Post by varagoorannarayanan on Sept 7, 2022 8:31:54 GMT 5.5
பிரிட்டிஷ்காரன் காலத்து, ஒரு ரூபாய் வெள்ளிக்காசுகள்
பெரியவாளுக்கு காணிக்கையாய் கொடுத்த ஏழை பக்தன்
இது அசல் ஒரு ரூபாய் வெள்ளிக்காசு, செல்லாக்காசு இல்லை. இந்தக் கிராமத்திலே நீதான் நிறைய காணிக்கை கொடுத்திருக்கே"--பெரியவா.(ஏழை பக்தனுக்கு அருள் புரிவதற்கென்றே, வீடு,வீடாகச் செல்லும் திட்டத்தை மேற்கொண்ட பெரியவா)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரு கிராமத்தில் முகாம். ரொம்பவும் அதிர்ஷ்டம் செய்த கிராமம். அந்தக் கிராமத்தில், ஒவ்வொரு வீடாகத தானாகவே சென்று, தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள், பெரியவாள்.
எல்லார் வீட்டாருக்கும் மட்டில்லாத மகிழ்ச்சி. அவசரம், அவசரமாக அலைந்து திரிந்து, பழ வகைகள் வாங்கி வைத்தார்கள். வீட்டைக் கூட்டி, வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டார்கள். இயன்ற அளவு காணிக்கை செலுத்தி வந்தனம் செய்தார்கள்.
ஓர் ஏழை வீடு. பழம் - புஷ்பத்துக்குக் கூட காசு இல்லை. கோலம் போட்டு விளக்கேற்றி வைத்து, ஆசனப் பலகை போட்டு வைத்திருந்தார்கள்..
பெரியவாளுடன் வந்த கிராமத்துப் பிரமுகர்கள், அந்த வீட்டைத் தவிர்த்து விட்டுப் போவதற்கு என்னென்னவோ முயன்றார்கள். ஆனால், விடாப்பிடியாக பெரியவாள் அந்த வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள்.
அந்த வீட்டுக்காரருக்குக் கண்களில் நீர் பெருகிக்கொண்டு வந்தது. துக்கத்தினாலா, ஆனந்தத்தினாலா என்று சொல்ல முடியவில்லை. நமஸ்காரம் செய்தார்.
"நான் ரொம்ப ஏழை..பெரிசா காணிக்கை செலுத்த முடியலை.எங்கம்மா, வெச்சுட்டுப் போன செல்லாக்காசு- பழைய காசு - ஓர் உண்டியல் நிறைய இருக்கு. பெரியவாளுக்கு அதை சமர்ப்பணம் பண்றேன்" என்று தீனஸ்வரத்தில் கூறிக் கொண்டே, மண் உண்டியலைப் பெரியவாள் முன் வைத்தார்.
பெரியவாள்,ஒரு காசைக் கையிலெடுத்துப் பார்த்தார்.
"இது பிரிட்டிஷ்காரன் காலத்து, அசல் ஒரு ரூபாய் வெள்ளிக்காசு. செல்லாக்காசு இல்லை. இந்த கிராமத்திலேயே நீதான் நிறைய காணிக்கை கொடுத்திருக்கே"----பெரியவா.
அந்த வீட்டுக்காரர் மட்டுமில்லை, பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் நெகிழ்ந்து போனார்கள்.
அந்த ஏழை பக்தனுக்குப் பிரத்யேகமாக அருள் புரிவதற்கென்றே, ஒவ்வொரு வீடாகச் செல்லும் திட்டத்தை வகுத்துக் கொண்டார்களோ!
எப்படியோ! பிரிட்டிஷ்கார வெள்ளிக் காசுகளுக்கு உண்டியல் சிறையிலிருந்து,விடுதலை கிடைத்தது என்பது நிஜமான உண்மை,