Post by radha on Feb 7, 2016 4:40:16 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
பிப்., 8 தை அமாவாசை
எப்போதாவது ஏதாவது அதிசயம் நடந்தால், அதை, 'அபூர்வ நிகழ்வு' என்று சொல்வோம். அத்தகைய அபூர்வ நிகழ்வு, இந்த தை அமாவாசையன்று, நம்மை நோக்கி வருகிறது. அமாவாசையும், திங்கட்கிழமையும் இணைந்து வரும் நாட்களை, 'அமா சோமவாரம்' என்பர். அமாவாசைகளில் மிகவும் உயர்வானது, ஆடி மற்றும் தை அமாவாசை!
ஆடி அமாவாசையன்று நம்மைக் காண பூலோகம் வருகின்றனர், நம் முன்னோர்; தை அமாவாசையன்று, விடை பெற்று, பிதுர்லோகம் செல்கின்றனர் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு, தை அமாவாசை திங்கட்கிழமையில் வருகிறது. இது, நம் முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்க, மிகச்சிறந்த நாள். இந்நாளில், தீர்த்தக் கரைகளுக்கு சென்று, முன்னோருக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்தால் போதும். அவர்கள் மனமுவந்து நம்மை வாழ்த்துவர்.
முன்னோர் வழிபாட்டின் மூலம், குலம் தழைப்பது மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் செய்த, நல்ல செயல்பாடுகளை நினைவு கூர்ந்து, அவற்றை பின்பற்றினால், வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படும்.
'உன் தாத்தா இப்படி செய்தார்; உன் அப்பா இப்படி நடந்து கொண்டார். அதனால் தான் நாம் இன்று நன்றாக இருக்கிறோம். அவர்கள் வழியில் செயல்பட்டால், உன் எதிர்காலமும் நன்றாக இருக்கும்...' என்று குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டிய நாள் இது!
இந்நாளில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று வருவது நிறைந்த பலன் தரும்.
ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் மனித வடிவம் கொண்டு, இங்குள்ள சிவனை வழிபட்டு வந்தன. கலியுகம் பிறந்தவுடன் 'இனி நல்லவற்றுக்கு காலம் இல்லை; பூலோகத்தில் இருப்பது நல்லதல்ல...' என்று, இத்தலத்தின் பிரதான வாசலை அடைத்து விட்டுச் சென்றன.
இதனால், பக்கத்திலுள்ள வாசல் வழியாக கோவிலுக்கு சென்று வந்தனர் மக்கள். இக்கோவிலுக்கு வந்த திருநாவுக்கரசரும், சம்பந்தரும் தேவாரம் பாடி, கதவு திறந்து, மூட வழி செய்தனர்.
வேதங்கள் சிவனை வணங்கியதால், இவ்வூருக்கு, வேதாரண்யம் என்று பெயர் வந்தது. வேதம் + ஆரண்யம் என்பதை வேதாரண்யம் என்பர். 'ஆரண்யம்' என்றால் காடு. வேதங்கள் தங்கியிருந்த காடு என்பது பொருள். வேதங்களை தமிழில், 'மறை' என்பர். எனவே சுவாமிக்கு, 'திருமறைக்காடர்' என்ற பெயரும் உண்டு.
அமாவாசை என்றாலே, தீர்த்த ஸ்நானம் முக்கியம். இக்கோவிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தை பார்த்தாலே போதும்! கங்கை, யமுனை, நர்மதை, சிந்து மற்றும் காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமமான பலனும், பல ஆண்டுகள் தானம், தவம் செய்த பலனும் கிடைக்கும்.
கோவிலில் இருந்து சற்று தூரத்திலுள்ள கடலிலும், இவ்வூர் அருகிலுள்ள கோடியக்கரை, 'ஆதி சேது' கடலிலும் ஒருமுறை நீராடினால், சேது என அழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் நூறு முறை நீராடிய பலன் கிடைக்கும். இங்கு தர்ப்பணம் செய்தால், நம் முன்னோர் சொர்க்க வாழ்வு பெறுவர்.
தை அமாவாசையன்று, நம்மை வாழ வைத்த முன்னோருக்கு வந்தனம் செய்வோம்!
தி.செல்லப்பா
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM