Post by radha on Feb 26, 2015 10:00:32 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:, RESHPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
பிரம்ம முகூர்த்தம்
By - ராதா கோபாலன்
DINAMANI PAPER---SOURCE
பொழுது புலராத முன்பு பூமியில் சப்தங்கள் குறைவாக இருக்கும். நிசப்தம் எங்கும் பரந்து இருக்கும் இவ்வேளையே தியானம் செய்ய மிகவும் அருமையான நேரம். அதிகம் சலனமில்லாது இருக்கும் நம் மனமும் எளிதில் வசப்படும். ஆனால் பகலில் சப்தங்களிடையே மனதை நிலை நிறுத்துவது இயலாத காரியம். விடியற்காலை நேரம், கடவுளை நினைத்து மனமொன்றி இருக்க ஏற்றது. இந்த வேளையில் படித்தால் மனதில் நன்கு பதியும். அதிக முயற்சி இல்லாமல் நினைவு வைத்துக் கொள்ளலாம்!
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்றால், முந்திய இரவு ஆகாரம் மிதமாக இருக்க வேண்டும். சரியான வேளையில் சாப்பிட வேண்டும். அலாரம் மணி அடித்து எழுந்த பிறகு, மேலும் சுழலும் தூக்கத்தோடு இருக்கக் கூடாது. அதிகாலையில் எழும் மனம் உடையவர்களுக்கு சோம்பல் கிட்டே நெருங்காது. நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இருப்பர். காலையில் பல்
தேய்த்த பின், ஒரு தம்ளர் தண்ணீர் அருந்துவது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். ஆயுளை விருத்தி செய்யும். கிழத்தன்மையை நீக்கும். கடவுள் பெயரை நினைத்துக் கொண்டே காரியங்களை தொடர்ந்தால் அந்தக் காரியம் பலிதமடைவது நிச்சயம்.
காலையில் எழுந்ததும் இன்றைய தினம் எல்லாம் நல்லபடியாக அமையவேண்டும் என்று மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும். அமைந்ததாக எண்ண வேண்டும். நாம் தியானம் செய்ய இந்தப் பயிற்சியே முதல் படியாக உதவும். காலையில் கடமைகள் ஒவ்வொன்றாக ஆற்றிவரும் போதே, கடவுளை மனதில் நினைத்தப்படி செய்வதால் அச்செயல்கள் சிறப்பாக நடக்கும். இந்த சிந்தனையால் நமது பல சங்கடங்களும்
தீரத்துவங்கும். நமது கவலைகளின் கூர்மையான முட்கள் கட்டாயம் அகற்றப்படும்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் கோபம், வெறுப்பு, எரிச்சல், எதுவுமே நம்மை அண்ட விடக்கூடாது. ஏனெனில் அது
அதிகாலைப் பயனைக் கெடுத்து விடக்கூடும். எனவே மனதை லேசாக வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருப்பதாக மனதிற்குள் உணர வேண்டும். சுத்தமான காற்று இருக்கும் அதிகாலைப் பொழுதில் வெளியே நடந்து செல்வதால், காலைக்குளிர் மென்மையாக நமது உடலைத் துவட்டிவிட்டு, சுறுசுறுப்பை உண்டாக்கி நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும்.
நிம்மதியின் அறிகுறியான புன்னகை நமக்கு பல நன்மைகள் தரும். அதனால் பிரம்ம முகூர்த்த வேளையில் நம் செயல்களைத் துவக்கினால், வாழ்க்கையில் நாம் அனைவருமே வெற்றியாளர்கள்தான்!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL