|
Post by subi24 on Mar 27, 2014 2:30:49 GMT 5.5
மனிதனாக பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலாக பாக்கியம் பிறருக்கு சேவை செய்வதே!
|
|
|
Post by radha on Mar 28, 2014 1:07:09 GMT 5.5
HARI OM !
தாமதம் வேண்டாமே!
* மக்களுக்குத் தொண்டாற்ற விரும்புபவர்களின் மனதில் சாந்தமும், ஊக்கமும் இருக்க வேண்டும். முகத்தில் புன்னகை தவழ வேண்டும். * நாம் ஒவ்வொருவரும் தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல்லாவது கொடுக்க வேண்டும். இது மிகச் சிறந்த தர்மம். * தர்மத்தை பலன் கருதிச் செய்ய வேண்டாம். பலன் கொடுக்க வேண்டியது ஈஸ்வரன் வேலை. * பக்தி செய்வதால் கடவுளுக்கோ, மகான்களுக்கோ லாபம் இல்லை. எல்லாம் நமக்குத் தான். * தர்மம் செய்வதாக இருந்தால் நினைத்தவுடன் உடனே செய்து விடுங்கள். தாமதித்தால் மனம் மாறிவிட வாய்ப்புண்டு. * அந்தரங்க சுத்தம் இல்லாமல் செய்யும் எந்த செயலும் அதற்குரிய பலனை தருவதில்லை. * நமக்கு இரு கைகள் இருக்கின்றன. ஒருகையால் கடவுளின் திருவடிகளைப் பிடித்துக் கொள்ளுங்கள். மற்றொரு கையால் உலக விஷயங்களில் ஈடுபடுங்கள். * பணத்திற்காக அலைவது மட்டுமே வாழ்க்கையல்ல. தினமும் கொஞ்சநேரமாவது இறைசிந்தனையுடன் இருக்கவேண்டும். - காஞ்சிப்பெரியவர் SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
|
|