Post by radha on Sept 29, 2016 5:50:26 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
நமது முன்னோர் காலத்தை பலவாறாகப் பிரித்துக் கணக்கிட்டார்கள். அவை ஆண்டு, பருவம், மாதம், பட்சம், வாரம், நாள் என்பவையாகும்.
ஆண்டு என்பது 12 மாதங்களை உடையது. அதையே சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு பிரித்து பருவங்களாக, ஒரு பருவத்துக்கு இரு மாதங்களாக மொத்தம் ாறு பருவ காலங்களைக் கூறினார்கள். நிலவின் சுழற்சியையும் சூரியனின் நகர்வையும் அடிப்படையாகக் கொண்டு மாதங்களைப் பகுத்தார்கள். மாதத்தின் சரிபாதியே பட்சம் எனப்படும். அமாவாசையை நோக்கிச் செல்லும் நாட்களை கிருஷ்ண பட்சம் எனவும் பௌர்ணமியை நோக்கி நகரும் நாட்கள் சுக்கில பட்சம் எனவும் கூறினார்கள்.
அதே போல மகாளய பட்சம் என்பதும் பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலம் ஆவணி மாதப் பௌர்ணமியை அடுத்த பிரதமையிலிருந்து புரட்டாசி அமாவாசை வரை உள்ள நாட்கள் மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது.
மகாளய பட்சம் என்றால் என்ன?
மகா+ஆலயம் என்பதே மகாளயம் என்றானது ஆன்மாக்கள் லயிக்கும் (ஒன்றுசேர்ந்திடும்) இடம் என்பதே ஆலயம். அதாவது முன்னோரின் ஆன்மாக்கள் பூவுலகில் வந்து லயிக்கும் நாட்களே மகாளய பட்சம் எனப்படுகின்றன. இந்த மகாளய பட்சத்தில் யமனின் அனுமதியோடு நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வருகிறார்கள். சூரியனின் ஒளிக்கதிர்கள் வழியாக வருகிறார்கள் என கருடபுராணம் கூறுகிறது. அப்போது அவர்கள் தங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என அனைவரும் தங்களை நினைக்கிறார்களா? உணவும் நீரும் வழங்குவார்களா? என்ற ஏக்கத்தோடு வருவார்கள். அப்போது நாம் அவர்களுக்குப் பிடித்த உணடு வகைகளையோ, பழ வகைகளையோ தானம் செய்தால் நம்மைத் தேடி பூமிக்கு வரும் அவர்கள் தாகமும், பசியும் தீர்ந்து மகிழ்வார்கள்.
பித்ருக்களுக்கு மகாளயபட்ச நாட்களில் மட்டுமேதான் தர்ப்பணம், சிரார்த்தம், நினைவஞ்சலி ஆகியவை செய்ய வேண்டும் என்பதில்லை. அந்த 15 நாட்களில் வசதிப்படாதவர்களும் முன்னோரின் திதி தினம் தெரியாதவர்களும் மகாளய அமாவாசையின் போது நீர்த்தார்கடன் செய்யலாம். அதேபோல், மகாளயபட்ச நாட்களில் நீத்தார் கடன் செய்தவர்களும் மகாளயபட்ச அமாவாசையன்று செய்வது அவசியம்!
பித்ருக்களுக்கு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும்?
மனிதனாகப் பிறந்தவர்களுக்கு ஐந்து கடமைகள் இருப்பதாக நமது இந்து மதம் சொல்கிறது. அவை
1. பித்ரு யக்ஞம்: முன்னோருக்கு முறைப்படி தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவை செய்வது.
2. தேவ யக்ஞம்: கடவுள் வழிபாடுகளை விரதங்களை முறைப்படி கடைப்பிடிப்பது
3. பூத யக்ஞம்: பசு, ஆடு, காக்கை, மீன் போன்ற மற்ற உயிரினங்களுக்கும் உணவளித்தல்
4. மனித யக்ஞம்: சக மனிதர்களான நோய்வாய்ப்பட்டவர்கள், யாசகர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவளிப்பது
5. வேத யக்ஞம்: தர்மநெறி தவறாமல் வாழ்வது.
மேலே குறிப்பிட்ட அத்தனை யக்ஞத்திலும் பித்ரு யக்ஞம் மிகவும் புனிதமானது. காரணம் அதிலேயே மற்ற அனைத்துக் கடமைகளும் அடங்கி விடுகின்றன என்பதால்தான்.
மகாளய அமாவாசையின் பெருமை
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாட்கள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏற்றவையே. அதேசமயம், மகாளய அமாவாசைக்கு தனிச் சிறப்பு உண்டு. அந்த நாளில் நாம் நம் குல முன்னோருக்கு மட்டுமன்றி காருண்ய பித்ருக்கள் எனப்படும் மற்றவர்களுக்காவும் செய்கிறோம். அந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகள் காருண்ய பித்ருக்களையும் திருப்திப்படுத்துகிறது என புராணங்கள் கூறுகின்றன.
காருண்ய பித்ருக்கள் யார்?
நாம் நமது வாழ்நாளில் பலரோடு நெருக்கமாகப் பழகுகிறோம். சிலர் நமது உறவினர்களைப் போலவே நெருக்கமாக இருப்பார்கள். ஆசிரியர்கள், குரு, பெற்றோரின் நெருங்கிய நண்பர்கள், நமது நண்பர்கள் என்று பலர் நம்மோடு நெருக்கமாக இருப்பார்கள். சாதாரண அமாவாசையின் போது செய்யப்படும் தர்ப்பணமானது நமது ரத்த சம்பந்தமுள்ள முன்னோரை அதாவது நம் குல முன்னோரை மட்டுமே சென்று சேரும். ஆனால் மகாளய அமாவாசையின்போது செய்யப்படும் படையல், தானம் போன்றவை நமக்குப் பிரியமானவரகளாக இருந்து இறைவனடி சேர்ந்த அனைவரையும் சென்று சேரும் என்று கூறப்படுகிறது. இவர்களையே காருணய பித்ருக்கள் என்று சொல்கிறோம். அதனாலேயே மற்ற அமாவாசைகளை விட மகாளய அமாவாசை மிகவும் ஏற்றம் பெற்றது என்று நம்பப்படுகிறது.
முன்னோர் வழிபாடு ஏன் செய்ய வேண்டும்?
நமது முன்னோர் பூத உடலை உதிர்த்துவிதட்டாலும் ஆன்மா சூட்சும வடிவத்தில் இருக்கும். அந்த சூட்சும வடிவில் இருக்கும் ஆன்மாக்களை திருப்திப்படுத்தாவிடில் அந்தப் பாவத்தின் காரணமாக சங்கடங்கள் வரலாம். உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் திருமணத்தடை, எத்தனை சம்பாதித்தாலும் பணம் சேராமல் போதல், பணியிடத்தில் கெட்ட பெயர், கணவன் - மனைவிக்குள் பிரிவுகள், குடும்பத்தில் சச்சரவுகள், தீராத கடன் தொல்லை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று சிலருக்கு இருக்கலாம். இப்படிப்பட்ட பிரச்னைகள் ஏதாவது வரலாம். அதற்குக் காரணம் அவர்கள் பித்ருக்களுக்கு முறையாக எள்ளும் நீரும் கொடுக்காததாலேயே ஆகும்.
முன்பே சொன்னபடி மகாளய பட்சத்தின் போது முன்னோர்கள் ஆன்ம வடிவில் பசியோடும், தாகத்தோடும் பூவுலகுக்கு இறங்கி வருவார்கள். அவர்கள் பூவுலகு வரும் நாட்கள் மிகவும் குறைவு. மாத அமாவாசை, அவர்களது திதி நாள், இவை தவிர மகாளய பட்சம் ஆகியவைதான். அப்போது நாம் அவர்களின் பசியையும் தாகத்தையும் போக்காவிட்டால் அவர்கள் மனம் வேதனை அடையும். அந்த ஆன்மாக்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமையை நினைவுபடுத்தவே தடைகள் பல ஏற்படும். எனவே மற்ற அமாவாசை நாட்களில் செய்ய முடியாமல் போனாலும் மகாள அமாவாசை அன்று பித்ருகடன் செய்தால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசிர்வாதம் செய்வார்கள். காரணம் இந்த நாட்களில்தான் அவர்கள் அதிக நேரம் பூமியில் இருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடவுளின் அவதாரமான ஸ்ரீராமரும் தனது முன்னோருக்கு மகாளய அமாவாசையின் போது தர்ப்பணம் செய்தார். அதன் பலனாலேயே தான் யாராலும் வெல்ல முடியாத ராவணனை வென்றாராம். தசரதன், நளன், அரிச்சந்திரன், கார்த்த வீரியார்ஜூனன், யயாதி, துஷ்யந்தன் ஆகியோரும் மகாளய அமாவாசை அன்று முன்னோருக்கு வழிபாடுகள் செய்து பல சிறப்புகளைப் பெற்றுள்ளனர்.
வழிபாடு செய்யும் முறை
இப்படித்தான் செய்யவேண்டும் என்று கண்டிப்பான வழிமுறைகள் ஏதும் இல்லை. ஆனால் செய்வதை மழு மனதாக பூரண கவனத்துடன் செய்ய வேண்டும். அப்படி இல்லாவிடில் பலன் கிட்டாது என்பது முக்கிய விதிமுறை. அவரவர் குல வழக்கப்படி சைவச் சாப்பாடு செய்து துறவிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும் அன்னதானம் செய்யலாம். அப்படிச் செய்யும் அன்னதானமானது நம் பித்ருக்களைச் சென்று சேர்ந்து திருப்திப்படுத்துகிறது.அவர்கள் ஆசிர்வாதம் நமக்குக் கிடைப்பதால் வாழ்க்கையில் வெற்றியும், மங்களமும் நிறைந்திருக்கும்.
நதிக்கரையிலோ, கடற்கரையிலோ, முன்னோரை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று கூறுகின்றன புராணங்கள். அவர்கள் மனம் குளிர அன்னதானம், வஸ்திர தானம், பழ வகைகள் தானம் போன்றவற்றைச் செய்தல் நன்மை பயக்கும்.
என்னென்ன பொருட்களை தானமாகக் கொடுத்தால் பலன் கிடைக்ம் என்றும் பார்க்கலாம்.
அன்னதானம் - வறுமையும் கடனும் நீங்கும், வஸ்திர தானம் - ஆயுள் அதிகமாகும், தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும், விளக்கு - கண் பார்வை ஒளி பெறும், அரிசி - பாவங்களைப் போக்கும், நெய் - நோய்களைப் போக்கும், பால், தயிர் - துக்கம் நீங்கும், பழ வகைகள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்.
மேற்கூறிய தானங்களைச் செய்ய, வசதியில்லாதவர்கள், பசுவிற்கு உணவளித்தால் எல்லா நற்பலன்களும் கிட்டும் என்று உபநிடதங்கள் கூறுகின்றன.
பசுவிற்கு என்னென்ன தரலாம்?
ஒரு கட்டு அகத்திக்கீரை கொடுத்தால் பலருக்கு அன்னதானம் செய்த பலன் கிட்டும், கன்றோடு இருக்கும் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்தால் தங்கம் தானம் செய்த பலன் கிடைக்கும். மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு கொடுத்தால் ரிஷிகளுக்கு பழ வகைளை சமர்ப்பித்த பலன் கிடைக்கும். அறுகம் புல்லை அளித்தால் நோய்களையும் பாவங்களையும் போக்கி நற்பலனை கொடுக்கும். இவை அனைத்தையும் விட நல்ல உணவுகளைச் சமைத்து அதனை தலை வாழையிலையில் வைத்து அப்படியே பசுவிற்கு உண்ணக் கொடுத்தால் ஏழு தலைமுறை பித்ரு தோஷமும் நீங்கி குடும்பம் செழிக்கும். கடன் தொல்லை, தீராத வியாதி, கணவன் - மனைவி ஒற்றுமையின்மை ஆகியவை நீங்கிவிடும்.
சகல தெய்வங்களும், தேவர்களும் பசுவின் உடலில் வசிப்பதால் அதற்கு செய்யும் தானம் பித்ருக்களை மிகவும் மகிழ்விக்கிறது.
இந்த வருடம் மகாளய பட்சம் செப்டம்பர் 17ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிகிறது. மகாளய அமாவாசை செப்டம்பர் 30ம் தேதி வருகிறது. முன்னோர்களையும், உற்றார், உறவினர், தெரிந்தவர்கள் என்று அனைத்து காருண்ய பித்ருக்களையும் நினைத்து வழிபாடு செய்யுங்கள். இயன்ற அளவு தானங்கள் செய்து பசுவிற்கு உணவளித்து முன்னோரது அருளாசியைப் பெற்று வாழ்வில் வெற்றியும் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலைக்கப் பெறுங்கள்.
- மைத்ரேயி
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM