மஹாபெரியவா தசகம்
1. கண் கண்ட தெய்வமே போற்றி
கருணை கடலே போற்றி போற்றி
காஞ்சி கண்ட ஜகத்குருவே போற்றி
காமகோடி பீடாதிபதியே போற்றி போற்றி
2. நலிந்தோர்க்கருளிய நாயகா போற்றி
நான்மறை வளர்த்த நாதா போற்றி போற்றி
அருள்தரும் அக்ஷயபாத்திரமே போற்றி
அன்பின் உருவமே போற்றி போற்றி.
3.இன்னமுதாய் அறிவுரை தந்த குருவே போற்றி
இன்னல்கள் தீர்த்த இறைவா போற்றி போற்றி
எல்லாமறிந்த ஞானக்கடலே போற்றி
ஏக்கம் தவிர்த்த ஏகாம்பரரே போற்றி போற்றி
4.சங்கடங்கள் தீர்த்த சங்கரா போற்றி
சதுர்வேத நாயகா போற்றி போற்றி
தெய்வத்தின் குரலாய் ஒலித்தாய் போற்றி
தெளிவாய் அறிவுரை தந்தாய் போற்றி போற்றி
5.நாடெலாம் நடந்த நற்பாதம் போற்றி
பதம் தாங்கிய பாதுகையே போற்றி போற்றி
அருள்தர ஓங்கிய கரம் போற்றி
கரம் தாங்கிய தண்டம் போற்றி போற்றி
6.கலைகள் யாவும் அறிந்தாய் போற்றி
மறைகள் நான்கும் வளர்த்தாய் போற்றி போற்றி
வேதம் பயிலவழிவகுத்தாய் போற்றி
நாதகீதம் ஒலிக்க செய்தாய் போற்றி போற்றி
7.கோசம்ரக்ஷக கோவிந்தா போற்றி
ஞானபண்டித சங்கரா போற்றி போற்றி
கருணை வடிவான காமாக்ஷி போற்றி
வரமழை பொழி வரதா போற்றி போற்றி
8.அறிவிலாதார் கண்திறந்தாய் போற்றி
அறிஞருக்கும் அறிவளித்தாய் போற்றி போற்றி
அருள்மழை முகிலே போற்றி
அச்சம் தீர்த்த அருளாளா போற்றி போற்றி
9.கனவிலும் தோன்றி காப்பாய் போற்றி
காலனையும் தடுத்த காவலா போற்றி போற்றி
கடல்கடந்தோர்க்கும் கருணைக்கடலை போற்றி
கண்காணா காக்ஷிகள் காட்டினாய் போற்றி போற்றி
10.புதைந்த ஆலயங்கள் புதுப்பித்தாய் போற்றி
புவிகாக்கவந்த புண்ணியா போற்றி போற்றி
உடல்நீத்தும் உலகெலாம் நிறைந்தாய் போற்றி
உள்ளம் நிறைந்து இன்றும் உள்ளாய் போற்றி போற்றி
அருள்தரும் தெய்வத்தின் குரலே போற்றி
ஆதிசங்கர அவதார புருஷா போற்றி போற்றி
காஞ்சிகாமகோடி பீடாதிபதியே போற்றி
ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஜகத்குருவே போற்றி போற்றி
Attachments:
periya in mena pic.bmp (489.31 KB)