தின்போது அர்ச்சுனன் மனம் தளர்ந்து காண்டீபம் வில்லை கீழே வைத்து விட்டு போரிட மறுத்து விடுகிறான். வைகுண்ட ஏகாதசியன்று பகவான் கண்ணன், அர்ச்சுனனுக்கு பகவத்கீதையை உபதேசம் செய்தார்.
தேவர்களும், அசுரர்களும் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தபோது அமுதம் வெளிவந்த நாளும் வைகுண்ட ஏகாதசி என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பார்த்தசாரதி கோவில்
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசியான இன்று முத்தங்கி (முத்தாலான ஆடை) அணிவிக்கப்படுகிறது. காலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த தலத்தில் மூலவர் மீசையுடன் காட்சி தருகிறார்.
சொர்க்கத்தை விரும்பாத அனுமன்
ஸ்ரீராமதூதன் அனுமன் ராமனுக்கு சேவை செய்வதையே தன் பிறவிக் கடன் என நினைப்பவர். அனுமனுக்கு அருள் செய்ய நினைத்த ராமர் அனுமனை பார்த்து, ‘நீ பரமபதத்துக்கு (சொர்க்கம்) வருகிறாயா?’ என்று கேட்டார். அதற்கு அனுமன் இந்த பூவுலகம் உங்கள் பாதம் பட்டதால் புண்ணிய பூமி ஆயிற்று. அமிர்தத்தைவிட மேலான ராமநாமத்தை சொல்லி பரமபதத்தில் கூத்தாட முடியாது. எந்த சிறப்புமே இல்லாதது பரமபதம். பூமியில் உங்கள் திருப்பெயரைச் சொல்லிக் கொண்டே மகிழ்ச்சியாக இருப்பேன். பரமபதத்துக்கு வர மாட்டேன் என்று கூறிவிட்டார். ராமனும் அனுமனின் பக்தியை கண்டு மகிழ்ந்து என்றும் அழியாமல் இருக்கும் சிரஞ்சீவி பட்டத்தை வழங்கினார். அஸ்வத்தாமர், மகாபலி, வியாசர், அனுமன், கிருபாச்சாரியார், பரசுராமர், விபீஷணர், மார்க்கண்டேயர் ஆகியோர் சப்த சிரஞ்சீவிகள் ஆவர்.
ஒரே ஆண்டில் 2 முறை வைகுண்ட ஏகாதசி
இந்த ஆண்டு தொடக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைகுண்ட ஏகாதசி வருகிறது. ஆண்டு முடிவில் டிசம்பர் மாதம் 29–ந் தேதி மீண்டும் வைகுண்ட ஏகாதசி வருகிறது. ஒரே ஆண்டில் 2 முறை கொண்டாடப்படுகிறது.
சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்?
சொர்க்கவாசல் திறக்கப்படுவது பற்றி புராணங்களில் கூறப்படும் கதை வருமாறு:–
அவதார புருஷரான எம்பெருமாளுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர் தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி பெருமாளிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின் தொடர்ந்து வருபவர்களும் அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக்கொண்டார். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சாமி பவனி வரும் நிகழ்ச்சி ஏற்பட்டது.
நவ திருப்பதி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் இரவில் திறப்பு
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் அதிகாலையில் தான் திறக்கப்படும். ஆனால் நெல்லை மாவட்டம் நவதிருப்பதிகளில் ஸ்ரீவைகுண்டம், வரகுணமங்கை (நத்தம்), திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர் ஆகிய கோவில்களில் வைகுண்ட ஏகாதசியன்று இரவு 7 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். பின்னர் இந்த கோவில்களில் இருந்து மாலைகள் ஆழ்வார் திருநகரியில் உள்ள பன்னிரு ஆழ்வார்களில் முதல்வரான நம்மாழ்வார் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு நம்மாழ்வாருக்கு மரியாதை செய்யப்படும். அதன்பின்னர் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு மறுநாள் (துவாதசி) காலை 5 மணி அளவில் ஆழ்வார் திருநகரி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.
அதேபோல் ராமநாதபுரத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியன்று இரவில் தான் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்
108 திவ்ய தேசங்களில் 106 திவ்ய தேசங்கள் மட்டும் பூமியில் உள்ளன. 107–வது திவ்ய தேசம் திருப்பாற்கடல். 108–வது திவ்ய தேசம் வைகுண்டம் ஆகும். வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் திருப்பாற்கடல் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரசித்திப்பெற்றது. சிவலிங்கத்தின் மீது பிரசன்ன பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தரும் அற்புத தலம் இது. அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் உள்ள இந்த கோவிலை தரிசித்தால் திருப்பாற்கடலை தரிசித்த பலன் கிடைப்பதாகவும், பாவங்கள் அனைத்தும் விலகுவதாகவும் தலபுராணம் கூறுகிறது. இன்று வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
பரமபதம்
வைகுண்ட ஏகாதசியன்று பக்தர்கள் இரவில் பரமபதம் விளையாடுவார்கள். இந்த விளையாட்டின் போது ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கத்தை அடையலாம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் கீழே வர நேரிடும். ஏணி என்பது புண்ணியத்தையும், பாம்பு என்பது பாவத்தையும் குறிக்கும்
புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கத்தை சென்று அடைவார்கள். பாவம் செய்தவர்கள் வாழ்க்கையில் கீழே இறங்கி இன்னல்களை அடைவார்கள் என்பதையே பரம பதம் விளையாட்டு வலியுறுத்துகிறது.
திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி தசமியன்று இரவு ஏகாந்த சேவை முடிந்தவுடன் தங்கவாசல் மூடப்படுகிறது. பிறகு விடியற்காலை ஏகாதசியன்று சுப்ரபாதம் தொடங்கி மறுநாள் துவாதசி இரவு ஏகாந்த சேவை வரையிலும் திருவேங்கடவன் கர்ப்பக்கிரகத்தை ஒட்டியுள்ள முக்கோடி பிரதட்சண வழியை திறந்து வைத்திருப்பார்கள்.
ஏகாதசி, துவாதசி ஆகிய இரண்டு நாட்களும் திருவேங்கடவன் தரிசனத்திற்குப் பிறகு முக்கோடி பிரதட்சணம் வழியாக வெளியே செல்வார்கள். இந்த முக்கோடி பிரதட்சண நுழைவு வழியை வைகுண்ட வாசல் என்றும் அந்த வழியை வைகுண்ட பிரதட்சணமென்றும் கூறுவர். திருமலையில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நாளை (திங்கட்கிழமை) துவாதசியன்று சூரியோதய நேரத்தில் சுவாமி புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். வைகுண்ட ஏகாதசியன்று மூன்று உலகங்களிலும் உள்ள 3 கோடியே 50 லட்சம் புண்ணிய தீர்த்தங்களும், புஷ்கரணிகளும், அனைத்து தேவதைகளும் திருமலையில் உள்ள சுவாமி புஷ்கரணியில், சூட்சம ரூபத்தில் குடிக்கொண்டிருப்பதாக ஐதீகம்.
சக்கரத்தாழ்வார் திருமலையில் வீதி உலாவாக சுவாமி புஷ்கரணிக்கு வந்து சேருவார். அங்கு அவருக்கு அபிஷேகம் ஆன பிறகு புஷ்கரணியில் பவித்ரஸ்நானம் செய்வர். சக்கரஸ்நானம் நடைபெறும்போது பக்தர்களும் புஷ்கரணியில் நீராடி வைகுண்ட ஏகாதசி விரத பலனை முழுமையாக அடைகிறார்கள்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM