|
Post by rrajeshwari on Nov 21, 2015 15:42:12 GMT 5.5
Namaskaram,
Kindly excuse me if this is not the right forum to put this question.
Why girls should not leave her hair open? Now-a-days many people prefer to cut their hair and leave it open. I want to give a logical answer to my kids in case they ask. They have been good and wear 2 braids as of now but I want to be ready if they come to me with the q looking at the majority around them
Thank you.
|
|
|
Post by Sumi on Nov 21, 2015 17:07:23 GMT 5.5
Dear Member rrajeshwari, Here is Sri Maha Periva's upadesam on the subject. "குடுமி, கொண்டை, பின்னல் என்றிப்படிக் கேசத்தை விரிக்காமல் ஒரு கட்டுக்குள் வைத்திருந்தால்தான் மங்களம். ஸ்திரீகள்-புருஷர்கள் யாரானாலும் பிரேத கார்யத்தில்தான் கேசத்தை அவிழ்த்து விடுவது. மற்ற சமயங்களிலும் அப்படி இருந்தால் அதைப்போல ஒரு க்ஷாமம் கிடையாது. எப்போதும் அப்படி என்றால் லோகத்தில் பிரேதம், ஆவி சூழ்ந்திருக்கிற மாதிரியான நிலவரம்தான் இருக்கும். மனசின் அடக்கம், கட்டுப்பாடு என்பதில்தானே உத்தமமான வாழ்க்கையே இருக்கிறது? அதற்கு வெளிச் சின்னமாகத்தான் அடங்காமல் பறக்கிற கேசத்தை ஸ்திரீ-புருஷர் இருவருமே முடிந்து கொண்டு அதனாலேயே துர்மங்கள சக்திகள் சேராமலும் ரக்ஷித்தார்கள். கேசத்தின் ஒவ்வொரு இழையையும் அப்படியே விரித்து விட்டு விட்டால் துஷ்ட சக்திகளைப் பிடித்து இழுத்து வருகிற ஒவ்வொரு ‘எரியல்’ மாதிரி. அதனால்தான் அதை அப்படி விடாமலே முடிவது. அடியிலிருந்து நுனிவரை பின்னி, நுனியில்கூட ஒரு பிச்சாளமும் வெளியே பார்க்க இல்லாமல் நாரோ, குஞ்சலமோ வைத்துத் தற்காப்புப் பண்ணுவார்கள். பின்னலையே கொண்டையாகப் பிச்சோடா என்றும் முடிந்து போட்டுக் கொள்வார்கள். நம் மாதிரி ‘லோல்’ படாமல் பாரமார்த்திகமாகப் போன யோகசித்தர்கள் விஷயம் வேற. அவர்கள் நீண்ட ஜடையை அப்படியே தொங்க விட்டாலும் பீடைகள் நெருங்காது. அவர்களுடைய அவிழ்ந்த கேசமும் திவ்ய சக்திகளையே க்ரகுஇத்துக் கொடுக்கும். மகான்களான ரிஷிகளும் ‘ஜடாமுடி’ என்றே சொல்கிற மாதிரி ஜடையைத் தூக்கி கட்டி நன்றாக முடிந்து கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். பொதுவாக, கேசத்தை வளர்ப்பது சக்திகளைச் சேகரித்துக் கொள்பவர்களுக்கு ஆனதுதான். பைபிளில் கூட ஸாம்சன் என்கிறவனின் சக்தி அவனுடைய கேசத்திலேயே இருந்ததாகக் கதை வருகிறது. மகான்களிடம் அதீத சக்தி இருந்தாலும் அது நல்லதற்கே ப்ரயோஜனமாகும். நம்மிடம் சக்தி ஒரு அளவுக்கு மேல சேர்வது ஆபத்துதான். கிருஹஸ்தரானால் அப்படி சக்தியைச் சேர்த்துத் தருகிற கேசத்தை நன்றாக கட்டி முடிந்து அடக்க வேண்டும். சக்திகளை தள்ளி சாந்தத்திலேயே போக வேண்டுமேன்பதால் தான் அவன் கேச விசர்ஜனம் பண்ணி மொட்டையடித்துக்கொண்டது. வபனம் என்று அப்படி ‘பீரியாடிக’லாக அவன் சாஸ்திரம் சொல்கிறபடி நாள் பார்த்து கேச விசர்ஜனம் செய்வதற்கு முன் கேசம் வளரத்தானே செய்யும்? அது சக்தியை இழுத்துக் கொள்ளமலிருப் பதற்காகவும் அவன் முட்டாக்குப் போட்டுக் கொள்வது. முண்டனம் செய்த மண்டையை வெளியே காட்டக்கூடாது என்பதும் ஒரு காரணம். தபோ சக்தியை க்ரஹித்து தாரணம் பண்ணும்படியாக நேரும் தீக்ஷ காலம் முதலியவற்றில் க்ஷவரம் கூடாது என்று சாஸ்திரம் கூறியிருக்கிறது. அதே சாஸ்த்ரம் அந்தக் காலம் ஆனவுடன் க்ஷவரம் செய்து கொள்வதையும் ஒரு முக்கியமான ஸம்ஸ்காரமாகவே சொல்லியிருக்கிறது. மொத்தத்தில் விஷயம், நம்மைப் போன்ற சாமான்யப்பட்டவர்கள் கேசத்தை அவிழ்த்துப் போட்டுக் கொண்டிருந்தால் அது கேட்ட சக்திகளை, பீடைகளை ஆகர்ஷிக்கும் என்பதுதான். துர்மாந்த்ரீகம் பண்ணும்போது, நாசகாரமான ஆபிசாரம் செய்வதென்றால், அப்போது அதற்கான யந்த்ரத்தில் ஒருவருடைய நகத்தை வைத்தும், கேசத்தைச் சுற்றியுந்தான் பூமியிலே புதைப்பார்கள். இதிலிருந்தே கேசம் என்று சர்வ சாதாராணமாக இருப்பதை அதற்கேற்ற முறையில் ஜாக்ரதையாக ரக்ஷிக்காவிட்டால் எத்தனை ஆபத்து, அனர்த்தம் என்று தெரிந்து கொள்ளலாம். கேசத்தில் இப்படி ஆபத்துக்கு இடமிருக்கிறது என்பதால் அதை வெட்டிக் குறைத்து புருஷர்களானால் ‘க்ராப்’ வைத்துக் கொள்வது , ஸ்திரீகளானால் ‘பாப்’ வைத்துக் கொள்வது என்பதும் சுத்தத் தப்பு. இப்படிப்பட்ட எல்ல விஷயங்களிலும் சாஸ்திரம்தான் பிராமாணம். எது எவருக்கு, எந்த அளவுக்கு என்று அது நிர்ணயம் செய்து கொடுத்திருக்கிறபடிதான் செய்ய வேண்டும். புருஷர்களானால் க்ருஹஸ்தரும் ப்ரம்மசாரியும் கேசத்தில் ஒரு பாகத்தை மட்டும் க்ஷவரம் செய்துகொண்டு மற்றதை ‘சிகை’ என்ற குடுமியாக முடிந்து கொள்ள வேண்டும். சந்நியாசி முழு மொட்டை. ஸ்த்ரீ சந்நியாசியின் உசந்த ஸ்தானத்திலேயே ஞான-வைராக்யாதிகளுக்கு இருப்பிடமாக வைக்கப்பட்ட விதந்துக்களுக்கும் (விதவைகளுக்கும்) அப்படியே பூர்ண கேச விசர்ஜனம். இங்கேயும் சாஸ்திரமே அங்கீகரிக்கிற குலாசாரத்தின் படி அந்தக் குலங்களைச் சேர்ந்தவர்கள் விசர்ஜனம் செய்யாமலும் இருக்கலாம். விதந்துக்கள் விஷயம் இப்படி இரண்டு விதமாயிலிருந்தாலும், ஸ்த்ரீகளில் பாக்கி அதிகம் பேராக இருக்கிற கன்னிகைகளும் சுமங்கலிகளும் ‘பாப்’ செய்து கொள்வது மாதிரியாகக் கேசத்தை வெட்டிக் கொள்கிற எந்த பேஷனையும் ஸ்வப்னத்தில்கூட நினைக்கக் கூடாது. ஸ்த்ரீகள் விஷயத்தில் விரித்த கேசம் எத்தனை அலக்ஷ்மியோ (மூதேவித்தனமோ) அத்தனை அலக்ஷ்மி கேசததைக் கொஞ்சமோநஞ்சமோ வெட்டிக் கொள்வதும். இதனாலெல்லாம் ஊரிலும் க்ஷாமம் ஜாஸ்தியாகும்." Namaskaram, Kindly excuse me if this is not the right forum to put this question. Why girls should not leave her hair open? Now-a-days many people prefer to cut their hair and leave it open. I want to give a logical answer to my kids in case they ask. They have been good and wear 2 braids as of now but I want to be ready if they come to me with the q looking at the majority around them Thank you.
|
|
|
Post by rrajeshwari on Feb 16, 2016 9:36:30 GMT 5.5
Thanks a lot for the very detailed reply. Never knew so many intricacies are involved around tying the hair. It will be in nice if many people get to know about this.
|
|
|
Post by kpriya on Feb 19, 2016 0:00:16 GMT 5.5
Can you please translate what is being said above in English for the non-tamil readers? It would be greatly appreciated.
|
|