Post by radha on Jul 30, 2016 6:26:23 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
ஆடிப்பூரத்தில் வளைகாப்பு
ஆடிப்பூரம் நட்சத்திரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்தில் விஷ்ணு சித்தர் என்னும் பெரியாழ்வாரின் துளசி நந்தவனத்தில் பூமாதேவி, குழந்தையாக அவதரித்தாள் என்று புராணம் கூறுகிறது. இந்நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலம் விழாக்கோலம் காணும். ‘ஆடிப்பூரம் ஆண்டாளின் அவதார தினமாக இருந்தாலும் அம்பாளுக்கும் உரிய நாளாகப் போற்றப்படுகிறது. ஆடிப்பூரத்திருநாளில்தான் அம்பிகை பூப்பெய்திய நாளாகக் கருதப்படுகிறது.
இந்நாளில் அம்பிகை அருள்பாலிக்கும் கோயில்களில் வளைகாப்பு வைபவ நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறும். அம்பாள் கைகளில் வளையல்களை அணிவித்தும், கண்ணாடி வளையல் சரங்களால் அலங்கரித்தும், பூஜைத்தட்டுகளில் வளையல்களைச் சமர்ப்பித்தும் வளைகாப்பு வைபவம் நடைபெறும். பூஜிக்கப்பட்ட வளையல்களை பெண்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.
சுமங்கலி பாக்கியம் நீடித்து நிற்கவும் சுகமான ஆரோக்கியமான வாழ்வு கிட்டவும் பெண்கள் வளையல்களைச் சமர்ப்பிப்பதுபோல், திருமணத்தடை உள்ள கன்னிப்பெண்களும், குழந்தைச்செல்வம் கேட்டு அம்பாளின் அருள்வேண்டி பிரார்த்திக்கும் பெண்களும் இந்த வளையல் சாத்தும் வைபவத்தில் கலந்துகொண்டு பலன் பெறுகிறார்கள். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வளைகாப்பு வைபவம் பதினாறு கால் மண்டபத்தில் ஆடிப்பூரத்தன்று மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர விழா, முளைக்கொட்டு விழா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த விழா நடைபெறும் பிராகாரத்திற்கு ‘ஆடி வீதி’ என்றே பெயர். திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் ஆலயத்தில் அம்பிகைக்கு ‘பூரம் கழித்தல்’ எனப்படும் ருது ஸ்நான வைபவமும், வளைகாப்பும் சிறப்பாக நடைபெறுகின்றன.
திருக்கருகாவூர் அம்மனுக்கும் ‘ருதுசாந்தி வைபவம்’ நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சித்து, பிரசாதமாகத் திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள். நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன்தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளாள். இங்கு ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்குப் ‘பூரம் கழித்தல்’ எனப்படும் ருது ஸ்நான வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது ஒன்பது கன்னிப்பெண்களை வரிசையாக உட்கார வைத்து நலங்கிட்டு வெற்றிலை-பாக்கு, பழம்,பூ, சீப்பு, குங்குமச் சிமிழ் மற்றும் ரவிக்கைத்துணி ஆகியவற்றை வழங்குகிறார்கள். திருச்சி உறையூர் அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள குங்குமவல்லி அம்மனுக்கு தை மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை வளையல் சாத்தும் வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
ஆடிப்பூரத்தன்று சுமங்கலிகளும், கன்னிப் பெண்களும் குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் தம்பதிகளும், சுகப்பிரசவம் வேண்டும் கர்ப்பிணிப் பெண்களும், அம்மனுக்கு அர்ச்சனையின்போது வளையல்களை பூஜைத்தட்டில் சமர்ப்பித்து, அர்ச்சித்து அதனைப் பிரசாதமாகப் பெற்று தங்கள் கைகளில் அணிந்து கொள்கிறார்கள். சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், திருச்சி திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி கோயில் மற்றும் பல அம்மன் கோயில்களில் ஆடிப்பூரம் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்தில் வடபத்ரகாளி கோயிலில் ஆடிப்பூரம் பத்து நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் திருவிடைமருதூர் முதலான தலங்களில் ஆடிப்பூரத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.
ஆடிப்பட்டம் தேடி விதைப்பார்கள். முளையிடுதல், விதைத்தல் போன்ற விவசாய வேலைகள் அன்னை பார்வதியை முன்னிறுத்தி தொடங்குவார்கள். முளைப்பாலிகையோடு தொடர்புடைய பார்வதி வழிபாடு, பூரத்தில் விசேஷம் அடைகிறது. ஆடிப்பூரம் இந்த வருடம் வெள்ளிக்கிழமை ஆடி 21 (5.8.2016) வருகிறது. இது மிகச்சிறப்பானது என்று வேதம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். எனவே, ஆடிப்பூர நாளில் திருவிழா நடைபெறும் திருத்தலங்களில் பூரம் நட்சத்திரத்தன்று பிறந்தவர்கள் அன்று அம்பாளை தரிசனம் செய்வதால் அனைத்து தோஷங்களும் விலகி நலம் பெறலாம் என்பது ஐதீகம். மற்றவர்களுக்கு சுகமான வாழ்வு கிட்டும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
- டி.ஆர்.பரிமளரங்கன்
ஆடியில் வழிபட்டால்...
ஹரித்வாரில் முக்கிய பகுதியாக விளங்கும் இடத்தை ஹர்கிபெளடி என்பர். இது ஒரு புனிதமான இடம். இந்தப் புனிதத் தலத்தைச் சுற்றி, பிரசித்தி பெற்ற நான்கு தேவி ஆலயங்கள் இருக்கின்றன. அவை: காளிமாதா கோயில், பகவதி சண்டிதேவி கோயில், மாயாதேவி கோயில், மானஸா தேவி கோயில். இவற்றில் மிகவும் பிரசித்தி பெற்ற மானஸாதேவி கோயில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. கருவறையில் மானஸாதேவியுடன் பளிங்குச் சிலையாகப் பல தெய்வங்கள் கொலுவிருந்து பார்ப்போரைப் பரவசப்படுத்துகின்றன. இந்த மானஸாதேவிக்குப் பன்னிரண்டு புனித நாமாக்கள் உள்ளன. அவளின் அருமை பெருமைகளை அந்த 12 நாமாக்களும் பறைசாற்றுகின்றன. கிருஷ்ண பரமாத்மா இவளை ‘ஜகத்காரு’ என்றும், வெண்ணிறம் கொண்டவளாதலால் ‘ஜகத்கெளரி’ என்றும், கச்யபர் மனதில் பிறந்ததால் ‘மானஸா தேவி’ என்றும், சிவனிடம் ஸித்தி பெற்றதால் ‘ஸித்தயோகினி’ என்றும், விஷ்ணு பக்தையானதால் வைஷ்ணவி என்றும், நாகர்களின் சகோதரியானதால் ‘நாகபகனி’ என்றும், சிவனின் சிஷ்யையானதால் ‘சைவி’ என்றும், யாகத்தில் நாகர்களின் உயிரைக் காப்பாற்றியதால் ‘நாகேஸ்வரி’ என்றும், ஜரத்காரு முனிவரின் பத்தினியாகையால் ‘ஜரத்காரு ப்ரியா’ என்றும், ஆஸ்தீக முனிவரின் அன்னையானதால் ‘ஆஸ்தீக மாதா’ என்றும், விஷத்தை நீக்கும் தன்மையுடையவளாதலால் ‘விஷ ஹரி’ என்றும், மூன்று உலகிலும் பூஜிக்கப்படுவதால் ‘விஸ்வபூஜிதா’ என்றும் 12 நாமாக்களால் போற்றப்படுகின்றாள்.
இந்தப் பன்னிரண்டு நாமாக்களையும் கூறி மானஸாதேவியைப் பூஜிப்பவர்களுக்கு நாக பயம் நீங்கும். வம்சம் தழைக்கும். ஆடி மாதம் முழுவதுமோ, ஆடி மாதப் பிறப்பு அன்றோ, ஆடி மாத முடிவிலோ, ஆனி-ஆடியில் வரும் ஆஷாட பஞ்சமியிலோ இவளை ஆராதிப்பவர்கள் பதினாறு செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் என்று இந்த நாமாக்களின் பலனைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. தீ மிதித்தல் திருவண்ணாமலையில் ஆடி மாதத்தில் ஆடிப்பூரத்தை இறுதிநாளாகக் கொண்டு பத்து நாட்கள் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. இந்த பத்து நாட்களும் அஸ்திரதேவர் எனப்படும் ‘சூலாயுதம்’ மட்டும் அம்மனுடன் மாடவீதி உலா வரும். பத்தாம் நாள் உச்சிகாலத்தில் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அன்று இரவு அம்மன் சந்நதி முன்புறம் ‘தீ மிதித்தல்’ உற்சவம் நடைபெறும். வேறு எந்த சிவன் கோயிலிலும் இல்லாத வகையில் தீ மிதித்தல் இக்கோயிலில் மட்டும்தான் மேற்கொள்ளப்படுகிறது.
இத்திருத்தலம் பஞ்சபூதத் தலங்களுள் நெருப்புத் தலமாகும். இறைவன் இங்கு அக்னி வடிவில் உள்ளார் என்பதாலேயே இங்கே தீ மிதித்தல் அனுசரிக்கப்படுகிறது என்கிறார்கள். ஆன்மாக்களை இறைவி இறைவன் பால் செலுத்தி அருள்பாலிக்க வேண்டி அன்னை பராசக்தி அத்தீயின் முன் எழுந்து அருள்புரிகிறார். அப்போது பக்தியோடு நோன்பிருக்கும் அன்பர்கள் அத்தீயின் மீது நடந்து செல்கின்றனர். இந்த நிகழ்ச்சி ‘தீ-விரத-சக்தி நிபாதம்’ எனப்படுகிறது. இதில் பங்கு பெற்றவர்கள் பேரொளியில் இரண்டறக் கலந்து இன்புற்றிருப்பார்கள் என்ற உண்மையை உணர்த்துகிறது. ஆடி சுவாதி, சுந்தரமூர்த்தி நாயனார் திருநட்சத்திரமாகும். இவ்விழா இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழாவினை இக்கோயிலில் உள்ள சிவாச்சாரியார்களே நடத்தி வருகின்றனர். சுந்தரரைச் சிவபெருமான் தடுத்தாட்கொண்ட நிகழ்ச்சியும், அவரது வரலாற்றையும் விழாவின் வாயிலாக மக்களுக்கு எடுத்துக் காட்டுகின்றனர். விழா முடிவில் சேரமான் பெருமாள் நாயனார் வெள்ளைக் குதிரையில் முன் செல்ல, சுந்தரர் வெள்ளை யானை மேல் கயிலைக்கு எழுந்தருளும் அற்புதக் காட்சி காணத்தக்கதாகும்.
அன்னைக்கு பலவண்ண ஆடைகள்
திருவானைக்காவல் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரி காலையில் லட்சுமி தேவியாகவும், உச்சிவேளையில் பார்வதி தேவியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் திகழ்வதாக ஐதீகம். அன்னைக்குப் பகல் நேரத்தில் பல வண்ண ஆடைகள் அணிவித்தாலும் இரவில் வெண்ணிற ஆடையை மட்டுமே அணிவிப்பது வழக்கம். இந்த அம்பாளுக்கு அகிலாண்டேஸ்வரி, அகிலாண்ட நாயகி, அகிலாண்டவல்லி, தண்டினி, தண்டநாயகி, சிதானந்த ரூபினி, ஞானமுதல்வி, கெளரி, பராபரை, மங்கை, குண்டலி, திரிபுர ஆயி, நாதவடிவி, அகிலம் புரத்தவள் என்று பல திருநாமங்கள் உண்டு. இத்தலத்து இறைவனையும் இறைவியையும் வழிபாடு செய்பவர்கள், ‘‘அமுத ராகு’’ என்னும் நித்திய பதவியை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது. அன்னை அகிலாண்டேஸ்வரியை வெள்ளிக்கிழமைகள்தோறும், குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டால் வருடம் முழுவதும் பலன் கிடைக்கும். இங்கு சில மணிநேரம் தங்கியிருந்து அன்னையின் திருநாமங்களை உச்சரித்து வந்தால் எடுத்த காரியம் எல்லாம் வெற்றி அடையும் என்பது சித்தர் பெருமக்களின் வாக்காகும்.
- ஆர்.சந்திரிகா
- See more at: astrology.dinakaran.com
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM