VRITHAM-- HOW IT HELPS ONE'S PROGRESS IN SPIRITUALITY
Feb 26, 2016 14:52:02 GMT 5.5
kahanam likes this
Post by radha on Feb 26, 2016 14:52:02 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
SOURCE:- MALAI MALAR ANMEGHAM SECTION
ஆலயங்களுக்கு சென்று இறை வழிபாடு செய்யும் போது புலன் அடக்கத்துடன் இருக்க வேண்டும். உணவு கட்டுப்பாட்டால் மட்டுமே புலன் அடக்கத்தை ஏற்படுத்த முடியும்.
இந்த அடிப்படையில்தான் நம் முன்னோர்கள் உணவு கட்டுப்பாடான ‘விரதம்’ இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். விரதம் இருந்தால் மனம் ஒடுங்கும்.
ரமணர் இதுபற்றி கூறுகையில், ‘விரதம் எண்ணங்களை ஒடுக்கி, சிந்தனையை நெறிப்படுத்தும்’ என்கிறார். ஆனால் விரதம் என்றதும் நம்மில் பெரும்பாலானவர்கள் ‘சாப்பிடாமல் இருக்க வேண்டும், அவ்வளவு தானே.... என்கிறார்கள்.
உண்மையில் விரதம் என்றால், ‘ஒன்றையே எண்ணி மனம் லயித்து இருத்தல்’ என்று பொருளாகும். ‘லயித்தல்’ என்பதே விரதம் என மாறியதாக சொல்வார்கள்.
அதாவது செயல்படுத்த வேண்டிய விஷயத்தை உறுதியாக மனதில் தீர்மானித்து கொள்வதே விரதமாகும். அந்த மன உறுதிக்கு இறை அருள் தேவை. அதுதான் விரதத்தின் உயரிய நோக்கமாகும்.
விரதம் நம் மனதை மட்டுமல்ல, உடலையும், பக்குவப் படுத்துகிறது. சரியான உணவு பழக்கமே ஆரோக்கியமாக வாழ வைக்கும். உணவு உட்கொள்வதில் ஒரு வேளைக்கும், அடுத்த வேளைக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும். பசிக்கும் முன்பு சாப்பிட்டால் ஜீரண சக்தி சரியாக செயல்படாது. வயிறு காலியாக இருந்தால் மட்டுமே ஜீரண உறுப்புகள் சரியாக செயல்படும்.
அது மட்டுமல்ல வயிறு காலியாக இருக்கும் போதுதான் கழிவு வெளியேற்றம் நன்றாக நடக்கும். எப்போதும் வயிறு நிரம்பி இருந்தால் ஜீரண சக்தி பாதிக்கப்படும். விஞ்ஞானப் பூர்வமான இந்த உண்மையை அறிந்த நம் முன்னோர்கள் பண்டிகைகள் மற்றும் வேண்டுதல்கள் அடிப்படையில் விரத முறையை உருவாக்கினார்கள்.
அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, பித்ரு வழிபாடு என்று ஒவ்வொருவருக்கும் ஏற்ப விரத நாட்கள் வகுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் பொதுவான விதிகளுடன், எந்த கடவுளுக்கான விரதமோ அந்த கடவுளுக்கு ஏற்ப விரத நாட்களும், வழிமுறைகளும் உள்ளன.
முழு முதல் கடவுளான விநாயகரின் அருளைப் பெற விநாயகர் சதுர்த்தி, ஆவணி சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சஷ்டி விரதம் என்று 4 வகை விரதம் உள்ளது. சிவன் அருளைப் பெற சிவராத்திரி, பிரதோஷம், திருவாதிரை, கேதாரகவுரி விரதம், ஆனி திருமஞ்சனம் உள்பட 8 வகை விரதங்கள் உள்ளன.
விஷ்ணுவின் பாதத்தை சரண் அடை ஏகாதசி விரதம், புரட்டாசி சனி கை கொடுக்கின்றன. விரதங்களில் மிக, மிக உயர்வானது என்ற சிறப்பு ஏகாதசி விரதத்துக்கு உண்டு. அது போல கந்தசஷ்டி, ஆடிக்கிருத்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம், சஷ்டி தினங்களில் விரதம் கடை பிடிப்பதன் மூலம் முருகனின் கருணை கிடைக்கும்.
விரதங்களில் மிகவும் தனித்துவம் கொண்டது சபரிமலை அய்யப்பன் அருள் பெற கடைபிடிக்கப்படும் ஒரு மண்டல விரதமாகும். மற்ற விரதங்கள் எல்லாம் உணவு சாப்பிடாமல் பட்டினியாக இருக்கவும், மவுன விரதம் இருக்கவும், இரவு முழுவதும் கண் விழித்திருக்கவும்தான் வலியுறுத்தும். ஆனால் அய்யப்பனை வேண்டி இருக்கும் விரதமானது, ஐம்புலன்களையும் அடக்கி, அதன் வழியாக இறைவனை காண முயல்வதாகும். ஆன்மாவை பக்குவப்படுத்தி இறைவனுடன் இரண்டற இந்த விரதம் கலக்கச் செய்யும்.
சக்தி விரதங்களும் மக்களால் குறிப்பாக பெண்களால் மிகவும் விரும்பி கடை பிடிக்கப்படுகிறது. நவராத்திரி, ஆடிப்பூரம், ஆடிச் செவ்வாய், மாசி மகம், மார்கழி வழிபாடு போன்றவை சக்தி விரதங்களாக உள்ளன.
இறைவனை நினைத்து, பணிந்து வேண்டி கடை பிடிக்கப்படும் இத்தகைய விரதங்கள் தவிர கிரகங்களின் மாற்றத்தால் வரும் தொல்லைகள், துயரங்களைப் போக்கிக் கொள்ளவும் நம் முன்னோர்கள் பரிகார விரதங்களை ஏற்படுத்தினார்கள். சனி கிரகத்தால் பீடையா.... சனிப் பிரதோஷ விரதம் இருந்தால் அந்த பீடை அகன்று விடும் என்று கணித்துள்ளனர்.
அதுபோல செவ்வாய் கிரக தோஷத்துக்கு, ஆற்று மணலை எடுத்து வந்து, அதை செவ்வாய் கிரகமாக ஆவாகனம் செய்து, விரதம் இருந்து வழிபட்டால் பலன் கிடைக்கும். புதன் கிரக தோஷம் இருந்தால், விஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்து விரதம் இருந்தால் வெற்றி உண்டாகும்.
குரு பகவான் அருள் பெற வேண்டுமானால் தெட்சிணாமூர்த்திக்கு ஒரு மண்டலம் விரதம் இருந்து வழிபடுதல் வேண்டும். சுக்கிர கிரகத்தால் அனுகூலம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இரவில் தீபம் ஏற்றி அம்பிகையை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும்.
அன்றும், இன்றும் விரதங்களால் மக்கள் நினைத்த வரம் பெற்றனர். ஆனால் இப்போது இருப்பதை விட பழங்காலத்தில் மக்கள் மிக, மிக கடினமான விரதங்களை கடை பிடித்தனர். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் யாசிதம், பாத கிரிச்சனம், பன்னக்கிரிச்சனம், சவுமிய கிரிச்சனம், அதிகிரிச்சனம், கிரிச்சனாதி கிரிச்சனம், பிரசர்பத்திய கிரிச்சனம், பார்க கிரிச்சனம், சாந்தபன கிரிச்சனம், மகா சாந்தபன கிரிச்சனம், சாந்திராயணம், வால சாந்திராயணம் என்று 12 வகையான விரதங்களை கடை பிடித்தனர். தினமும் மூன்று வேளை குளித்து விரதம் இருந்தனர்.
வளர்பிறை முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு பிடி உணவை குறைத்து கொண்டே வரும் வகையில் இருந்தனர். அதுபோல தேய்பிறை முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு பிடி உணவை அதிகரித்து வரும் விரதத்தையும் கையாண்டனர். மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடாமல் இருக்கும் விரதத்தையும் இருந்தனர். சிலர் 12 நாட்கள் கூட சாப்பிடாமல் விரதம் இருந்ததுண்டாம். அந்தந்த கிரக நிலைக்கு ஏற்ப இப்படி விதம், விதமாக விரதம் இருந்தனர்.
ஆனால் இந்த வகைகளின்படி விரதம் இருப்பது என்பது தற்போதைய வாழ்வியல் நடைமுறைக்கு பொருந்துவதாக இல்லை. எனவேதான் மாதம் ஒரு முறையாவது விரதம் இருங்கள் என்று ஆன்மிகப் பெரியோர்களும், டாக்டர்களும் வலியுறுத்துகிறார்கள்.
கடந்த பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக விரதம் இருப்பதிலும் கூட மாற்றங்கள் வந்து விட்டது. தற்போது மக்களிடையே வார விரதம், மாத விரதம், ஆண்டு விரதம் என மூன்று வகையான விரதங்கள் பழக்கத்தில் உள்ளன.
வார விரதம் என்பது வாரத்தின் 7 நாட்களில் எந்த கடவுளை வேண்டி, எந்த தினத்தில் விரதம் இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது. திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள். அன்று சிவன் அருள் பெற விரதம் இருக்கலாம்.
செவ்வாய்க்கிழமை துர்க்கை, அனுமன் அருள்பெற விரதம் இருக்கலாம். புதன்கிழமை விநாயகர், வியாழக்கிழமை விஷ்ணு, தெட்சிணாமூர்த்தியை நினைத்து விரதம் இருந்தால் திருமணத்தடை அகலும். செல்வம் பெருகும்.
