Post by radha on Nov 10, 2019 16:17:08 GMT 5.5
இரட்டைச் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும் !
பழந்தமிழ்..
From my friend Capt./ Major. LOKANATHAN
தினமும் கூறப்படும் இரட்டைச் சொற்களும் அவற்றின் அர்த்தங்களும்:
*குண்டக்க மண்டக்க.*
குண்டக்க- இடுப்புப் பகுதி. மண்டக்க-தலைப் பகுதி.
சிறுவர்கள் கால்பக்கம், தலைப்பக்கம் பார்க்காமல் தூங்குவார்கள். அதுபோல் வீட்டில் பொருள்கள் சிதறி,மாறி இருத்தலே குண்டக்க மண்டக்க என்று பொருள்.
*அக்குவேர் ஆணிவேர்.*
அக்குவேர் செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர். ஆணிவேர் செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் உறுதியான வேர்.
*அரை குறை*
அரை ஒரு பொருளில் சரிபாதி அளவு. குறை அந்த சரி பாதியளவில் குறைவாக உள்ளது குறை. (உ-ம்.)அரை குறை வேலை.
*அக்கம்பக்கம்.*
அக்கம் தன் வீடும், தான் இருக்கும் இடமும். பக்கம் பக்கத்து வீடும் பக்கத்தில் உள்ள இடமும்.
*கார சாரம்*
காரம் உறைப்புச் சுவை. சாரம்-சார்ந்தது.(காரம் சார்ந்த பிற சுவைகள்)
*இசகு பிசகு.*
இசகு தம் இயல்பு தெரிந்து, ஏமாற்றுபவனிடம் ஏமாறுதல்.
பிசகு தம்முடைய அறியாமையால் ஏமாறுதல். (உ-ம் )இசகு பிசகாக மாட்டிக் கொண்டார்.
*இடக்கு முடக்கு*
இடக்கு எள்ளி நகைத்தும், இகழ்ந்தும் பேசுதல்.
முடக்கு கடுமையாக எதிர்த்தும், தடுத்தும் பேசுதல்.
*ஆட்ட பாட்டம்*
ஆட்டம் தாளத்திற்குப் பொருந்தியோ பொருந்தாமலோ ஆடுவது. பாட்டம் ஆட்டத்திற்குப் பொருந்தியோ பொருந்தாமலோ பாடுவது..
*தோட்டம் துரவு*
தோட்டம் செடி,கொடி கீரை பயிரிடப்படும் இடம்.தோப்பு-மரங்களின் தொகுப்பு. துரவு--கிணறு.
*பழக்க வழக்கம்.*
பழக்கம் ஒருவர் ஒரு செயலைப் பல காலம் செய்து வருவது.
வழக்கம் பலர் ஒரு செயலைப் பல காலம் கடைபிடித்து வருவது.(மரபு)
*சத்திரம் சாவடி.*
சத்திரம் இலவசமாக சோறு போடும் இடம்(விடுதி). சாவடி இலவசமாக தங்கும் இடம்(விடுதி
*பற்று பாசம்.*
பற்று நெருக்கமாக உறவாடி இருத்தல். பாசம் பிரிவில்லாமல்
சேர்ந்தே இருத்தல்.
*ஏட்டிக்குப் போட்டி.*
ஏட்டி விரும்பும் பொருள் அல்லது செயல். (ஏடம்--விருப்பம்.)
போட்டி விரும்பும் பொருள் அல்லது செயலுக்கு எதிராக வரும் ஒன்று.
*கிண்டலும் கேலியும்.*
கிண்டல் ஒருவன் மறைத்தச் செய்தியை அவன் வாயில் இருந்தே பிடுங்குதல்.(கிண்டி தெரிந்து கொள்ளுதல்). கேலி எள்ளி நகையாடுதல்.
*ஒட்டு உறவு.*
ஒட்டு இரத்தச் சம்பந்தம் உடையவர்கள்.(தாய்,தந்தை, உடன் பிறந்தவர்கள், மக்கள்) உறவு பெண் கொடுத்த அல்லது பெண் எடுத்த வகையில் நெருக்கமானவர்கள்.
*பட்டி தொட்டி.*
பட்டி மிகுதியாக ஆடுகள் வளர்க்கப்படும் இடம்(ஊர்). தொட்டி மாடுகள் மிகுதியாக வளர்க்கப்படும் இடம்(ஊர்).
*கடை கண்ணி.*
கடை தனித்தனியாக அமைந்த வியாபார (வணிக)நிலையம். கண்ணி தொடர்ச்சியாக கடைகள் அமைந்த கடைவீதி
*பேரும் புகழும்.*
பேர் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பும் பெருமையும். புகழ் வாழ்விற்குப் பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை.
*நேரம் காலம்.*
நேரம் ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக (Time) அமைந்த பொழுது.
காலம் ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் எடுத்துக் கொள்ளும் கால அளவு நிலை.
*பழி பாவம்.*
பழி நமக்குத் தேவையில்லாத, பொருந்தாத செயலைச் செய்ததால், இப்பிறப்பில்
உண்டாகும் பழிப்பு. பாவம் தீய செயல்களைச் செய்ததால் மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் தீய நிகழ்வுகள்.
*கூச்சலும் குழப்பமும்.*
கூச்சல் துன்பத்தில் சிக்கி உள்ளோர் போடும் அவல ஒலி (ஓலம்).கூ--கூவுதல். குழப்பம் --அவல ஒலியைக் கேட்டு அங்கு வந்தவர்கள் போடும் இரைச்சல்..
*நகை நட்டு.*
நகை பெரிய அணிகலங்களைக் குறிக்கும்.(அட்டியல்,ஒட்டியாணம்,சங்கிலி). நட்டு சிறிய அணிகலன்களைக் குறிக்கும். (திருகு உள்ள தோடு,காப்பு,கொப்பு).
*பிள்ளை குட்டி.*
பிள்ளை(பொதுப்பெயர்) இருப்பினும் ஆண் குழந்தையைக் குறிக்கும். குட்டி இது பெண் குழந்தையைக் குறிக்கும்.
*வாட்ட சாட்டம்.*
வாட்டம் வளமான தோற்றம்,வாளிப்பான உடல் , அதற்கேற்ப உயரம். சாட்டம் உடல் (சட்டகம்),வளமுள்ள கனம்.தோற்றப் பொலிவு.
*காய்கறி.*
காய் காய்களின் வகைகள். கறி(சைவஉணவில் ) கறிக்கு உபயோகப்படுத்தப்படும் கிழங்கு வகைகளும்,கீரை வகைகளும்.
*கால்வாய்-வாய்க்கால்*
வாய் குளம்.கால்வாய் குளத்திற்கு தண்ணீர் வரும் கால்.(பாதை).வாய்க்கால்—குளத்திலிருந்து தண்ணீர் செல்லும் கால்.(பாதை) பாதை என்பது நீர்வழிப்பாதையைக் குறிக்கும்.
*ஈவு இரக்கம்.*
ஈவு--(ஈதல்).கொடை வழங்குதல். இரக்கம்---(அருள்). பிற உயிர்களின் மேல்
அருள் புரிதல்.
*பொய்யும் புரட்டும்.*
பொய்---உண்மை இல்லாததைக் கூறுவது. புரட்டு-- ஒன்றை நேருக்கு மாறாக
மாற்றி ,உண்மை போல் நம்பும்படியாகக் கூறுவது.
*சூடு சொரணை.*
சூடு--ஒருவர் தகாத சொல்லைப் பேசும் போது தகாத செயலைச் செய்யும் போது நமக்கு ஏற்படும் மனக்கொதிப்பு (மனவெதுப்பு,எரிச்சல்). சொரணை--நமக்கு ஏற்படும் மான உணர்வு.
*பட்டம், விருது.*
பட்டம்-- கல்லூரி , பல்கலைக்கழகம் இவற்றில் படித்துப் பெறுவது. பெயருக்குப் பின்னால் இடம் பெறும்.