Post by radha on Feb 5, 2016 11:13:08 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
பன்னிரண்டு எனும் எண் பல வகைகளில் பிரசித்தமானது. ராசிகள் பன்னிரண்டு, மாதங்கள் பன்னிரண்டு, லிங்கங்கள் பன்னிரண்டு, த்வதச நாமாக்கள், பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்தது பன்னிரண்டு வருடங்கள் என்றும் அறிவோம்.
வடமாநிலத்தில் கும்பமேளா மிகவும் பிரசித்திபெற்றதாகும். அவை நதிக்கரையில் உள்ள திரிவேணியிலும் (அலகாபாத்), ஹரித்வாரிலும் நடப்பதுண்டு. இம்மாதிரியே 'புஷ்கர்' மேளாக்களும், கோதாவரி நதிக்கரையில் நடக்கின்றன. சீன யாத்ரீகர் ஹியூன்த்சாங் கும்பமேளாவிற்கு வருகை தந்ததையும், ஹர்ஷ சக்ரவர்த்தயின் தானத்தைப் பற்றியும் பதிவு செய்துள்ளார்.
ஆனால், தென்னாட்டில் உள்ள கும்பகோணத்தில் குளக்கரையில் மகாமகம் நடப்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பது அறிந்ததே. கும்பகோணத்திற்கு 'குடமூக்கு' 'குடந்தை' என்ற பெயர்களும் உண்டு. சோழ மன்னர்களும், விஜயநகர அரசர் கிருஷ்ண தேவராயர் இவ்விடத்திற்கு வந்துள்ளனர் என்பதற்குக் கல்வெட்டுகள் உள்ளன. தஞ்சை நாயக்கர் மன்னரின் மந்திரி கி.பி. 1620ல் மகாமக குளத்தைச் சீர்படுத்தினார். இக்குளத்தைச் சுற்றிலும் 16 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து மண்டபங்களையும் எழுப்பினார். நாற்புறமும் அழகிய படிகட்டுகள் அமைத்தார். அப்பர் பெருமான் தன் 68வது வயதில், கி.பி. 643ல் மகா மகத்தில் கலந்து கொண்டுள்ளார்.
'தாவி முதல் காவரி, நல் யமுனை, கங்கை
சரஸ்வதி, பொற்றாமரை புஷ்கரணி, தெண்ணீர்க்!
கோவியோடுகுமரி லறா தீர்த்தம் சூழ்ந்த
குடந்தைக் கீழ் கோட்டத்து எம் கூத்தனாரே' என்று கூறியுள்ளார் அப்பர்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கை, யமுனை, சரயு, நர்மதை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, குமரி, பயோஷிணி ஆகிய புண்ணிய நதிகள் கூடுகின்றன.
சேக்கிழார் சுவாமிகள்,
'பூமருவும் கங்கை முதல்
புனிதமாம் பெருந்தீர்த்தம்
மாமகத்தான ஆடுவதற்கு
வந்தவழி படுங்கோயில்'
என்று உரைத்துள்ளார் தன் சிறு தொண்டர்புராணத்தில். இச்சமயத்தில் தான தருமங்கள் செய்வது விசேஷமாகக் கொள்கின்றனர். இவ்விழாவிற்கு அரசன் முதல் ஆண்டி வரை வருவர்.
கும்பகோணம் ஓர் கோவில் நகரம். இதில் 12 சிவாலயங்கள் உள்ளன. 5 பிரசித்திபெற்ற பெருமாள் கோவில்களும் இருக்கின்றன. இக்கோயில்களைப் பல ஆழ்வார்கள் - பெரியாழ்வார், நம்மாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் பாடியுள்ளனர். சாரங்கபாணி சுவாமியை 'ஆராவமுதன்' என்றும் அழைப்பர்.
கும்பகோணத்தில் சிவ விஷ்ணு பேதம் குறைவு. இதை
'சிவ விஷ்ணோ பிரியே க்ஷேத்ரே
கும்நகோணா ஹ்வயே சுபே'
என்று புராணங்கள் கூறுகின்றன. விஷ்ணு புராணத்தில்,
'ஆதி சீத்தம் மஹா க்ஷேத்திரம்
கல்பாந்தேஷ பாஸ்திதம்'
என்று சொல்லப்பட்டுள்ளது.
கம்பர் கூறுகிறார்...
'பொன்னித் தடங்கொண்ட தாமரை
சூழ் தண்பூங் குடந்தை
குடமூக்கே குடமூக்கே என்பிராகில்
கொடுவினைகள் தீர்ந்து அரனைக் குருகலாமே'
'ஆராவமுதே யடினேனுடலம் நின் பாலன்பாயே
நிராயலைந்து கரைய உருக்கின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே'
- நம்மாழ்வார்
'காவிரிக்கரை குடந்தை யுள் கிடந்த
வாறே எழுநதிருந்து பேசுவாழி கெசனே'
- திருமிசையாழ்வார்
ராமசாமி கோவில்: மகாமகக்குளத்தின் அருகிலேயே உள்ளது. குளம் வெட்டும் போது, ராமர், சீதை, அனுமர் விக்கிரகங்கள் அகப்பட்டன. கோவிலும் கட்டப்பட்டது. முன் பிராகாரத்தில் ராமாயணத்தை ஒட்டிய ஓவியங்கள் உள்ளன.
சக்ரபாணி கோவில்: காவிரி நதிக்கு அருகில் உள்ளது. விஷ்ணுவின் ஆயுதமான 'சுதர்ஸன்' சக்கரமே பூஜிக்கப்படுகிறது. அருகில் உள்ள சக்கர தீர்த்தத்தில் பித்ரு கார்யங்கள் செய்வது வழக்கம்.
நாகேஸ்வரர் கோவில்: இக்கோவில் உள்ள நடராஜ மண்டபம், குதிரைகள் பூட்டிய ரத ரூபமாக உள்ளது. வருடத்தில் மூன்று நாட்கள் கர்ப்பக்கிரகத்தில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி வீசுகிறது. யமனுக்கு ஒரு சிலை உள்ளது.
ஆதிகும்பேஸ்வரர் கோவில்: கும்பத்துடன் சம்பந்தப்பட்ட கோவிலாகும். அம்பிகையின் நாமம் மங்களாம்பிகை. இது ஒரு பழமையான திருக்கோயிலாகும்.
சாரங்கபாணி கோவில்: இங்குள்ள கர்ப்பகிருகம் ரதம் போன்ற அமைப்புடையது. பல ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.
காசி விஸ்வநாதர் கோவில்: மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ளது. நதிகள் பெண்கள் ரூபமாக வழிபடுவதற்குச் சிலைகள் உள்ளன. ஞானசம்பந்தர் பாடியுள்ளார். மற்றும் அபிமுகேஸ்வரர் கவுதமேஸ்வரர், கோவில்களும் குளக்கரையிலேயே உள்ளன.
பஞ்சகுரோசயாத்திரை:
1. திருவிடைமருதூர்
2. திருநாகேஸ்வரம்
3. தாராசுரம்
4. சுவாமிமலை
5. கருப்பூர்
ஆகிய இடங்களும் செல்வர்.
இம்மகாமகக் குளத்தைச் சுற்றி 16 மண்டபங்கள் உள்ளன. அவைகளில் லிங்கங்கள் இருக்கின்றன. அவை மகாமகக் குளக்கரையில் உள்ள 16 லிங்கங்கள்.
01. பிரம்ம தீர்த்தேஸ்வரர்
02. முகுந்தேஸ்வரர்
03. தனேஸ்வரர்
04. விருஷபேஸ்வரர்
05. பரணேஸ்வரர்
06. கோணேஸ்வரர்
07. பக்திஷேஸ்வரர்
08. பைரவேஸ்வரர்
09. அகஸ்தீஸ்வரர்
10. வியாசேஸ்வரர்
11. உமைமகேஸ்வரர்
12. நைருத்தீஸ்வரர்
13. பிரம்மேஸ்வரர்
14. கங்காதரேஸ்வரர்
15. மூத்த தீர்த்தேஸ்வரர்
16. க்ஷேத்திரபாலேஸ்வரர்
மேலும் மகாமகக் குளத்திற்கு எழுத்தருளும் தெய்வங்கள்:
01. கும்பேஸ்வரர், மங்களநாயகி
02. கொட்டையூர் கோடீஸ்வரர், பந்தாகி நாயகி
03. பாணபுரீஸ்வரர், சோம கலாம்பாள்
04. ஆதிகம்பட்ட விஸ்வநாதர், ஆனந்தநிதி
05. நாகேஸ்வரர், பெரிய நாயகி
06. அமிர்த கலசநாதர், அமிர்த வல்லி
07. அபிமுகேஸ்வரர், அமிர்ந்த வல்லி
08. கவுதமேஸ்வரர், சவுநிதா நாயகி
09. காசி விஸ்வநாதர், விசாலாட்சி
10. சோமேஸ்வரர், சோம கலாம்பாள்
11. காளத்தீஸ்வரர், ஞான பிரகாம்பிகை
12. காமாட்சி அம்மன் (தனியாக வரும் அம்பிகை)
அன்று காவிரி ஆற்றுக்குச் செல்லும் தெய்வங்கள்
01. சாரங்கபாணி, கோமளவல்லி
02. சக்ரபாணி, விஜயவல்லித்தாயார்
03. ராமசாமி, சீதை
04. ராஜகோபாலசுவாமி, செங்கமலவல்லித் தாயார்
05. ஆதிவராகப் பெருமாள், பூமாதேவி
கும்பகோணம், சங்க காலத்திலேயே புகழ் பெற்றிருந்தது
'அழும்பில் அன்ன அறாஅ யாணர்
பழம்பல் நெல்லின் பல்கோடிப் பரவைந்
பொங்கடி படிகாயம் மண்டிய பசுமிளைத்
தன் குடவாயில்'
- அகநானூற்றுப் பாடல்
சில அதிசயங்கள் கும்பகோணத்தில் காணலாம்.
* சோமேஸ்வரர் கோவிலில் உள்ள முருகனின் வலது பாதத்தில் பாதரட்சை உள்ளது.
* காளத்தீஸ்வரர் கோவிலில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் மாப்பிள்ளை கோலத்தில் காட்சியளிப்பார்.
* ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவிலில் சோழர் காலத்தில் 'பொற்காசு அடிக்கும்' நிலையாக இருந்தது. 'கம்பட்டம்' என்றால் 'தங்க சிலை' என்று பொருள். அன்று தமிழகத்தின் நாசிக் எனலாம்.
ஸ்ரீ சாரங்கபாணி கோயில்
இத்தலத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தின் கரையில், 'ப்ருகு' என்னும் ரிஷி தவம் புரிந்து மகாலட்சுமியைப் புதல்வியாகப் பெற்றார். வைகுண்டத்திலிருந்து மகா விஷ்ணுவும் சாரங்கபாணியாகப் பிரசன்னமாகிப் ப்ருகு மகரிஷியின் பெண்ணாக வளர்ந்து வரும் மகாலட்சுமியை மணம் புரிந்து கொண்டார். இந்த வரலாற்றை ஒட்டிக் கோயிலின் கர்ப்பக்கிருகம், யானை, குதிரைகளுடன் கூடிய ஆறு ரதம் போன்ற வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே எழுந்தருளியிருக்கும் பெருமாளைப் பூதத்தாழ்வாரும், பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும், நம்மாழ்வாரும், திருமழிசையாழ்வாரும், ஆராவமுதன் என்று அனுபவித்துப் பாடியள்ளார்கள். நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் மறைந்து கிடந்தது. பின்னர், அது இந்த தலத்திலிருந்தே வெளிப்பட்டதாக ஒரு வரலாறு உண்டு. எனவே பெருமாளுக்குப் 'பிபந்தம் வெளியிட்ட பெருமாள்' என்றும் ஆராவமுது ஆழ்வார் என்றும் திருநாமங்கள் வழங்குகின்றன. திருமிழிசையாழ்வார் பெருமானை கட்டளையிட்டபோது அதற்கிணங்க பெருமகன் கிடந்தவாறே எழுநததாகவும் இன்னும் அதே கோலத்தில் சேவை தருவதாகவும் கூறுவர். முத்தியடைந்த ஸ்தலமும் இதுவே. சாரங்கபாணி கோவிலுக்கு மேற்கு சாத்தார தெருவில் ஆழ்வாரைப் பள்ளிப்படுத்திய ஸ்தலம் உள்ளது.
ஸ்நானம் செய்யும் விதம்
மகாமகம் ஸ்நானத்தை மிகவும் உயர்ந்ததாகவும், பல பாவங்களைப் போக்கும் சக்தி உள்ளதாகவும் மக்கள் போற்றுகிறார்கள். இதனால் மகா பாதகங்கள் நீங்கின. புத்திர சந்தானம் முதலிய பல நன்மைகள் ஏற்பட்டன என்று பல கதைகள் கூறுகின்றன.
முதலில் இத்தலத்தில் உள்ள நவ கன்னியரையும் வழிபட்டு, வலம் வந்து, அபிமுகேசுவரர், கௌதமேசுவரர், கும்பேசுவரர் ஆகிய மூன்று மூர்த்திகளையும் தரிசனம் செய்து கொள்ளவேண்டும். பின்னர் குளத்தில் வடகரையிலிருக்கும் அசுவத்த மரத்தைச் சுற்றி வரவேண்டும். பிறகு நவகன்னியரைத் தியானம் செய்த வண்ணமாகவே குளத்தில் ஸ்நானம் செய்யவேண்டும்.
தமிழ்நாட்டில் செழிப்புக்கே காரணமாக காவிரியின் கரையில் தஞ்சாவூர் ஜில்லாவில் அமைந்துள்ளது கும்பகோணம். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். இம்மூவரையும் சூரியன் வழிபாடு செய்ததால் இதற்கு 'பாஸ்கர' க்ஷேத்திரம் என்னும் மற்றொரு பெயரும் உண்டு. சோழ மன்னர்கள் ஆட்சியில் இது சிறிது காலத்துக்குத் தலைநகராகவும் இருந்திருக்கிறது. இதன் அருகே உள்ள சோழன் மாளிகை என்னும் ஊரில் பழமையான கட்டிடம் ஒன்று இருப்பது இதற்குச் சான்று.
இவ்வூரில் ஒரு பாகத்திற்கு நானயக்காரன்பேட்டை என்று பழைய பெயரும் வழங்குகிறது. இது தவிர மாதலம்பேட்டை என்பது ஒரு சோழ மன்னனின் படை தங்குமிடமாக ஏற்பட்டிருந்தது. புராணங்களில் குட மூக்கு என்னும் குடந்தை என்றும் இத்தலத்தை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மஹாமகம் நீராடல் நேரம்
மன்மத வருஷம், மாசி மாதம், 10ம் நாள் (22.02.2016) திங்கள் கிழமை, கும்ப ராசியில் சூரியன் நிற்க, சிம்ம ராசியில் குரு, பூர்ண சந்திரன் (மகம் நட்சத்திரத்தில்) இருக்க, ரிஷப லக்ன காலத்தில் பகல் 11.18 மணிக்கு மேல் பிற்பகல் 1.20 மணிக்கு முன்னர், சூரியன் உச்சிக்க வரும் 12.26 மணி காலத்தில் ரிஷப வாகனத்தில் ஆதி கும்பேஸ்வரர் மகாமக குளத்தில் புனித நீராடுவார்.
புராண வரலாறு
இப்பெரிய விழாக்கள் பொதுவாக நதிகளில் நடந்துவருகின்றன. ஆனால் ஒரு குளத்திற்கு அதிக மகிமை ஏற்பட்டு அதில் இப்படி நடப்பதைக் கும்பகோணத்தில்தான் காணலாம். அங்குள்ள மகாமகக் குளத்தில் நவ நதிகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாவங்களைப் போக்கிக் கொள்வதற்கே இங்கு வந்து கூடுகிறார்கள். இந்த நிகழ்ச்சியை,
'பூமருவும் கங்கைமுதல்
புனிதமாம் பெருந்தீர்த்தம்
மாமகத்தான் ஆடுவதற்கு
வந்துவழி படுங்கோயில்'
என்று சிறுதொண்டர் புராணம் கூறுகிறது.
மஹா பிரளயம் ஒன்று ஏற்பட்டு சகல ஜீவராசிகளும் அழிந்துவிட்டபோது அவைகளை மறுபடியும் சிருஷ்டிப்பது எப்படி என்று மஹா விஷ்ணுவைப் பிரம்மா பிரார்த்திக்க அவர், புண்ணிய ஸ்தலங்களிலிருந்து சிறுது மண்ணை எடுத்து, அமிர்த்தத்தை விட்டு பிசைந்து, ஒரு கலசத்தில் வைத்து, அதில் சிருஷ்டி பீஜத்தைச் சேர்த்து, அதை மேரு மலையில் தென் பாகத்தில் அமைக்கச் சொன்னார். அந்தக் கலசம் தெற்கு திசையில் மிதந்துவர பிரமசிவன் வேட வேஷங்கொண்டு ஓர் அம்பால் அக்கலசத்தை அடித்து உடைத்தார்.
கலத்தின் மூக்கு உடைந்து குடவாயில் என்ற இடத்தில் விழுந்தது. அமிர்தம் வழிந்தோடி இரண்டு குளங்களை உண்டாக்கிற்று. அவற்றிற்கே 'மகாமக தீர்த்தம்' என்றும், பொற்றாமரைத் தீர்த்தம் என்றும் பெயர்கள் வழங்குகின்றன.
சிவபெருமான் நின்று பாணம் தொடத்த இடமே 'பாணபுரி' என்னும் க்ஷேத்திரமாக விளங்குகிறது. அந்த ஸ்தலத்தில் உள்ள லிங்கத்துக்கு பாணபுரீசர் எனனும் திருநாமமும் வழங்குகின்றன.
ஆதி கும்பேசுவரர்
கங்கை, யமுனை, ஸரஸ்வதி, நருமதை, கோதாவரி, மஹாநதி, பயோஹிணி (பாலாறு), காவிரி, ஸரயூ ஆகிய நவ நதிகளையும் புனிதமான நதிகள் என்று நம் நாட்டில் கொண்டாடுகிறார்கள். இந்த நதிகளில் ஏதாவது ஒன்றில் நீராடினாலும் பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும் என்பது நம் நாட்டு மக்களுடைய வெகு கால நம்பிக்கை. இப்படி மக்கள் பல காலமாகச் செய்த பாவங்களை ஏற்றுக் கொண்ட பவித்ரமான நவ நதிகளின் தேவதைகள் தங்கள் பாவங்களைக் கழிக்கும் வகையை நாடி, சிவபெருமானை நோக்கித் தவம் செய்தனர். சிவபெருமானின் அருளினால் அவர்கள் ஒன்பது கன்னிகையாக உருக்கொண்டு மகா மகக் குளத்தில் வந்து நீராடிப் பாவங்களைப் போக்கிக் கொண்டனர். மற்றும் அவர்களுடைய சக்தியில் பாதி அக்குளத்தில் தங்கியும் இருக்கிறது.
இப்படி விசேஷ மகிமை பெற்ற காரணத்தினாலேயே இதற்கு கன்யா தீர்த்தம் என்று பெயர் உண்டாயிற்று.
கன்யா தீர்த்தத்தை சுற்றிலும் பதினாறு மண்டபங்கள் அமைந்திருக்கின்றன. பதினாறாம் நூற்றாண்டில் தஞ்சாவூரில் ஆட்சி செலுத்திய அச்சுதய நாயக்கரின் முதல் மந்திரியான கோவிந்த தீட்சிதர் என்பவரே இவற்றை நிர்மாணித்தவர். இங்கேதான் மன்னர் 'துலாபார' தானம் செய்தார். அக்காட்சியைக் குளத்தின் வடகரையில் மேற்கு மூலையில் உள்ள மண்டபத்தில் காணலாம். இதனாலேயே அது 'துலாபார மண்டபம்' என்று வழங்கப் பெறுகிறது
- என்.கே கிருஷ்ணமூர்த்தி
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
KALAIMAGAL MAGAZINE FEB.16