வெள்ளிக்கிழமை அம்மனையும், அம்மனின் அவதாரங்களையும் வழிபட்டு விரதம் இருக்கலாம். சனிக்கிழமை பெருமாள், ஆஞ்சநேயர், காளிதேவி, சனி பகவான் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானை நினைத்து விரதம் இருந்து வரம் பெறலாம். மாத விரதம் என்பது நட்சத்திர விரதமாகும். ஆண்டு விரதம் என்பது திதியை கணக்கிட்டு கடைபிடிக்கும் விரதமாகும். ஒவ்வொரு விரதத்துக்கும் எத்தகைய உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது.
முழுப் பட்டினி கிடந்து விரதம் இருப்பது ஒரு வகை. பழ ஆகாரம் (பலகாரம் அல்ல) மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது மற்றொரு வகையாகும்.
பழ ஆகாரம் என்பது பழ வகைகள் மட்டும் கொஞ்சமாக சாப்பிடுவதாகும். பழ ஆகாரம் அதிக வலு இல்லாதது. பழ ஆகாரம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருந்தால் வயிற்றில் உள்ள பழைய கழிவுகள் அனைத்தும் வெளியில் வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விரதத்தை நாம் ஆன்மிகத்தோடு இணைக்கும் போது, அது பக்தியின் படி நிலைகளில் முதன்மையானதாக மாறுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இறைவழிபாடுகளில் நாம் கொண்டுள்ள பக்தியை முழுமை அடையச் செய்வதே இத்தகைய விரதம்தான்.
அதிலும் விரதம் இருக்கும் நாட்களில் மனதை ஒரு முகப்படுத்தி தியானத்தை கடைபிடித்தால், அது முக்திப் பாதைக்கு நன்மை முன்னேற்றும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே விரதம் என்பது புனிதமானது. விரதங்களினால் நம் ஆன்மா உறுதித் தன்மையைப் பெறுகிறது.
விரதம் மூலம் நாம் வயிற்றுக்கும், இரைப்பைக்கும் ஓய்வு கொடுப்பதால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சிப் பெறும். அதோடு விரத தினத்தன்று ஆலயத்துக்கு சென்று இறை வழிபாட்டில் கவனம் செலுத்தினால் முழு பலனும் கிடைக்கும்.
விரதம் இருக்கும் தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு, குளித்து, சுத்தமான ஆடை அணிந்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அருகில் வைத்து கொண்டு எந்த கடவுளை நோக்கி, என்ன விரதம் இருக்கப் போகிறோம் என்பதை உச்சரித்து சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் கருவறை முன்பு நின்று, ‘உன்னை சரண் அடைய இன்று இந்த விரதம் இருக்கிறேன். என் குறைகளை தீர்க்க வேண்டும்’ என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு வீடு திரும்பி விரதம் மேற்கொள்ள வேண்டும். இறை நாமத்தை உச்சரித்தப்படி இருத்தல் வேண்டும். மாலை, உண்ணாவிரதத்தை நிறைவு செய்யும் போது மீண்டும் ஆலயத்துக்கு சென்று, சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட வேண்டும். அப்போது இறைவனுக்கு உகந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். அந்த தெய்வத்துக்கு பிடித்த நைவேத்தியத்தை படைக்க வேண்டும்.
இப்படி ஆன்மீக உணர்வுடன் இருக்கும் விரதம் வெற்றி பெறுகிறது. திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சர்க்கரை வியாதி குணமாகும்.
பொதுவாக சாப்பிடும் 6 மணி நேரத்துக்குள் மீண்டும் சாப்பிட்டால் பழைய உணவு கொழுப்பு சக்தி ஆற்றலாக மாறாமல் கெட்ட கொழுப்பாக மாறி தேங்கி விடும். வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் கொழுப்பு தேங்கும் பிரச்சினையே வராது. முகம் பளிச்சென பிரகாசமாக மாறும். விரதத்தால் மனதின் செயல் குறைந்து தூய்மை பெறும். மனம் தூய்மையானால் தானாகவே ஆன்மிக முன்னேற்றம் ஏற்படும். இதற்கு விரதம் இருக்கும் மன வைராக்கியம் தேவை.
அதற்காக முழு பட்டினி கிடக்க வேண்டியதில்லை. முழு பட்டினியானது நீர் வறட்சியை ஏற்படுத்தி விடும். சர்க்கரை அளவு உயர்ந்து விடும். இதை தவிர்க்க விரதத்தின் இடையிடையே தண்ணீர் அல்லது பழரசம் அருந்தலாம். விரதம் இருக்கும் போது இறை சிந்தனையுடனே இருங்கள். பேசுவதை குறையுங்கள். இறை நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள். மனப்பூர்வமாக விரதம் இருங்கள். நிச்சயமாக இறைவன் உங்கள் வாழ்வில் மங்களத்தை ஏற்படுத்துவார்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM