Post by radha on Feb 29, 2016 6:38:32 GMT 5.5
OM SRI GURUPYONAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
புராண நிகழ்வுகளின் மைய விஷயமே தலங்கள் உருவாவதில்தான் உள்ளது. தனி மனித ஞானத் தேடலின் உற்பத்தியே கோயில்கள்தான். அதுபோல புராணங்கள் அகங்காரத்தை நசிக்கச் செய்யும் விஷயத்தையே விதம்விதமான முறைகளில் விளக்கியபடி உள்ளன. அதில் கடவுளர்களே தம்மை அகங்காரம் மிக்கவர்களாக வேடம் பூண்டு நமக்காக நடத்திக் காட்டும் லீலைகளும் உண்டு. அப்படித்தான் இத்தலத்தில் விஷ்ணுவும், பிரம்மாவும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். அதுவே மகாசிவராத்திரியின் உற்பவமாகவும் அமைந்தது. அதை என்னவென்று பார்ப்போமா? மார்க்கண்டேயர் அருணாத்ரீசனை பற்றி சொல்லுங்கள் என்ற கேள்வியை வினவியவுடனேயே, நந்திதேவர் இரு கண்களையும் மூடிக் கொண்டார். இதயம் முழுதும் அருணையின் மகாத்மியம் நிரம்பி வழிய, வாக்கினால் எப்படி அவனைப் பற்றி முழுதும் சொல்வேன் என்று தவித்தார். சொல்ல வேண்டும் என்ற ஆவலும், முழுதும் சொல்ல முடியுமா எனும் இயலாமையும், மிகப் பெரிய பாரத்தை என்னை சுமக்க வைத்து விட்டாயே என்பதுபோல மார்க்கண்டேயரை தீர்க்கமாகப் பார்த்தார்.
ஏதோ சொல்ல ஆரம்பித்தால்போதும் அருணாசலன் என் நாக்கில் வந்தமர்வான். தன்னைத் தானே உரைத்துக் கொண்டு போய்விடுவான் என்று ஆறுதல் அடைந்தார். மகரிஷிகளும், ஞானிகளும் எத்தனை அவஸ்தையுற்றிருப்பார்கள் என்று அந்தக் கணம் அவருக்குப் புரிந்தது. கடலலை பின்னுக்கு மடிந்து உள்ளுக்குள் ஒடுங்குவதுபோல பெரு மூச்சை உள்ளிழுத்தார். மனம் நின்றது. வாக் தேவதைகள் திருநாவினில் வந்தமர்ந்தன. அருணேசன் தன் சரித்திரத்தை தர்மாதிபதி நந்திதேவர் சொல்லப் போகிறார் என்றவுடன் சுடர்போல ஜொலித்தார். உள்ளுக்குள் தேஜோமயமாக ஜொலிக்கும் அப்பெருஞ்சுடரை பார்த்து நந்தீசர் பேசத் தொடங்கினார். மனதற்ற தளத்திலிருந்து வரும் வாக்குகள் வேதம்போல தெறிக்கும். மார்க்கண்டேயர் அதி கூர்மை யானார். முகம் முழுதும் பூரிப்பும், இத்தனை கிட்டத்தில் ஈசன் இருக்கிறானா என்கிற ஒரு திகைப்பும் அவரை மகிழ்ச்சியில் முகிழ்த்தின.
நந்தீசனின் நாக்கு புரண்டெழுந்தது. அணிவகுத்து காத்திருந்த வாக் தேவதைகள் பிரித்துவிட்ட நெல்லிக்காய்களைப்போல சரசரவென வெளிவந்தனர். மார்க்கண்டேயரின் மன ஆகாயத்தில் பிரம்மனையும், விஷ்ணுவையும் நிறுத்தினார் நந்தீசர். அது பிரளயகாலம். ஆதிசிவனின் பேரன்பு புரண்டு மடிந்து ஆழிப்பேரலையாய் வானம் முட்டி எழுந்தது. ஆதிமாயையான மஹாமாயை, ஞானரூபிணியாக அண்டசராசரத்தையும் தன் மூலத்தோடு ஒடுக்கி ஒன்றிணைக்கும் சமயத்தில், அனைத்தையும் நீரால் கரைத்து நீரையும் தனக்குள் கரைத்து தானே சகலமுமாய் மாறி நிற்பாள். சகல ஜீவர்களின் சம்சார சகடச் சுழற்சியையும் கணநேரத்தில் மூலத்தின் லயிப்பில் சாந்த சமுத்திரமாய் விளங்கவைக்கும் ஊழிக்காலம் அது. ஈசனும், விஷ்ணுவும் யோக நித்திரையில் ஆழ மகாசக்தி பிரபஞ்ச நாடகத்தை நிறுத்தி யுகத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பேரற்புதமான நிகழ்வு அது. பிரம்மா தன் நான்கு சிரசுகளாய் விளங்கும் வேத அதிர்வுகளை மெல்ல வருடி தானும் பரம்பொருளுக்குள் சங்கமமாகி, அடுத்த பிரபஞ்சப் படைப்பில் எல்லாவற்றையும் பரவவிடுவார்.
அதில் அதிமுக்கியமான சப்த ரிஷிகளும் உயிரின் ஜீவ அணுக்களை தம்முள் கருவாய் பொதித்து மெல்ல ஈசனின் அகத்துள் ஏகும் அற்புதக் காலம் திரண்டு வந்தது. பிரளயத் தாண்டவம் தன் உச்சியை எட்டியது. எண்திசைகளும், தேசங்களும், காலமும் மறைந்து வெறும் பெருவெளியாகி நின்றது. சப்த ரிஷிகள் இன்னும் கூர்மையாயினர். ஆதிசிவன் அழகாய் ஏழு வாயில் அமைக்க அதற்குள் மெல்லப் புகுந்து ஒடுங்கினர். சப்த சமுத்திரங்களும் ஆர்ப்பரித்து எழுந்து குடையாய் கவிழ்த்து ஈசனுக்குள் ஒடுங்கியது. மகாசக்திக்குள் சப்த ரிஷிகளும் ஏகமாய் ஒடுங்க, சப்த சாகரங்களும் சிறு ஊற்றாய் மாறி உள்ளே நகர்ந்தது. இப்போது சிவம் மட்டும் அனைத்துமாகி நிற்பான். மீண்டும் அவன் சங்கல்பம் கொள்ள யுகம் தொடங்கும். படைப்பதை அழிப்பதும், அழித்ததை ஒடுக்கிக் கொள்வதும் மீண்டும் பிரபஞ்சமாக விரிப்பதும் அவனின் இடையறாத லீலைகள். பாம்பணையின் மீது பள்ளி கொண்டருளும் எம்பெருமானின் நினைப்பில் உலகம் உருவாகிறது. யோக நித்திரையில் சர்வமும் ஒடுங்கி பிரளய வெளியாகிறது.
பிரபஞ்சத்திலுள்ளதும், பஞ்ச பூதங்களாலும் பிணைக்கப்பட்டதுமான விஷயங்கள் தனித் தனியாக கிடந்தன. பிரிந்து கிடந்தவை மகாபிரளயத்தின்போது ஒன்றையொன்று விழுங்கி தனக்குள் கரைத்துக் கொள்கின்றன. மண்ணாகி சிதைந்ததை பிரளய ஜலம் கரைத்து விடுகிறது. அக்னி நீரை ஜீரணிக்கிறது. அக்னியை காற்று அணைத்து விடுகிறது. காற்று ஆகாயத்தில் ஒடுங்கும். ஆகாயமும் அழிந்த நிலை சூட்சுமமானது. அதுவே எல்லாவற்றிற்கும் அதிஷ்டானமாக விளங்குகிறது. எங்கு பார்த்தாலும் நீர் மயம். சகலமும் அழிந்த நிலை. அதன் மையத்தில் ஆலிலைமேல் கால் கட்டைவிரலை வாயில் வைத்துக் கொண்டிருந்தார், திருமால். பிரம்மன் மகாவிஷ்ணுவின் நாபியிலிருந்து தோன்றுகிறார். பிரளயத்தின் மையத்தே தான் எங்கிருக்கிறோம் என தேட ‘தப’ எனும் குரல் கேட்கிறது. தவம் செய். உனக்குள் தேடு என்றது. பிரம்மனும் தனக்குள் ஆழ எம்பெருமான் அவருக்குள்ளும் சயனித்துக் கிடந்தார். அதைப் பார்த்த பிரம்மன் பிரமித்தார். சங்கு சக்ர கதாதரனாக பெருமாள் விஸ்வரூபம் காட்டினார். வேத சொரூபமான பிரம்மா மிகுந்த ஸ்நேகத்தோடு நீங்கள் நினைத்தீர்கள் நான் வந்தேன் என்றார்.
