Post by varagoorannarayanan on Aug 26, 2022 8:41:00 GMT 5.5
காஞ்சியை விட்டு தேனம்பாக்கத்தில் ஏன் தங்கணும்?
பெரியவாள் சொன்ன பதில், கல்லூரி மாணவனுக்கு மட்டுமில்லை. நெஞ்சுக்குள் வேதனையுடன் முணுமுணுத்துக் கொண்டிருந்த எத்தனையோ பக்தர்களுக்கும்தான்.
பிரம்ம காஞ்சி என்ற பெயரும், ஸோம கணபதியின் சிறப்பும், பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்யும் அணுக்கத் தொண்டர்களுக்குமே புதிதான செய்திகள்
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பெரியவாள், காஞ்சிபுரத்தை அடுத்துள்ள தேனம்பாக்கம் (சிவாஸ்தானம்) கோயில் பக்கத்தில், வெகுகாலம் தங்கியிருந்தார்கள். நகரத்துக்கு வெளியே அந்த இடம் இருந்ததால், பக்தர்கள் வந்து போவதற்குக் கஷ்டமாக இருந்தது.வாடகை வண்டி வைத்துக் கொண்டு வருவதற்கு அநேக பக்தர்களுக்கு இயலாத நிலை. நீண்ட தொலைவு நடந்தாவது பக்தர்கள் வந்து கொண்டுதான் இருந்தார்கள்.(இந்த கிராமத்துக்கு பல வி.ஐ.பி.கள் வந்திருக்கிறார்கள். இந்திரா காந்தி, மகா ஸ்வாமிகளை இங்கேதான் தரிசித்தார்)
கல்லூரி மாணவன் ஒருவன், ஒருநாள் தரிசனத்துக்கு வந்தான். அதிகக் கூட்டமில்லாத சமயம்.
"பெரியவாளுக்கு, பெரிய காஞ்சிபுரத்தில் மடம் இருக்கு.சின்னக் காஞ்சிபுரம் ஆனைகட்டித் தெருவில் ஒரு மடம் இருக்கு.அதையெல்லாம் விட்டுட்டு, இந்த குக்கிராமத்தில் பெரியவா ஏன் தங்கியிருக்கணும்?" என்று கேட்டான்---கல்லூரி மாணவன்
பெரியவாள் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்கள்.
"இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கணும்னு ரொம்ப பேருக்கு ஆசை. ஆனா யாருக்கும் தைரியம் வரலை! நீ கேட்டுட்டே! சந்தோஷம்."
"சந்நியாசிகள், அதிக ஜன நடமாட்டம் இல்லாத, ஏகாந்தமான இடத்தில் இருந்து கொண்டு நிறைய ப்ரணவ ஜபம் பண்ணணும்.காஞ்சிபுரம், பெரிய பட்டணம்...ஜனங்கள்,போக்குவரத்து, வண்டி - வாகனங்கள் சப்தம் அதிகம். இந்தக் கிராமம் டவுனிலிருந்து குறைஞ்ச தொலைவில் இருக்கு, .சப்தம்- இரைச்சல், சண்டை - சச்சரவு எதுவுமில்லே.
"விஷ்ணு காஞ்சி எனப்படும் சின்னக் காஞ்சிபுரத்தில் கொஞ்ச நாள் இருந்தாச்சு.'சிவ காஞ்சி'யில் சிறுது காலம் இருந்தாச்சு. தேனம்பாக்கம் சிவாஸ்தானம் என்பது,'பிரம்ம காஞ்சி' -பிரும்மா யாகம் செய்த இடம். இங்குள்ள சுவாம்க்கு, பிரும்ம புரீஸ்வரர் என்று பெயர். இங்க ஸோமகணபதி இருக்கார்."
சில நிமிடங்கள் இடைவேளை.
"ஸோமாஸ்கந்தர்-னு கேள்விப்பட்டிருக்கியோ?"
"சில கோயில்களிலே பார்த்திருக்கேன்."---மாணவன்.
"அதிலே என்ன விசேஷம்?"--பெரியவா
"பார்வதி - பரமேஸ்வரனுக்கு நடுவில், குழந்தையாக சுப்ரமணியர் இருப்பார்."--மாணவன்.
"அதே மாதிரி, இந்த ஊரில் பார்வதி - பரமேஸ்வராளுக்கு நடுவில் குழந்தை கணபதி இருக்கார். ஆதிசங்கரர் வந்து சிறிது காலம் இங்கே தங்கியிருந்ததாக கர்ண பரம்பரையாகச் செய்தி உண்டு. கோயில் பக்கத்திலேயே குளம் இருக்கு. ஜனநடமாட்டம் அதிகமா இல்லாததாலே ஏகாந்தமா இருக்கு. ரொம்ப நேரம் ஜபம் செய்ய முடியறது. அதனாலே இங்கே தங்கியிருக்கேன்."----பெரியவா.

பிரம்ம காஞ்சி என்ற பெயரும், ஸோம கணபதியின் சிறப்பும், பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்யும் அணுக்கத் தொண்டர்களுக்குமே புதிதான செய்திகள்.
(தேனம்பாக்கத்தில் பெரியவாள் தங்கியிருந்த கட்டடம் இன்னும் இருக்கிறது.தற்போது வேத பாடசாலையும் நடந்து வருகிறது.கஜபிருஷ்டா விமானத்துடன் விளங்கும் ப்ரும்ம புரீஸ்வரர் கோயில் நன்றாகப் பராமர்க்கப்பட்டு வருகிறது. தனியாக அம்பாள் சந்நிதி இல்லை.காஞ்சி காமாக்ஷிதான், அந்தப் பிரதேசம் முழுவதற்குமே பொதுவான சக்தி)