Post by kgopalan90 on May 29, 2019 13:14:00 GMT 5.5
மனம் தடுமாறி தீய வழியில் செல்லாமல் இருக்க ஜீவ நாடியில் அகத்திய பெருமான் கூறும் வழி !
மனம் தடுமாறாமல் இருக்க, மனம் சபலத்தில் ஆழாமல் இருக்க, மனம் சாத்வீக எண்ணங்களோடு இருக்க ஸ்ரீ ராம நாமத்தை ஜபிக்கலாம். ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம். பஞ்சாக்ஷரத்தை ஜபிக்கலாம். அஷ்டாக்ஷரத்தை ஜபிக்கலாம். இவையனைத்தும் சிறப்புதான். எதுவும் ஒன்றுக்கொன்று குறைவில்லை. இஃதோடு இன்னமும் சிறப்பாக மனம் அடங்குவதற்கு உச்சிஷ்ட மகாகணபதியின் மூல மந்திரத்தை அன்றாடம் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் தொடர்ந்து உருவேற்றிக்கொண்டே வந்தால், மனம் சலனங்களுக்குள் ஆட்படாமல் இருப்பதற்கு, நல்லதொரு நிலையை நோக்கி செல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். இது பக்தி வழி.
பக்தியை ஏற்றுக்கொள்ளாத மனிதருக்கு அறிவுபூர்வமாகக் கூறுவதென்றால் ஒரு செயலை செய்யும்பொழுதோ அல்லது ஒரு எண்ணத்தை எண்ணும்பொழுதோ, அவன் எப்படி சிந்திக்கவேண்டும் ? என்றால், உதாரணமாக ஒருவன் ஒரு எண்ணத்தை எண்ணுகிறான். ‘ இது வெறும் எண்ணம்தானே ? செய்தால்தானே பாவம். செய்தால்தானே தவறு. அதனால் பிறருக்கு பாதிப்பு வரப்போகிறது. மனதில்தானே எண்ணுகிறோம் ‘ என்று அவன் எண்ணுவதாகக் கொள்வோம். அதே எண்ணத்தை பிறர் எண்ணினால் அதை நியாயம் என்று இவன் ஏற்றுக்கொள்வானானால், இவன் அதை தாராளமாக எண்ணலாம்.
இன்னொன்று. சிலர், சில செயல்களை செய்துவிட்டு ‘ என்ன செய்வது ? எனக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டுவிட்டேன் ‘ என்று தனக்குத்தானே சமாதானம் கூறுவார்கள் அல்லது ‘ என் விதி, என் கிரக நிலை, என் திசாபுத்தி, அதனால் இப்படி செய்துவிட்டேன் ‘ என்று சாமர்த்தியமாகக்கூட பேசலாம். நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். விதிதான், அவனுடைய சூழ்நிலைதான் வாய்ப்பைத் தந்தது என்று. ஆனால் அதே செயலை மற்றவர்கள் செய்தால் அவன் ஏற்றுக்கொள்வான் என்றால் தாராளமாக அவன் அதனை செய்யட்டும். இப்படி அறிவுபூர்வமாக ஒன்றை சிந்தித்துப் பார்த்து, ‘ இந்த எண்ணம் நன்மையா ? தீமையா ? இந்த செயலை நாம் செய்கிறோமே, யாரும் பார்க்கவில்லை என்று ?. இதே செயலை நம் வாரிசுகள் செய்தால், நம் சகோதர, சகோதரிகள் செய்தால் இதை நியாயம் என்று ஒத்துக்கொள்வோமா ? ஆதரிப்போமா ? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும் . இது ஒரு நிலை.
அடுத்த்தாக ஞான நிலை என்று பார்த்தால், இதுபோன்ற செயலால் இறையருள் கிட்டப்போகிறதா ? அல்லது இறை தரிசனம் கிடைக்கப்போகிறதா ? உலகியல் ரீதியாக இதனால் ஆதாயம் உண்டா ? அல்லது குறைந்தபட்சம் தன் ஆன்மாவிற்கு ஆதாயம் உண்டா ? இதனால் தீய பின்விளைவுகள் என்னென்ன ஏற்படும் ? இந்த விளைவுகள் ஒரு மனிதனை எந்த வகையில் பாதிக்கும் ? இந்த செயலை செய்தால் என்னென்ன சாதகங்கள் ? செய்யாமலிருந்தால் என்னென்ன நன்மைகள் ? செய்வதால் ஒரு கணம் அல்லது ஒரு நீர்த்துளி அளவு காலம் ஒரு மனிதனுக்கு இன்பத்தை தரலாம். ஆனால் அதனால் ஆண்டாண்டிற்கு, ஆன்ம முன்னேற்றத்திற்கு எஃதாவது லாபம் இருக்கிறதா ? என்று பார்க்கவேண்டும். எப்படி பள்ளத்தைக் கண்டால் நீர் ஓடுகிறதோ, அப்படிதான் மனம் எப்பொழுதும் ஏற்கனவே பல பிறவிகள் எடுத்து, எடுத்து நுகர்ந்த ஒன்றை நோக்கிதான் செல்லும். மனம் இயல்பாகவே நல்லவிதமாக இருந்துவிட்டால் எல்லோருமே யோகியர், ஞானியர் ஆகிவிடுவார்கள். குழந்தையாய் இருக்கும்பொழுதே எழுதவும், படிக்கவும் கூடிய அறிவோடு பிறந்துவிட்டால் எதற்கு வித்தைக்கூடம் ? எதற்கு கல்விக்கூடம் ?
முயற்சி எடுத்துதான் குழந்தை தன் அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அங்கே அறிவு இருக்கிறது. அந்த அறிவிலே எதை, எதையெல்லாம் ஏற்றி வைக்கவேண்டும் என்ற நியதி இருக்கிறது. அந்த நியதியை மனிதன் நல்விதமாக ஏற்றி வைக்கிறான். அதை வைத்துக்கொண்டு பின்னால் அது செயல்படுகிறது. அப்படி ஏற்றும்பொழுது எதையெதை ஏற்றவேண்டும் ? என்று பார்க்கவேண்டும். இரும்பினால் செய்யப்பட்ட வாகனத்திலே எரிபொருள் நிரப்புகின்ற மனிதன், எரிபொருளுக்கு பதிலாக நீரை ஊற்றுவானா ? நீரை ஊற்றினால் என்னவாகும் ? என்று தெரியும் அவனுக்கு.
ஆக அஃறிணை பொருளான வாகனத்திலேயே அதற்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் மனிதன் தருகிறான். அதைவிட பலமடங்கு உயர்திணையாக இருக்கின்ற மனிதனுக்கு எது தேவையோ அதைத்தானே அவன் தனக்கு செய்துகொள்ளவேண்டும் ? அந்த கணம் இன்பமாக இருக்கிறது என்பதற்காக தேவையற்றதை செய்து நிரந்தர துன்பத்தை எதற்காக வரவழைத்துக் கொள்ளவேண்டும் ? அல்லது சுருக்கமாக ‘ இந்த செயல் எனக்கு பிடித்திருக்கிறது. நான் இப்படித்தான் செய்வேன். இதனால் எனக்கு மனதிலே மகிழ்ச்சி ஏற்படுகிறது ‘ என்றால் தாராளமாக செய்யட்டும். ஆனால் ஒரு நிபந்தனை. அதே செயலை அவன் பிள்ளை செய்தால் அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவன் மனைவி செய்தால் அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அவன் சகோதர, சகோதரிகள், உற்றார்கள் செய்தால் அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த மனோ நிலைக்கு வந்துவிட்டால் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் செய்யட்டும். தான் செய்கின்ற ஒரு செயலை பிறர் செய்தால் அதை அருவருப்பாகவோ, கேவலமாகவோ, ஏளனமாகவோ பார்க்கக்கூடிய மனிதன், அதே செயலை தான் செய்யும்பொழுது மட்டும் நியாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம் ? என்பதை ஞான ரீதியாக சிந்தித்துப் பார்த்தால் தவறுகளும், சலனங்களும், சபலங்களும் ஒரு மனிதனை விட்டு மெல்ல, மெல்ல விலகத் துவங்கும்.
ஸ்ரீ ராம நாமம்:
ஸ்ரீராமஜெயம்
ஜெய் ஸ்ரீராம்
ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்:
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்
பஞ்சாக்ஷரம்:
ஒம் நமசிவாய
அஷ்டாக்ஷரம்:
ஓம் நமோ நாராயணாய
உச்சிஷ்ட கணபதி மூல மந்திரம் :
ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய, லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரோம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா