Post by madambakkamshanks on Apr 22, 2013 11:55:51 GMT 5.5
கோரிக்கை நிறைவேற்றும் ஓரிக்கை கானம்
(பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் - மெட்டு )
ஓரிக்கை சென்றிட கோரிக்கை நிறைவேறும்
ஓர் அபயக் கையை தரிசிப்போமே
பாரினை வலம் வந்த கார் மேகம் இவரே
ஓரிணை இல்லா மஹாஸ்வாமி அவரே
நம்பி கை கூப்பிட நம் வாழ்க்கை மலரும்
நம்பிக்கை வளர்ந்து நலம் பெறுவோமே
கும்பிட்ட கையை இறக்கிடும் முன்னே
நம் வினை தீரும் மஹா ஸ்வாமி அருளால்
கூப்பி கை தொழுதே அவர் பாதம் பற்றிட
காப்பார் நம்மை காருண்ய சிவனாய்
வேப்பிலை கசப்பாய் வாழ்வில் தவித்தோர்
வேதனை தீர்த்து அருள்வார் அவரே
நம்பிக்கை இழந்தோர் வாழ்வில் தாழ்ந்தோர்
எம்பியே குதித்திட செய்வார் இவரே
தும்பிக்கையான் போல் அமர்ந்தே இவரே
அம்பிகை உருவில் காப்பார் இவரே
பலகையில் அமர்ந்தே பல கை கூப்பச் செய்வார்
உலகை வலம் வந்த உத்தமர் இவரே
வலக்கை அருள்தரும் இடக்கை ஆற்றிடும்
உலக்கையாய் இவர் நிமிர்த்திடுவாரே
சிலர் கை கூப்பிட சிலையாய் நிற்பார்
சீட்டிகை போட்டே சீறிடுவாரே
இலக்கை மீறி இழிசெயல் புரிந்தோரை
உலக்கை பார்வையால் வழி மாற்றிடுவார்
கைமாறு கருதாது கைமேல் பலனளிப்பார்
கைகூப்பி வணங்கிட கண் மலர்வாரே
கைங்கர்யம் செய்வோர்க்கு கருணா மூர்த்தியே
கைலாய சிவனாய் காட்சி தருவாரே
இரு கை கூப்பி சரணடைந் திடவே
ஒருகை கூப்பி வாழ்வளிப்பாரே
மறுகை அறியாமல் கைமாறு செய்வார்
இருக்கையில் அமர்ந்தே உலகை அறிவார்
-தேனுபுரீஸ்வர தாசன் இல. சங்கர்
Pls see my songs on mahaperiyavaa :
www.periva.proboards.com/thread/4053/orikkai-nokki-kooppuvom-tamil-mahaperiyava
www.periva.proboards.com/thread/3717/mannulagam-vandha-shivane-mahaperiyava-2
www.periva.proboards.com/thread/3973/kaarunya-roopane-kanchi-maamuniye-tamil
www.periva.proboards.com/thread/3614/mannulagam-vandha-shivane-mahaperiyava
www.periva.proboards.com/thread/3755/mannulagam-vandha-shivane-mahaperiyava-3
www.periva.proboards.com/thread/3781/anusham-song-brindavana-dharisana-gaanam
www.periva.proboards.com/thread/3703/unai-paarthu-magizhvome-maamuniye
www.periva.proboards.com/thread/3656/kaanchiyil-arulpuriyum-maamuniye
"Life without God
is like an unsharpened pencil
- it has no point."
Happy moments, praise God.
Difficult moments, seek God.
Quiet moments, worship God.
Painful moments, trust God.
Every moment, thank God
- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.
♪♫••♥*•Shanks♪♫••♥*•♫♪