எம்பெருமான் பிரபஞ்சப் படைப்பை தொடங்கு என்று ஆணையிட்டார். முதலில் தன்னிடமிருந்து நான்கு வேதங்களையும் கொண்டு உலகைப் படைத்தார்.” தத்துவ சிருஷ்டி எனப்படும் பிரபஞ்சத்தின் குண வேறுபாடுகளையும், இந்திரியங்களின் இயக்கத்தையும், ஒன்றுக்கொன்று எதிரெதிரான தேவதைகளையும் மகாவிஷ்ணு தானே உருவாக்கினார். பிரபஞ்ச சிருஷ்டியான தாவரங்கள், பறவை, விலங்குகள், மனிதர்கள் போன்றவற்றை பிரம்மா தானே உருவாக்கினார். பிறகு நான்கு முகங்களிலிருந்தும் நான்கு வேதங்கள் வெளிப்பட்டன. மரீசி, அத்ரி, ஆங்கிரஸ், புலஸ்தியர் போன்ற ரிஷிகளும் வெளிப்பட்டனர். சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் எதிலும் பற்றற்று பெருமாளையே தியானித்த வண்ணம் இருந்தனர். ஸ்வயம்புவ மனு என்று ஒருவரையும் படைத்தார். மனு வேறுயாருமல்ல மனித வர்க்கத்தின் முதல் பிரஜை. மனு என்பவன்தான் மனிதன், மனுஷன் என்றாயிற்று. எல்லா மொழிகளிலும் மனிதர்களை குறிக்க மனு எனும் வார்த்தையே மூலச் சொல்லாக அமைந்தது.
சங்கர்ஷணம் எனும் ஆகர்ஷண சக்தி புவி ஈர்ப்பு விசையாக பூமியை அந்தரத்தில் தூக்கி நிறுத்தியது. கிரகங்கள் சுழலத் தொடங்கின. எல்லையற்றதாக பேரண்டப் பிரபஞ்சங்களாக விரிந்தது. மலைகள் காற்றை தடுத்தன. மழையாக வருண பகவான் பூமியை அருளிச் செய்தார். செடிகள் செழித்தன. கொடிகள் படர்ந்தன. மரங்கள் விண்ணை உரசின. தேவர்கள், கந்தர்வர்கள், ரிஷிகள் சூட்சுமமாகவும், ஸ்தூலமாகவும் திரிந்தனர். தேவர்கள் எனில் அசுரர்களும் எதிர் சக்தியாக தோன்றினர். பூமியை புரட்டிப்போடும்படி அந்த இரு அசுரர்கள் அவதரித்தார்கள். பூமாதேவி தன்னை சற்று சுமையாக உணர்ந்தாள். சங்கர்ஷணம் எனும் ஈர்ப்பு சக்தி தளர்ந்தது. ஞான சொரூபமாக இருந்த பூவுலகத்தை மெல்ல இருள் கவ்வியது. பள்ளிகொண்டருளும் மகாவிஷ்ணு தான் அழைக்கப்படுவோம் என்று தயாரானார். பாற்கடல் பரந்தாமன் சட்டென்று எழுந்து அமர்ந்தார். தன் அகக்கண்களால் அந்த அசுரக் கூட்டத்தைப் பார்த்தார். அவர்கள் அதற்குள் தேவலோகம் போய்விட்டிருந்தார்கள். இந்திரனும் தேவக் கூட்டமும் இடிந்து போய் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அட்டூழியம் தாங்காது அலறித் துடித்தார்கள்.
‘எம்பெருமானே... எம்பெருமானே...’ என்று கைதொழுதார்கள். எம்பெருமான் வராஹமாய் கர்ஜித்தார். எம்பெருமானின் காதுகள் விடைத்து மேலே தூக்கியிருந்தன. பரந்த மார்போடும், திரண்ட தோள்களோடும் நடந்து வந்தார். நெடிதுயர்ந்து நிற்கும் எம்பெருமானை சகல தேவர்களும், ரிஷிகளும் தொழுது நின்றனர். வராஹர் வஜ்ரமாய் நின்றார். அதைக் கண்ட இரண்யாட்சன் இருண்டான். கோபமாய் அவரை தாக்க அந்தக் கூட்டத்தோடு பாய்ந்தான். வராஹர் கூட்டத்தை நசுக்கி நீரில் தூக்கிப் போட்டார். வராஹருக்கும், இரண்யாட்சனுக்கும் கடுமையான போர் நடந்தது. வராஹர் இரண்யாட்சனை இரண்டாகப் பிளந்தார். அவன் அலறலால் மூவுலகமும் அதிர்ந்தது. சமுத்திரத்தில் வீழ்ந்த பூலோகத்தை தன் நாசியின் நுனியில் தாங்கினார். பூமியை மீண்டும் நிறுத்தினார். லீலா வினோதமே இதற்குப் பிறகுதான் தொடங்கியது. பூமியை நிறுத்தி விட்டோம். தன்னால்தான் இப்படி நிறுத்த முடியும் என்று இல்லாத அகந்தையை தனக்கு இருப்பதாக காட்டிக் கொண்டார்.
பிரம்மா அகிலத்தின் நான்கு திசைகளையும் ஒரே நேரத்தில் கம்பீரமாக பார்த்தபடி நின்றிருந்தான். தன் காலடியில் இத்தனை பிரபஞ்சமா என கால் மடக்கினான். கோணலாய்ப் பார்த்தான். பார்வையில் கர்வம் எனும் கரும்புள்ளி திட்டாய் தெரிந்தது. அந்தப் புள்ளி வட்டமாய் வளர்ந்தது. நான்கு முகங்களும் மெல்ல இருண்டன. கர்வம் சிரசின் மீது சிம்மாசனம் போட்டு அமர்ந்தது. தன்னைத்தானே பார்த்துக் கொண்டான். மெல்ல மெல்ல தன் வேலையைக் குறைத்துக் கொண்டான். தான் எப்படி, எப்படி என்று பலபேரிடம் கேட்டு மகிழ்ந்தான். அவர்கள் பின்னே ஒரு மாபெரும் புராணத்தின் மையம் குடையாய் இருவரையும் மூடிச் சென்றது. ஈசனும் அதைக் கவனித்தவாறு மென்மையாச் சிரித்தார். ஆக்கல் எனும் தொழிலை செய்யும் பிரம்மாவுக்கு தான்தான் பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்கிறோம் எனும் அகங்காரம் கிளைவிட்டது. அருகேயிருந்த விஷ்ணுவிடமும் தம் அகங்காரக் கிளையை படரவிட்டது.
‘‘உமக்கொன்று தெரியுமா நீர் என்னதான் உயிர்களை காத்தாலும், நான் சிருஷ்டிக்கவில்லையெனில் உமக்கே வேலையில்லை” என கேலி பேசியது. ‘‘பிரம்மனே நீர் படைப்பது இருக்கட்டும். அந்த ஜீவனை காக்க வேண்டாமா. அதனுடைய சந்தோஷம் முக்கியமில்லையா. உன்னுடைய படைப்புகளுக்கு அழகு சேர்ப்பதே நான்தான். நான் காக்கவில்லையெனில் உன் படைப்புகள் அழிய வேண்டியதுதான். பிறகு உமக்கென்ன வேலை இருக்கிறது. உன்னைப் படைத்ததே நான்தான். என்னைவிட நீ உயர்ந்தவனா. நானே உன் குரு. இப்போது நீ இப்படிப் பேசுவதே நான் கொடுக்கும் சக்தியால் தான். அன்று ஈசன் உன்னுடைய ஐந்தாவது தலையை கிள்ளினாரே ஏதாவது செய்ய முடிந்ததா? என்னிலிருந்து வரும் என் தொழில்தான் உயர்ந்தது. இதிலிருந்தே நான் உயர்ந்தவன் என்பது வெளிப்படை” என்று சிறுவர்கள் போல அவர்கள் பேசிக் கொண்டார்கள். சொற்போராக இருந்தது.
ஆயுதப் போராக வளர்ந்தது. பெரும் படைகளோடு தயாராகினர். அப்போது அவர்கள் மத்தியில் ஒளியொன்று ஊடுருவியது. சட்டென்று நெருப்பு ஸ்தம்பம் எனும் அனல் கக்கும் தூணாக ஈசன் அக்னியுருவில் வானையும், பூமியையும் ஊருடுவி சுழன்று நின்றார். பிரம்மாவும், விஷ்ணுவின் பிரமிப்போடு பார்த்தார்கள். எங்கெல்லாம் நான் எனும் அகங்காரம் முற்றுகிறதோ அங்கெல்லாம் ஞானப் பிழம்பாக ஈசன் வந்திறங்குவது வாடிக்கையாக இருந்தது. ஞானம் எனும் சிவத்திற்கு அன்னியமாக வேறெந்த வஸ்தும் இல்லையெனக் காட்டுவதுதான் இங்கு தத்துவார்த்தம். இங்கு ஞான மயமாக இருக்க வேண்டிய பிரம்மாவும், விஷ்ணுவுமே தன்னால்தானே என அஞ்ஞான மயமாக மயங்கிருப்பது பார்த்துதான் இப்படி அக்னி வடிவாக தோன்றினார். உலகில் வேறெங்கும் மலை வடிவானதோர் லிங்கம் காணப்படவே இல்லை. அருணாசலம் எனும் இத்தலத்தில் ஜோதி வடிவில் அக்னி ஸ்தம்பமான ஈசன் வெளிப்பட்டார்.
அக்னியிலிருந்து குரல் வெளிப்பட்டது. பிரமாண்டத்தைப் பிளந்து வெளிப்பட்டதால் அதி நீலமான ஆகாயம் மேலே கண்ணுக்குக் காணாமல் போனது. எல்லா திசைகளும் திடீரென ஜொலித்தன. காவிபோல சிவந்த ஒளியால் பூசப்பட்ட அவைகள் பூலோக சூரியனைப் போலாயிற்று. ஜோதியின் சிவப்பால் உலகங்களின் தாவர ஜங்கமங்கள் யாவும் சிவந்த ஒளி வீசின.‘‘உங்களுக்குள் யார் பெரியவர் என்பதுதானே உங்களின் வாதம்? அதை நான் சொல்லலாமா” என்று அக்னி ஸ்தம்பத்திலிருந்து அசரீரியாக ஈசன் கேட்டார்.‘‘ஆஹா... சிவனாரின் தீர்ப்புக்கு ஞாலமே கட்டுப்படுமே. நாங்கள் ஏற்க மாட்டோமா என்ன” என இருவரும் சேர்ந்தே பதில் உரைத்தனர். ‘‘என் இந்த அக்னி ரூபமான ஜோதியின் உருவின் அடியையும், முடியையும் முதலில் யார் கண்டறியுங்கள்” என்றார்.
ஒரு கணம் கூட யோசிக்காமல் இருவரும் சேர்ந்து, ‘‘ஆஹா... தாராளமாக. இன்னொரு விஷயம். இதை முதலில் காண்பவரே தலைவனாவான். இரண்டாமவர் அவருக்கு அடிமையாவார் என்று அவர்களுக்குள்ளேயே முடிவெடுத்தனர்.
இறை, ஆத்மா, சச்சிதானந்தம், பிரம்மம் என்றெல்லாம் மிகுந்த உயர்வான எல்லாவற்றிற்கும் ஆதார வஸ்துவை சாதாரணமாக பார்த்து விடல் என்பது எவ்வளவு பெரிய அபத்தம். அதிலும் அதன் ஆரம்பத்தையும் முடிவையும் கண்டுவிட்டு மீண்டும் திரும்புதல் என்பதே அறிவீனத்தின் உச்சம். எங்கிருந்து சகல படைப்புகளும் தொடங்குகிறதோ, படைப்புகள் அழிந்து மீண்டும் வெறும் வெளியாக பிரம்மம் மிச்சப்படும்போது இருக்கும் அந்த சக்தியை விளக்குவதற்கு யார் அங்கு இருப்பார்கள். அதிலிருந்து அதற்கு அன்னியமாக வேறொரு வஸ்து எது இருக்கப் போகிறது. இதை அறிவிக்கவே அவர்கள் இருவரும் தயாரானார்கள். அண்ட பேரண்டமான ஆதி சக்தியான அருணாசலம் எனும் பரமாத்மாவின் வடிவை எவராலும் அளக்க முடியாது. அருணாசலத்தின் மகிமை இவ்வளவுதான் என்று எவராலும் முழுவதும் உரைக்க முடியாது. அதன் சொரூபம் இன்னதுதான், இப்படிப்பட்டதுதான் என்று அறிய முடியாது.
பிரம்மாவும் திருமாலும் அக்னி ஸ்தம்பமாக அருணாசலம் எனும் தலத்தில் பெருமானின் அடி முடியை தேடிய வண்ணம் இருந்தனர். பிரம்மா ஹம்ஸ (அன்னப்) பறவையாக ஆகாயம் நோக்கி அக்னி ஸ்தம்பத்தின் மேலாகவும், திருமால் வராஹ (பன்றி) ரூபத்தோடு பூமியை அகழ்ந்து கொண்டும் சென்று இருவருமே முடிவில்லாத ஈசனின் சொரூபத்தை நோக்கி நகர்ந்தனர். யாக, யக்ஞங்களை செய்து கொண்டேயிருந்தாலும் கூட அருணாசலத்தை அடைந்து விட முடியாது. இப்படியாக பல்வேறு தத்துவ நோக்கில் அமைந்த இந்த வராஹ ரூபத்தில் தொடர்ந்து அகழ்ந்து கொண்டே போயும் தேடல் ஒரு முடிவுக்கு வராது நின்றது. தேடல் நின்று போகவேண்டும். அதாவது, அகங்காரம் தன்னுடைய இயலாமையை ஒப்புக்கொள்ளும்போது இறைக்காட்சி கிடைக்கிறது. ஏனெனில், எதனால் இந்த அகங்காரமான ஜடப் பொருள் இயங்குகிறதோ, இயக்குவிக்கப்படுகிறதோ அதை அறிவது என்பது அடங்கிப் போகும்போது சித்திக்கிறது.
முயற்சியற்ற இடத்தில் மூலம் தெளிவாகத் தெரிகிறது. முயற்சி என்பதே முயற்சியற்ற நிலைக்கு அகங்காரம் தள்ளப்படுவதற்கேயொழிய அகங்காரத்தால் ஆத்மாவின் இருப்பை அறிய முடியாது. ஏனெனில், வந்துபோகும் குமிழிபோலத்தான் அகங்காரமே தவிர, ஆத்மாவைப்போல நிரந்தர இருப்பானது அகங்காரத்திற்கு கிடையாது. இன்னும் ஒரு முக்கிய விஷயம் தேடுபவன் தன்னை விட்டுவிட்டு தனக்குள் ஆழ்ந்து செல்லாமல் வெளி விஷயங்களில் தேடும்போது எதையும் அறிய இயலாமல் போகிறது. அடைவேன், பிடித்துவிடுவேன் என்று அகங்காரம் எழும்போதே ஆத்மாவை விட்டு வெகுதூரம் விலகிவிடுகிறது. என்ன செய்திருக்க வேண்டுமெனில் அடைய வேண்டுமென்கிற முயற்சி ரூபத்திலுள்ள அகங்காரத்தை கரைத்து தன்னால் அதை அறிய முடியாது என்று சரணாகதி செய்திருக்க வேண்டும். அந்த நெருக்கடிக்கு திருமால் தள்ளப்பட்டார்.
மகாவிஷ்ணு கீழே போகப் பன்னெடுங் காலம் கழிந்தது. அவரால் அடியை மட்டுமல்ல. அடியின் எந்தப் பாகத்தையும் காண முடியவில்லை. அவரின் வலிமை குன்றியது. அப்போதுதான் மெல்லியதாய் அகங்காரத்தினால் இது முடியாது என்கிற சத்வ குணம் மேலோங்கியது. அகங்காரம் தேயத் தொடங்கியது. தான் செய்த சபதத்தையே மறந்தார். தான் எங்கு தேடத் தொடங்கினோம் என்று திரும்பச் செல்லவும் வலிவற்று சிவனடியை நினைத்தபடி கிடந்தார். முயற்சி, முயற்சியற்ற நிலை என்கிற இரண்டையும் விட்டு தன்னையே நிவேதனமாக, தன்னையே ஈசனுக்காக அர்ப்பணித்தார். எதிர்பார்ப்பற்ற, இலக்கற்ற பக்தி அவருள்ளத்தில் உதித்தது. ஹரி பூமிக்கருகே வந்தார். பிரம்மாவின் சிறகுகள் சோர்ந்து போயின. கொஞ்ச நேரம் அகங்காரம் உயர்ந்தெழுந்துவிட்டு மீண்டும் அடங்கியது. தன்னால் இனி எதுவும் செய்ய இயலாது என்று பிரம்மாவும் ஓய்ந்தார்.
இந்த ஓய்தல் உடம்போ, மனதோ அல்ல நான் என்கிற அகங்காரம் இனி தன்னால் எதுவும் செய்ய இயலாது என்கிற ஓய்ச்சலேயாகும். பிரம்மா ஆரம்பத்தில் கண்டுவிட்டதாக பொய்யுரைத்தாலும், இறுதியில் சரணாகதி அடைந்தார். சிவ ஸ்தம்பமாகவும், செஞ்சிவப்பான அக்னி ஸ்தம்பமாகவும் நின்ற அந்த சொரூபம் கருணையின் பொருட்டு குளிர்ந்து அடங்கியது. பிரம்மா விஷ்ணுவும் அதைத் துதித்து தங்களின் அகங்காரத்தை இழந்து தாங்கள் யார் என்று உணர்ந்தனர். பிரம்மாண்டமான லிங்கமாக நின்ற ஈசனைத் துதித்தனர். அங்கேயே அருணாசலனுக்கு ஆலயம் அமைத்தனர். அப்போது ஈசன் நிறைய உபதேசங்களாய் பேசினார். அவற்றில் மூன்று முக்கியமானதாகும்:
1. இவ்விடத்திலிருந்து மூன்று யோஜனை (கிட்டத்தட்ட 50 கி.மீ.) பரியந்தம் வசிக்கும் ஜனங்களுக்கு தீட்சைகள் இல்லாமலேயே சிவ சாயுஜ்யம் கிடைக்கும்.
2. ஜனங்கள் என்னை தரிசித்தாலும், தூரத்திலிருந்து ஸ்மரித்தாலும் (நினைத்தாலும்) மகா கஷ்ட சாத்தியமான வேதாந்த ஞானம் உண்டாகும்.
3. இத்தலத்தில் எப்போதும் மகாத்மாக்களுக்குத்தான் வாசம் ஏற்படும். அதனால் இதைவிட்டு எப்போதும் போக வேண்டாம். எனவே, ஞானத் தபோதனர்களுக்கான முக்கிய தலமும் இதுவேயாகும்.
இந்த பூலோகத்தின் மையமான இதுவே இவ்வுலகின் முதல் லிங்கமாகும். லிங்கம் எனும் சொல்லின் பொருளே இந்த மலைதான். லிங்கம் எனும் பொருள் உணர்த்தும் சகல லட்சணங்களும் இந்த மலைக்குப் பொருந்தும். லிங்கம் எனும் சொல்லும், லிங்க வடிவில் ஈசன் உதித்ததும், பிரபஞ்சத்தின் முதல் லிங்கமும் இதுவேயாகும். இந்த தலம் அசலம் என்றும், அருணாசலம் என்றும் அழைக்கப் படும். முதல் லிங்கம் உத்பவம் என்கிற உற்பத்தி இங்கு நிகழ்ந்ததால். லிங்கோத்பவ தலம் இதுவேயாகும். இந்த லிங்கோத்பவ உற்பத்தி நாளையே எல்லோரும் மகாசிவராத்திரி என்று கொண்டாடுவர். இத்தலமே பூமியின் இதயமாகும். ஆன்மிக அச்சில் உலகின் மையமும் இதுவேயாகும். கயிலை என்பது ஈசனின் கிரகம் எனப்படும் வீடுதான். ஆனால், அருணாசலம் என்றழைக்கப்படும் இந்த மலையானது ஸ்வயம் சிவனே ஆகும். ஈசனே இங்கு மலையுருவில் வீற்றிருக்கிறார்.
இந்த அடிமுடி கண்ட புராணத்தையே அதாவது, திருவண்ணாமலை என்கிற இத்தலத்தில் நிகழ்ந்ததையே கோயிலில் லிங்கோத்பவ மூர்த்தியாக கருவறைக்கு பின்னாலுள்ள கோஷ்டத்தில் வைத்து வணங்கி வருகிறார்கள். இந்த மலையை எதன் பொருட்டாவது லௌகீகமாகவோ அல்லது மோட்சமடையும் பொருட்டோ வேண்டிக் கொண்டு வலம் வருபவர்களுக்கு அவர்களின் சாதாரண விருப்பங்கள் நிறைவேறுவது மட்டுமின்றி ஞானப் பிரதானமான மோட்சத்தை அடைவர். இப்படி பாதாளம் முதல் ஆகாச பரியந்தம் வரை எல்லையில்லாத ஜோதி ஸ்வரூபமாக லிங்கமாக எழுந்தருளியதை யஜூர் வேதத்தின் மையப் பகுதியான ருத்ரம் கீழேயுள்ள ஸ்லோகத்தினால் விளக்குகிறது. அதனால், சிவராத்திரி அன்று ருத்ரம் ஜபிப்பது என்பது ஈசனோடு இருத்தலாகும். குறைந்தது கீழேயுள்ள ஸ்லோகத்தை எத்தனைமுறை சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லலாம்.
ஆபாதால நப ஸ்தலாந்த புவன
பிரமாண்ட விஸ்புரத்
ஜ்யோதி ஸ்படிக லிங்க மௌலி விலஸத்
பூர்ணேந்து வாந்தாம்ருதை
அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம்
ருத்ராநுவாகான் ஜபன்
த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ) த்ருதபதம்
விப்ரோ (அ) பிஷிஞ்சேத் சிவம்
அல்லது, அருணாசல சிவ... அருணாசல சிவ... அருணாசல சிவ... என்று இடையறாது சிவராத்திரியில் இடையறாது கூறுங்கள். உங்களுக்குள்ளும் அக்னி ஸ்தம்பமான அருணாசல லிங்கம் நெடுநெடுவென வளர்ந்து நின்று உங்களையும் தானாக்கிக் கொள்ளும்.
- கிருஷ்ணா
- DINAKARAN PAPER
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM