Post by kramans on Jul 19, 2013 3:33:33 GMT 5.5
சுக்கில பட்சம், கிருஷ்ணபட்சம்
சந்திரன் பூமியை ஒரு தடவை சுற்றிவர ஏறக்குறைய 29 1/2 நாட்கள் ஆகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு திதி எனப்படும். ஒரு சந்திர மாத்தில் முப்பது திதிகள் உள்ளது. அம்மாவாசையில் இருந்து பவுர்ணமி வரையில் உள்ள 15 திதிகள் சுக்கிலபட்சம்(வளர்பிறை) எனப்படும். பவுர்ணமியில் இருந்து அம்மாவாசை வரையில் உள்ள 15 நாட்கள் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) எனப்படும்.
சூரிய சந்திரனின் தொலைவுகள்
அமாவசை அன்று சூரியனும் சந்திரனும் ஒன்றாக உதித்து ஒன்றாக மறைகின்றன. அதிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி விதம் சந்திரன் சூரியனில் இருந்து பிரிந்து செல்கிறது. நான்காவது நாளான சதுர்த்தி அன்று சந்திரன் சூரியனில் இருந்து 37 டிகிரி முதல் 48 டிகிரி வரை பின்னால் உள்ளது. 11 நாள் ஏகாதசியன்று சூரியனில் இருந்து 134 டிகிரி பின்னாள் இருக்கிறது. பவுர்ணமி அன்று சந்திரன் சூரியனில் இருந்து 180 டிகிரியில் இருக்கிறது.
எளிதில் செரிமாணம் ஆகும்
மேற்குறிய நாட்களில் சூரியனில் இருந்து சந்திரன் தொலைவில் விலகி செல்வதில் புவி ஈர்ப்பு சக்தி அதிகமாகிறது. அந்த சமயத்தில் எப்போதும் போல் உண்வு உட்கொண்டால் அது சரியாக செரிமாணம் ஆகாது. எனவே நமது முன்னோர்கள் அந்த நாட்களில் விடதம் இருக்க சொல்லி இருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியன்று சந்திரன் சூரியனுக்கு 130 டிகிரி பின்னால் இருக்கிறது.அன்று சூரியன் நடுவரைக்குத் தெற்கே மிக அதிகமான தொலைவில் இருக்கிறது. அன்று உபவாசம் இருக்கிறோம். இது ஆன்மீக நிலையில் மிக உயரிய நிலையைத் தருகிறது.
விரதமிருந்தால் கிடைக்கும் நன்மைகள்
ஏகாதசியன்று விரதமிருந்தால் முதல் 10 நாட்கள் உணவு உட்கொண்டு , அதனால் உள்ளே உணவு உட்கொண்டு, அதனால் உள்ளே சென்றுள்ள கழிவுப் பொருட்கள் கரைந்து வெளியேறுகின்றன. 11 நாளான ஏகாதசி அன்று செரிமான கருவிகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. நமக்கும் வைட்டமின் "எ" "சி" தேவைப்படுகிறது. ஆகவே தான் துவாதசி அன்று வைட்டமின் "எ" சக்தி நிறைந்த அகத்திக்கீரை,வைட்டமின் "சி" சக்தி நிறைந்த நெல்லிக்காயையும் உணவுடன் சேர்த்துக் கொள்கிறோம்.
ஒவ்வொருநாளும் நாம் செய்யவேண்டிய சூரிய நமஸ்காரமும், ஒவ்வொரு மாதமும் இருமுறை வருகின்ற ஏகாதாசியோடு தொடர்ந்து வருகின்ற துவாதாசி உணவும், நம்முடைய கண்ணொளியை காத்து உடல் நலத்தை பேணி வருகின்றன.