Post by radha on Aug 7, 2012 2:47:21 GMT 5.5
[/img] 03.jpgOM SRI GURUPYO NAMAHA:,Respectful pranams to Sri Kanchi Periva.
ஒரே இறைவனுக்கு பல வழிபாடுகள்பிப்ரவரி 26,2010,15:06 IST
* நம்முடைய வீடுகளில் பலவிதமான வடிவங்களில் கடவுளை வழிபாடு செய்கிறோம். கடவுளுக்கு இத்தனை பெயர்கள் உண்டா என்பதும், அவரின் உண்மைத் தன்மையை உணர இத்தனை வடிவங்கள் தேவையா என்பதும் நம் மனதில் சந்தேகமாகத் தோன்றும். உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள் உலகில் இல்லை. இருப்பவர் ஒருவர் தான். இன்னும் சொல்லப்போனால் நம் உயிரும் கூட அவரின் ஒரு வடிவம் தான். இவ்வுலகத்தை நடத்தும் பெரிய சக்தியாக இருந்து அவரே நம்மை வழிநடத்துகிறார்.
* நம் மண்ணில் தோன்றிய மகான்கள், ஒரே கடவுளையே பல வடிவங்களாக வழிபட்டு, அவரவருக்குரிய வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தி விட்டார்கள். இந்த முறைகள் அவர்களின் அனுபவத்தின் வாயிலாக கண்டறியப்பட்டவை. அம்முறைகளில் நமக்கு பிடித்ததைப் பின்பற்றினால் நாமும் அவர்களைப் போலவே, ஆண்டவனின் அருளைப் பெறமுடியும். நமது இஷ்டதெய்வ வழிபாட்டினைத் தொடர்ந்து செய்யும்போது, நமக்கென்று தனியான மனப்போக்கு தேவையில்லை என்ற நிலை உருவாகும். அப்போது, இருப்பது ஒரே கடவுள் தான் என்ற உறுதிநிலையைப் பெற்றுவிடுவோம்.
- காஞ்சிப்பெரியவர்
கடவுளுக்கு உருவம் உண்டா?
dinamalar.com
ஒரு சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த ஒரு பக்தர், கடவுளுக்கு உருவம் உண்டா? என்று கேட்டார். அதற்கு ராமகிருஷ்ணர், இறைவன் உருவம் உடையவர், உருவம் அற்றவர்-இந்த இரண்டும் அவரே! அதாவது பனிக்கட்டியையும், தண்ணீரையும் போல என்று பதில் கூறினார். இறைவன் என்பவன் முடிவில்லாமல் பரந்து கிடக்கும் மகா சமுத்திரத்தைப் போன்றவன். சமுத்திரம் அதீத குளிர்ச்சியின் காரணமாக சில இடங்களில் உறைந்திருக்கும். அவ்விதம் உறைந்த பனிக் கட்டிகள் பலவித வடிவங்களில் இருக்கும். ஆனால் சிறிது வெப்பம் அதிகரித்ததும் பனி உருகி நீரோடு நீராகக் கலந்து விடும். பனிக்கட்டியும் நீரும் ஒரே சமுத்திரத்தைச் சேர்ந்தவைதான். இறைவனும் அப்படித்தான். பக்தியின் குளிர்ச்சியால் அவன் பக்தர்களுக்கு தகுந்தாற்போல பலவேறு வடிவங்களில் தோன்றுகிறான். ஞானம் என்ற வெம்மை செயல்பட ஆரம்பித்ததும், அவனும் வடிவமற்றவானாகி விடுகிறான். இவ்வாறாக, சாதாரண பக்தனுக்கு வடிவம் தேவைப்படுகிறது. ஆனால் அனைத்தும் அறிந்த ஞானிக்கு வடிவம் தேவைப்படுவதில்lai
Kanchi Maha Periva Thiruvadigal Saranam