Post by kgopalan90 on Feb 17, 2021 5:11:30 GMT 5.5
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்ற தலைப்பில் நாற்பது ஸம்ஸ்காரங்கள் ஒவ்வொன்றாக விரிவாக பார்த்துக்கொண்டு வருகிறோம்.*
*இந்த சம்ஸ்காரங்கள் மூலமாகத்தான் ஒவ்வொரு ஜீவனும் புதுப்பிக்கப்படுகின்றனர் அதாவது சுத்தமாக்கிறான் என்பதினால்தான் சம்ஸ்காரஹா என்று சொல்லப்பட்டிருக்கிறது.*
*கர்ப்பத்தில் உற்பத்தி ஆனதிலிருந்து ஆரம்பித்து, நாம் செய்து கொண்டு வரக்கூடிய இந்த சம்ஸ்காரங்களினால், ஒவ்வொரு ஜீவனும் உயர்ந்த நிலையை அடைகிறான் என்பதோடு மட்டுமல்லாமல், பிறவிப்பயனை அடைகின்ற வரையிலும் இவைகள் நமக்கு துணை புரிகின்றன.*
*பிறவிப்பயன் என்பது மோக்ஷம். இந்த சம்ஸ்காரங்கள் எல்லாம் ஆகாமல் நாம் ஞானத்திற்கு முயற்சி செய்யலாமே தவிர, அது சபலமாக ஆகாது. இந்த சம்ஸ்காரங்கள் மிகவும் துணை புரிகின்றது நாம் ஞானத்தை அடைவதற்கு.*
*அதாவது மீண்டும் இந்த உலகில் நாம் பிறக்காமல் இருப்பதற்கும், அல்லது மீண்டும் இந்த உயர்ந்த மனிதப்பிறவி கிடைப்பதற்கும், உறுதுணையாக இருப்பது தான் இந்த கர்மாக்கள். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது கர்ப்பாதானம் முதல் அனைத்து சம்ஸ் காரங்களும்.*
*இதில் முதல் சம்ஸ்காரம் கர்ப்பாதானம் அப்படி என்றால் என்ன? ஆதானம் அதாவது புதியதாக எடுத்துக் கொள்வது. அக்கினியாதானம் என்று ஒன்று உண்டு. முறையாக மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருந்து எடுத்துக் கொள்வதற்குப் பெயர். அதாவது அக்னியை எடுத்துக் கொள்வது என்று அர்த்தம்.*
*அதேபோல்தான் கர்ப்பாதானம் என்றால், ஒரு பெண்ணை விவாகம் செய்துகொண்டு, உன்னுடைய ஆயுட் காலம் முடிய நான் பார்த்துக்கொள்கிறேன், உனக்கு வாழ்க்கையில் என்னென்ன தேவையோ அனைத்தையும் நான் கொடுக்கிறேன், என்று அக்னியையும், பல மகான்களையும், தேவதைகளையும், சாட்சியாகக் கொண்டு ஒரு பெண்ணை நாம் எடுத்துக் கொள்வதுதான் விவாகம் என்று பெயர். அந்த விவாகம் என்பது எதற்காக என்று சொல்கின்ற பொழுது, நல்ல சந்ததிகளை அடைவதற்காக என்று சொல்லப்பட்டிருக்கிறது.*
*அதுமட்டுமல்ல தர்மம் செய்வதற்கு நல்ல சந்ததிகளை அடைவதற்கு மோட்சத்தை அடைவதற்கு இந்த மூன்று பலன்களுக்கு தான் நாம் கல்யாணம் செய்து கொள்கிறோம் சங்கல்பம் செய்து கொள்கிறோம்.*
*தர்மம் என்றால் என்ன இந்த 40 சம்ஸ்காரங்கள் தான் தர்மம் என்று பெயர். இவைகளை செய்து கொள்வதற்கும் செய்து வைப்பதற்கும் நல்ல சந்ததிகளை அடைவதற்காகவும் மோக்ஷத்தை அடைவதற்காகவும் இந்த விவாகம் சொல்லப்படுகிறது. ஒரு பெண்ணினுடைய கர்ப்பத்தை நாம் எடுத்துக் கொள்கிறோம் ஒரு நல்ல சந்ததியை அடைவதற்காக. ஆகையினாலே தான் அதற்கு கர்ப்பாதானம் என்று சொல்கிறோம்.*
*_நம்முடைய ஒரு ஆசைக்காக அந்தப் பெண்ணின் கர்ப்பத்தில் ஒரு சிசுவை உற்பத்தி செய்து நாம் எடுத்துக் கொள்கிறோம். அதன் மூலம் நம்முடைய சந்ததிகளை நாம் அடைகிறோம். இதற்கு கர்ப்பாதானம் என்று பெயர். இது யாருக்கு என்று சொல்கின்ற பொழுது, புத்திரன் என்று யாருக்கு பிறக்க வேண்டுமோ, நல்ல குழந்தைகள் பிறக்க வேண்டும் நம்முடைய கடமைகளைச் செய்ய வேண்டும் ராம் கடனைத் தீர்த்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை யாருக்கு இருக்கிறதோ அவனுக்கு இந்த கர்ப்பாதானம் சொல்லப்பட்டிருக்கிறது._*
*_ஆசைக்காக என்று நினைக்கக் கூடாது. அதற்காக கர்ப்பாதானம் இல்லை ஒரு பெண்ணினுடைய சேர்க்கை என்பது ஆசைக்காக வா இல்லை. மிக உயர்ந்த ஒரு சம்ஸ்காரம் ஆகா சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாம் விளையாட்டாக போய்விட்டது இந்த நாட்களில். அப்படி கூடாது. வேதம் சொல்கின்ற பொழுது, ஒவ்வொருவரும் பிறக்கின்ற போதே மூன்று கடன்கள் உடன் தான் பிறக்கிறோம் தேவ கடன், ரிஷி கடன், பிதுர் கடன் என்று மூன்று கடன்கள்._*
*ஒரு ஜீவன் உற்பத்தியாகின்ற பொழுது இந்த மூன்று பேருடைய துணைகளால் தான் நாம் இந்த உலகத்தில் வந்து பிறக்கிறோம். இந்த உடல் நல்ல எண்ணங்கள் நல்ல குடும்பம் இவர்கள் எல்லாம் இந்த மூன்று பேருடைய அனுக்கிரகத்தினால் தான் கிடைக்கிறது. அந்தக் கடனை நாம் தீர்க்க வேண்டும்.*
*எப்படி தீர்ப்பது என்றால், ஒழுக்கத்தோடு இந்த உலகத்தில் வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய தான படிப்பை அடைந்து, நமக்கு என்று சொல்லப்பட்ட கர்மாக்களை செய்வதன்மூலம், ரிஷிகளின் உடைய கடன் தீர்கிறது. யஞ்யங்கள் செய்வதானாலும், செய்து வைப்பதினாலும் தேவதைகளின் உடைய கடன்கள் தீர்கிறது. யஞ்யங்கள் நிறைய இருக்கின்றன அவைகள் என்னென்ன என்பதை பின்னால் பார்க்கலாம். நல்ல சந்ததிகளை நாம் அடைவது நாலே, பித்ருக்கள் கடன் தீர்கிறது. சந்ததிகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிரஜாஹா சந்ததிகள் என்று அர்த்தம்.*
*அது ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ, எந்த குழந்தையாக இருந்தாலும் சந்ததிகள் என்று பெயர். இந்த மூன்றும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நடக்கவேண்டும். அதாவது ஒழுக்கமாக வாழவேண்டும் நல்ல படிப்பை படிக்க வேண்டும். நமக்கு என்று சொல்லப்பட்ட கர்மாக்களை செய்ய வேண்டும். யாகங்கள் செய்ய வேண்டும். நல்ல சந்ததிகளை அடைய வேண்டும். வேதம் இதை நமக்கு காண்பிக்கிறது.*
*இது விஷயமாக தர்மசாஸ்திரம் நிறைய தகவல்களை நமக்குச் சொல்கிறது. வசிஷ்டர் சொல்கின்ற பொழுது, ஒருவனுக்கு சுத்தமாக கடன்கள் தீர வேண்டுமென்றால், அதில் முக்கியமாக செய்ய வேண்டியது சந்ததிகள் ஏற்பட வேண்டும். குழந்தை என்று பிறந்து அதனுடைய முகத்தை நாம் பார்ப்பதினாலேயே கடன் தீர்வது மட்டுமல்ல தேவதைகள் மிகவும் சந்தோஷப் படுகிறார்கள்.*
*_தேவதைகளின் அனு கிரகத்திற்கு நாம் பாத்திரம் ஆகிறோம் என்று வசிஷ்டர் சொல்கிறார். அப்படி அந்த அளவுக்கு முக்கியம் சந்ததிகளை நாம் அடைவது. அப்படி இந்த நல்ல சந்ததிகளை அடைவதற்கு ஆரம்பம் தான் இந்த கர்ப்பாதானம் என்கின்ற சம்ஸ்காரம். மேற்கொண்டு அடுத்த உபநிஷத்தில் பார்ப்போம்._*