I would like to do aupasanam on a daily basis. Can some body be able to provide a book or article with step by step explanation of doing aupasana. I have few books which has only the mantras to be chanted but it does not provide procedure for doing it.
sir, herewith i am giving oupasam for yajur vedam aapasthampa suthram. kindly let me know your vedam and suthram. with kind regards. agni santhanam should be done before starting oupasanam.
ஓளபாஸனம்;
.சுக்லாம்பரதரம் விஷ்ணூம் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம்
த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே.
ஓம் பூஹு===========ஸூவரோம்
மமோ பாத்த ஸமஸ்த துரியத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
ப்ராதர் ஓளபாஸனம் (ஸாயமெளபாஸனம்) ஹோஷ்யாமி
அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் விடவும்.
அக்னி தியானம்;-
சத்வாரி சிருங்காஹா த்ரயோ அஸ்யபாதாஹா த்வே சீர்ஷே ஸப்தஹஸ்தாஸோ அஸ்ய த்ரிதாபத்தோ விருஷபோ ரோரவீதி மஹோதேவோ மர்த்யாகும் ஆவிவேச –ஏஷஹி தேவஹ ப்ரதிசோனு ஸர்வாஹா பூர்வோஹிதாஜஹ ஸ உ கர்பே அந்தஹ ஸவிஜாய
மானஸ்ஸஜ நிஷ்யமானஹ ப்ரத்யங்முகாஸ்திஷ்டதி விஸ்வதோமுகஹ
ப்ராங்முகோ தேவ ஹே அக்னே மம அபிமுகோ பவ
அக்னிக்கு அலங்காரம்
கிழக்கே நடுவிலிருந்து அக்னிக்கு அருகில் எட்டு திக்குகளீலும் அக்ஷதையால் அலங்காரம் செய்க,
இந்த்ராய நமஹ; அக்னயே நமஹ; யமாய நமஹ நிருரிதயே நமஹ; வருணாய நமஹ; வாயவே நமஹ; ஸோமாய நமஹ; ஈசானாய நமஹ ;அக்னயே நமஹ என்றூ சொல்லி அக்னியில் அக்ஷதை போடவும்.
ஆத்மனே நமஹ என்றூ தன் தலையில் அக்ஷதை போட்டுக்கொள்ள வேண்டும். ஸர்வேப்யோ ப்ராஹ்மனேப்யோ நமஹ ப்ராமணர் மீது அக்ஷதை போடவும்.
ஹோம த்ரவ்யத்தை – ஓம் பூர்புவஸ்ஸூவஹ என ப்ரோக்ஷித்து –ஹோஷ்யாமி –என் உத்த்ரவு கேட்டு ஜுஹூதி என தானே பதில் சொல்லி கொண்டுகையால் ஹோமம் செய்யவும்.
ஓம் ஸூர்யாய ஸ்வாஹா – ஸூர்யாய இதம் ந மம. இது காலையில்
ஓம் அக்னயே ஸ்வாஹா – அக்னயே இதம் ந மம –இது மாலையில்
முன் செய்த ஹோமத்தை விட அதிகம் அரிசி எடுத்து கொண்டு முன் ஆஹுதி மேல் படாமல் ஈசான மூலையில் உரக்க மந்திரம் கூறீ ஹோமம் செய்க,
அக்நயே ஸ்விஷ்ட க்ருதே ஸ்வாஹா –அக்னயே ஸ்விஷ்ட க்ருதே இதம் ந மம
அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கி.ல் மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
–அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் சுற்றவும்.
அக்நியில் ஒரு ஸமித்தை வைத்து அக்னி உபஸ்தானம் கரிஷ்யே என்றூ எழுந்து நின்றூ சொல்லவும்.
அக்னே நய ஸூபதா ராயே அஸ்மான் விசுவானி தேவ வயுனானி வித்வான் –யுயோத் யஸ்மத் ஜுஹு ராண மேனோ பூயிஷ்டாம்தே நம உக்திம் விதேம
அக்னயே நமஹ மந்த்ர ஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஹுதாசன யத்து தம்து மயா தேவ பரிபூரணம் ததுஸ்துதே—ப்ராயஸ்சித்தானி அசேஷானி தபஹ் கர்ம ஆத்ம
கானிவை யானி தேஷாம் அசேஷானாம் க்ருஷ்னானு ஸ்மரணம் பரம் . ஶ்ரீ க்ருஷ்ண; க்ருஷ்ண க்ருஷ்ண