Post by veit on Jun 7, 2013 16:27:06 GMT 5.5
திதிகளில் செய்ய தகுந்த காரியங்கள்.
ப்ரதமை: வாஸ்து கர்மங்கள்;
துவிதியை: ப்ரதிஷ்டை; வ்ரதம்; பூஷண தாரணம்;காரியாரம்பம். குட முழுக்கு;
த்ருதியை: அன்ன ப்ராஸனம், சங்கீதம் பயிற்சி; சீமந்தம்; சில்ப கர்மம், ஸகல சுப கர்மம்.
சதுர்த்தி: ச்த்ரு பாத நிவர்த்தி; யுத்தம்;அக்னிப் ப்ரயோஜனம்.விஷ சஸ்த்ரம்.
பஞ்சமி: எல்லா சுப கார்யங்களுக்கும் ஏற்றது.
சஷ்டி :சில்ப கர்மம். வாஸ்து. வாஹனாதிகள் வாங்குதல்; ஆபரணம் உண்டாக்குதல்;/வாங்குதல்;
ஸப்தமி: யானை. குதிரை, வாஹணங்கள் வாங்குதல்; விவாஹம். சங்கீத வாத்யங்கள், வஸ்த்ரம் பூஷணம் தயாரிப்பது./வாங்குதல்;
அஷ்டமி: நடனம், யுத்தம், சாஸ்த்ர தாரணம்.
நவமி; கலகம், விஷாக்னி, சஸ்த்ர ப்ரயோகம்,(அறுவை சிகிச்சை)
தசமி: விவாஹாதி சுப கர்மங்கள்; பூஷண தாரண்ம், யாத்ரை; கிரக ப்ரவேசம்; வாஹனம் ஏறுதல்;
ஏகாதசி: விவாஹம்; விரதம்; கடன் தீர்த்தல்; சில்பம்
துவாதசி; விவாகாதி சுப கர்மங்கள். யாத்திரை தவிற
த்ரயோதசி: தெய்வ நியமங்கள்; யாத்திரை, சத்ருநிவர்த்தி, வஸ்த்ர தாரணம்;
சதுர்த்தசி: விஷ ப்ரயோகம்; சஸ்த்ர ஆயுதம் தயாரிப்பது.
அமாவாசை: பித்ரு யாகாதிகள். அக்கினி யாதானம்; மஹா தானம்.
பெளர்ணமி: யக்ஞ கர்மங்கள்; சில்ப விருத்திகள்;; விரதங்கள்;
மஹா விஷ்ணுவிடம் அஷ்டமி, நவமி திதிகள் முறையிட்டதின் பலனாய் கிருஷ்ணாஷ்டமி, ராமநவமி பிற்ந்த நாளாய் கொணடாடப் படுகிறது.
பொதுவாக திதிகளில் பிறந்த நாட்கள் யாரும் கொன்டாடுவதில்லை.
; .
கரணத்தில் செய்யும் சுப கார்யங்கள். சர கரணம்=7.
பவம்: பெளஷ்டிக ஸ்திர சுப கார்யங்கள்
பாலவம்: பிராமண் பூஷணம்.
கொளலவம்> பெண்களுக்கு உரிய கார்யங்கள்.
தைதுலம்: சுப கார்யங்கள், ஸத் ஜன ஆஸ்ரயம்.
கரசை: விதை விதைத்தல்
வணிசை: வ்யாபாரங்கள்; நிலையான சுப கார்யங்கள்.
பத்திரை: ஏவல்; பில்லி; சோன்யம்; விஷ ப்ரயோகம்.
ஸ்திர கரணம்=4. இவைகளில் சுப கார்யங்கள் செய்ய கூடாது.
சகுனி: மந்த்ரோபதேசம்; மருந்து சாப்பிடுதல்.
ச்துஷ்பாதம்: பித்ரு காரியங்கள்.
நாகவம்: உக்கிர காரியங்கள்.
கிம்ஸ்துக்னம்: யாகம்; அக்னி கார்யங்கள்.
இந்த ஸ்திர கரணம் எப்போதும் அமாவாசை, பிரதமை;பெளர்ணமி பிரதமை களில் தான் வரும்.